கேள்விகளும் பதில்களும் QUESTIONS & ANSWERS COD #2 ஜனவரி 3, 1954 பிரான்ஹாம் கூடாரம்,ஜெபர்ஸன்வில், இந்தியானா, அமெரிக்கா 1. அது எங்கே என்று எனக்குத் தெரியாது. ஒருவேளை அவர்கள் அதை எழுதியிருக்க மாட்டார்கள். "ஏசாயா 4:24'' என்று அவர்கள் கூறியிருந்தனர். இப்பொழுது, ஏசாயா 4-ஆம் அதிகாரத்தில் ஆறு வசனங்கள் தான் உள்ளன. ஆகவே நான்... நீங்கள் ஏசாயா 3:24 என்று கூற முனைந்தீர்களா என்பது எனக்குத் தெரியாது. அது (கேள்வி -தமிழாக்கியோன்) "அந்த வேத வசனத்தின் அர்த்தம் என்ன, அது எப்பொழுது நிறைவேறும், ஏசாயா 4:24?'' என்று உள்ளது. ஏசாயா 4-ஆம் அதிகாரத்தில் ஆறு வசனங்கள் தான் உள்ளன. ஒருவேளை நீங்கள். இதை எழுதியவர் யாராக இருப்பினும் நீங்கள் சிந்தித்து மறுபடியும் எழுதி என்னிடம் அளிக்கலாம், பாருங்கள். நீங்கள் எதைக் குறித்துக் கேட்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை, "ஏசாயா 4:24, அந்த வேத வசனத்தின் அர்த்தம் என்ன, அது எப்பொழுது நிறைவேறும்?'' 2. இப்பொழுது, உங்களை நான் நீண்ட நேரம் வைத்திருக்க மாட்டேன். நான் ஒரு... அது சரி, உமக்கு நன்றி, சகோதரனே. நான் செல்ல வேண்டிய இடங்கள் அநேகம் உண்டு. நீங்கள் அறிவீர்கள், நான் சிந்தித்துக்கொண்டிருந்தேன், ஒரு வேதவசனத்தை இங்கே வைத்திருந்தேன்... என்னை மன்னிக்கவும், சகோ.பாக்ஸ்டரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. இக்காலை ஆராதனையை ஆரம்பிக்கும் முன்பு நீங்கள் என்னுடன் சேர்ந்து சிறிது நேரம் ஜெபம் செய்ய நான் விரும்புகிறேன். 3.ஆராதனைகள் முடிந்த பிறகு, இன்னும் சிறிது நாட்கள் கழித்து, அயல் நாடுகளில் ஆராதனை நடத்த வேண்டும் என்கின்ற நல்எண்ணத்தோடு நான் இருக்கிறேன். சகோ. பாக்ஸ்டரிடமிருந்து இப்பொழுது ஒரு கடிதத்தைப் பெற்றேன். சகோ. காக்ஸ் நேற்றிரவு தொலைபேசியின் மூலம் அதை எனக்கு படித்துக் காட்டினார். இன்று காலை அவர் அதை என்னிடம் அளித்தார். அவர்கள் அதைத் தள்ளி வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள். நான் செல்லாதவாறு சாத்தான் தடை செய்கின் றானா, அல்லது சமயம் வாய்க்கத்தக்கதாக தேவன் காத்துக் கொண்டிருக்கின்றாரா என்பது எனக்குத் தெரியாது. அவர்கள் அதை சிறிது தள்ளி வைக்க விரும்புகிறார்கள், அக்டோபர் முதல் அவர்கள் அதைத் தள்ளி வைத்துக் கொண்டுள்ளனர். அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி சுமார் நான்கு மாதங்களாக அவர்கள் அதைத் தள்ளி வைத்தனர். 4. ஆகவே தரிசனமானது இப்பொழுது வந்தது. சரியாக என்ன நடக்கப் போகிறது என்பது என் வேதாகமத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ளது; ஆனால் எப்பொழுது என்பது எனக்குத் தெரியாது. இப்பொழுது, என்ன சமயத்தில் நிகழப் போகிறது என்பதைக் குறித்து தயாராகும்படி மக்கள் என்னிடம் என்ன கூறுகின்றனரோ (நல்ல விசுவாசத் துடன்) நான் அதை அவர்களுக்கு அப்படியே சொல்லுவேன். 5. இப்பொழுது, நான் அதைக் குறித்து உண்மையாயில்லை என்று மக்கள் நினைக்கின்றார்கள் என்பது எனக்குத் தெரியும். "ஓ, என்ன... அப்பொழுது அவர்... எப்பொழுது அவர் போகப் போகிறார்?" 6. எனக்கு வரும் கடிதங்கள் இவ்வாறு எனக்குக் கூறுகின்றன, "நல்லது, நீங்கள் அதை இன்னுமாய்ச் செய்ய முடியவில்லை, இதைச் செய்தாக வேண்டும், இதைச் செய்தாக வேண்டும்.” அப்படியானால் நான்... மக்களைச் சந்திக்கையில் எனக்கு சற்று கடினமாகத் தோன்றுகிறது, என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒரு காரியத்தை மாத்திரம் செய்வேன்; நீங்கள் எல்லாரும் என்னுடன் இருக்கின்றீர்கள்; அதை நான் தேவனிடத்தில் ஒப்புக்கொடுத்து, ''இப்பொழுதும் கர்த்தாவே, நீர் தயார் என்றால், நானும்" என்று கூறுவேன். பாருங்கள்? ஆகையால் நான். . . 7. சில சமயங்களில் சபையால் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலவில்லை. இப்பொழுது விசா அல்லது ஏதோ ஒன்று, அதைப் போன்ற காரியங்கள் இருக்கும் என்று நீங்கள் அறிவீர்கள். சாத்தான் அதைச் செய்ய முற்படுவான். ஆகையால் இக்காலை வேளையில் நாம் ஜெபிக்கையில்... வாரம் முழுவதும் நீங்கள் ஜெபம் செய்யும் போது ஒவ்வொரு முறையும் எனக்காக ஜெபித்து தேவனிடம்... அது சாத்தானின் காரியமாயிருந்தால் அதைப் பாதையிலிருந்து அப்புறப்படுத்திப் போடும்படி ஜெபியுங்கள். பாருங்கள்? அது அவருடைய சித்தமாய் இருக்கும் பட்சத்தில் அவர் இங்கேயே என்னை நிறுத்தட்டும். பாருங்கள்? சரியாக என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் அறிவார். அவர் வேறொரு காரியத்தின் மூலம் கிரியை செய்து காரியங்களைச் சரி செய்வார். ஆகையால் அவரை முந்திச் செல்ல எனக்கு ஒரு போதும் பிரியமில்லை, ஓ! நீ அதைச் செய்வாயானால் அது பயங்கரமாக ஆகிவிடும். பாருங்கள்? ஆகவே நான்- நான் உணருகிறேன்... அது ஒருக்கால் என்ன கூற வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை, ஏனென்றால் எனக்கு ஒன்றும் தெரியாது. 8. நம்முடைய அருமை சகோதரன், ஜார்ஜர் ரைட் போல. அவருடைய நிலைமைகள் என்ன என்பது உங்களில் அநேகருக்குத் தெரியுமா? டாக்டர்கள் அவரை கைவிட்டு விட்டார்கள். ஒரு வாரம் அல்லது அதற்கு முன்பாக சகோதரன் ஜார்ஜ் ரைட் மரித்துப் போயிருக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்களா, பாருங்கள். நான் அங்கே சென்று எனக்கு எப்படியெல்லாம் முடியுமோ அவ்வாறு தான் உத்தமமாய் அவருக்காக ஜெபித்தேன். நான் வீடு திரும்பி என்ன நடக்கும் என்று வியந்துக் கொண்டிருந்தேன். நான்-நான் சிறிது நாட்கள் கழித்து, கடந்த திங்களன்று ஒரு தரிசனத்தைக் கண்டேன், நான் காத்துக் கொண்டிருக்கிறேன். , . 9. இப்பொழுது கான்சர் வியாதியை உடைய ஒரு பெண் அங்கே இருக்கிறாள். அவளுக்காக நான் ஜெபம் செய்தேன். அவள் அங்கு நிற்கிறதை நான் காண்கிறேன். அவளுக்கு ஆபரேஷன் செய்ய அவன் உடலைத் திறந்து பார்த்தார்கள், அவள் உடல் முழுவதும் கான்சர் வியாதியால் நிறையப்பட்டு இருந்தது. ஆகையால் அவளை மறுபடியும் தைத்து விட்டார்கள். பாருங்கள்? ஆனால் அவள் உயிர் வாழப் போகின்றாள். அது எனக்கு தெரியும். 10. ஆனால் இப்பொழுது, சகோ.ஜார்ஜ் ரைட் அவர்களைக் குறித்து சரியான தரிசனம் எனக்குக் கிடைக்கவில்லை. நான் வருகையில்... அதே தரிசனம், நான் வெளியே வந்துக் கொண்டிருந்தேன். நான் அவருடைய- அவருடைய இடத்தை, அவருடைய வீட்டைப் பார்த்தேன். அவருடைய வீட்டின் இடது பக்கத்தில் மரங்கள் இருந்தன; அதன் மேலாக ஏறக்குறைய என் கைமூட்டு அளவிற்கு மணல் கட்டிகள் உருண்டு சென்று கொண்டிருப்பதைக் கண்டேன். என் அருகில் நின்று கொண்டிருந்த அந்த துாதன், ஒரு கல்லறையைப் பற்றியும் சகோ.ஜார்ஜ் அவர்களைப் பற்றியும் கூறக்கேட்டேன். 11. இப்பொழுது, அது சகோ.ஜார்ஜின் கல்லறைக் குழியை தோண்டுகிறார்கள் என்பதாக இருக்கும் அல்லது, அது எனக்கு என்னவென்று தோன்றுகிறது என்றால், இப்பொழுது நினைவு கொள்ளுங்கள். நான் இதைக் கூறமாட்டேன், ஏனெனில், நம்மிடையே ஒலிப்பதிவு செய்யும் கருவி இங்கும் அங்கும் அசைந்து கொண்டு இருக்கிறது என்று நான் நம்புகின்றேன். இப்பொழுது அவர்களுக்குச் செய்தது போல, இதையும் தெளிவாக்கிக் கூற நான் விரும்புகிறேன். நான் நினைக்கிறேன்... 12. அங்கே ஒரு கூட்ட மக்கள் சிரித்து அவரைக் கேலி செய்து கொண்டு இருந்தனர். ஏனென்றால் டாக்டர் அப்படி கூறியுள்ளார் என்ற போதிலும்... தேவன் தன்னை சுகமாக்குவார் என்று அவர் விசுவாசித்துக் கொண்டிருந்தார், நல்லது, பாருங்கள் இரத்தக் கட்டிகளானது அவருடைய நுரையீரல்களுக்குள் சென்று விட்டது. அவர் இரத்த வாந்தி எடுத்தார், இன்னும் மற்ற காரியங்கள். ''ஒரு சிறு அணு அளவிற்கு கூட அது அவருடைய இருதயத்திற்கோ அல்லது தலைக்கோ சென்றால் அது அவருக்கு பக்கவாதத்தை ஏற்படுத்தி விடும் அல்லது அவரை கொன்று விடும்'' என்று அவர் கூறியுள்ளார். பாருங்கள்? குறிக்கப்பட்ட நாட்களுக்கு மேலாக, அவர் 72 வயது உடையவராய் உள்ளார். 13. ஆனால் அதை தான் இவ்வாறு விசுவாசிக்கிறேன். அதாவது அவர், அவரைக் கேலி செய்கின்றவர்களில் யாராவது ஒருவருடைய கல்லறைக் குழியை தோண்டுவார் என்று விசுவாசிக்கிறேன். இப்பொழுது, அவர் குழி வெட்டுபவர் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவர் குழி வெட்டுபவராய் இருக்கிறார். நான்... நீங்கள் பாருங்கள்? அவர்களுடைய குழிகளை அவர் வெட்டுகிறார் என்று நான் நினைத்தேன், அதைத்தான் அவர் செய்கிறார். அது ஒரு கல்லறையை குறித்து இருந்தாற்போல் காணப்பட்டது. சகோதரன் ஜார்ஜ் ரைட் கல்லறையைத் தோண்டுவது அல்லது அதைப் போன்ற ஒன்று. 14, அவருக்கு விருப்பமானால் அதைத் திரும்பவும் எனக்குக் காண்பிக்கும்படி, நான்கு இரவுகளாக தான் கர்த்தரிடம் கேட்டிருக்கிறேன். காலை 7 அல்லது 8 மணியளவில் எனக்கு அது வந்தது (தரிசனம் - தமிழாக்கியோன்). ஆகவே அதை அவர் எனக்கு தெளிவாக்குவார் என்று நான் நம்புகிறேன். ஆனால் என் முழு இருதயத்தோடும் நான் விசுவாசிக்கிறேன்... இப்பொழுது, நான் அதைத் தெளிவாகப் பெறுவேன் என்றால், அவர்களுடைய குழியை இவர் தோண்டுவார் என்று நான் கூறினது உண்மை ஆகும். ஆனால் அதைக் குறித்து நான் சிறிது நிச்சயமற்று இருக்கிறேன். அது கல்லறை தோண்டுவதைக்குறித்தும், சகோதரன் ஜார்ஜ் ரைட்டைக் குறித்தும் அமைந்திருந்தது. அவரைக் கேலி செய்து சிரித்த ஒரு நபருடைய குழியை அவர் வெட்ட இருக்கின்றார் என்று நான் நினைக்கின்றேன். 15. இப்பொழுது, தேவன் அன்பாயிருக்கிறார். ஓ, நம்முடைய முழு இருதயத் தோடும் நாம் அவரை நேசிக்கிறோம். 16. இப்பொழுது, இக்காலை வேளையில் இக்கேள்விகளின் பேரில் நம்முடைய நேரத்தை அதிகமாகச் செலவிட நாம் விரும்பவில்லை. நான் எனக்குத் தெரிந்த வரை சிறந்த முறையில் அவைகளுக்குப் பதிலளிப்பேன். இப்பொழுது நண்பர்களே, நான் இவைகளின் பேரில் நிறைய தவறுகளைச் செய்யக் கூடும், நான் இங்குள்ள எல்லாரைப்போல நானும் ஒருவன். சகோ.நெவில், இன்னும் மற்ற ஊழியக்காரர்கள் நான் கூறுவதைப் போலவே இக்கேள்விகளுக்கு பதிலுரைக்க முடியும். ஆனால் இதை நான் ஒரு காரணமாகவே செய்கின்றேன். ஜனங்களின் இருதயத்தில் என்ன உள்ளது என்பதைக் கண்டறிவதற்காகாவே இதைச் செய்கிறேன். 17. 4 அல்லது 5 காரியங்கள் ஒன்றையே கோர்த்துக் கொண்டிருப்பதை நான் காணும் போது, நான் "'ஹு- ஓ, இதோ நாம் இங்குள்ளோம். பாருங்கள், சபையிலே சில சிறிய கேள்விகள் உள்ளன, அதனால் இவர்கள் எங்கு உள்ளார்கள் என்பதை நான் அறிந்து கொள்கிறேன்'' என்று நினைப்பேன். "ஹ-ஓ, இதோ இருக்கிறது,'' ஆகவே நாம் இப்பொழுது சிறிய கேள்விகளை மறந்து விடுவோம். காரியத்திற்கும் மேலான மிக முக்கியமான காரியம் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் நம்முடைய எல்லா பாவத்தினின்றும் அநீதியினின்றும் சுத்திகரிக்கிறது என்று நாம் அனைவரும் விசுவாசிக்கக் கூடுமானால், நாம் சபையை இசைவிலும், தேவ அன்பிலும் ஈடேறக் செய்து தொடர்ந்து முன்னேறச் செய்வதே நாம் எல்லாக் காரியத்திலும் மேலாகச் செய்ய வேண்டிய மிக முக்கிய காரியமாகும். உங்கள் பக்கத்தில் அமர்ந்து இருக்கும் ஸ்திரீ அல்லது மனிதன் இயேசு உண்மையாக நான் காணக்கூடிய விதத்தில் மறுபடியும் வருவார் என்று விசுவாசிக்காவிடினும் எப்படி ஆயினும், நான் அதை விசுவாசித்து, சரியாக தொடர்ந்து முன் செல்வோமாக. எப்படி ஆனாலும் வேத வசனத்தின் பேரில் அவர்களோடு நாம் ஒத்துப் போவதில்லை. ஆனால் சபை இசைவாகச் செல்ல நாம் பிரயாசப்படுவோம், ஏனென்றால் இன்னும் நிறைய மக்களை நாம் பிடிக்கப் போகிறோம், ஆனால் சபையானது இசைவாக, ஒன்றாக இல்லையென்றால், நீங்கள் சபைக்கும், நீங்கள் பிரயாசம் எடுக்கும் நோக்கத்திற்கு தீங்கு செய்வீர்கள். நீங்கள்... உங்களால் அதைச் செய்யலாகாது. சகோ. நெவில், ஆனால் ஒன்றின் பேரில் நாம் ஒத்துக் கொள்வோமானால், அதாவது இயேசு கிறிஸ்துவின் இரத்தம் எல்லா பாவங்களிலிருந்து நீக்கி நம்மை சுத்திகரிக்கின்றது (அது உண்மை ) பாவம் இல்லாமல் போனது என்று ஒப்புக் கொள்ளக் கூடுமானால், நாம் நம் வீட்டிற்கு மிக அருகில் வந்து விட்டோம். இரத்தமானது... நாம் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம். 18. எனக்கு இரத்த சம்பந்தமுடைய ஒரு சகோதரன் இருக்கின்றான். ஆனால்... அவன் என்னுடன் ஒத்துப்போகாதவனாய் இருக்கிறான், ஆ, மிகவும் பரிதாபம். ஆனால், நாங்கள் சகோதரர்கள், அதுவே தான். 19, இப்பொழுது, இந்த வாரத்தை, வருகின்ற வார்த்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தேன், நான் வெளி ஊர் பிரயாணம் மேற்கொள்ளவில்லை என்றால் ஒரு வேளை. சகோதரன் காப்-பிள்ஸ் வந்து லூயிவில்லில் கூட்டங்களை நடத்த விரும்பினார். அந்த இரவு நாம் சிறிய சுகமளிக்கும் ஆராதனை நடத்தின அந்த ஆயுத அரங்கை (Armoury) எடுக்க அவர் விரும்புகிறார். கர்த்தர் சில அற்புதமான காரியங்களை நடப்பித்தார். ஆகவே, டெல்ரியோ, டெக்ஸாஸிலிருந்து, ஜோசப் சகோதரர்கள் லூயி வில்லில் கூட்டத்தை ஒழுங்கு செய்து, வருகின்ற வாரங்களுக்கு ஒரு மகத்தான பேச்சாளரை ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்று நான் கண்டு கொண்டேன். ஆகவே அவர் தான் எப்பொழுது போகப் போகிறார் என்பது தெரியவில்லை என்று கூறினார். சார்லஸ், அது அடுத்த வாரம் இருக்கும் என்று நான் விசுவாசிக்கின்றேன். ஆகவே அப்படிப்பட்ட கூட்டங்கள் நடக்கும் சமயத்தில் நான் நிச்சயமாக எழுப்புதல் கூட்டங்களை ஆரம்பிக்கமாட்டேன். 20, அவர்களும் சுகமளிப்பு கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஆகவே சுகமளிப்பு கூட்டங்கள் இன்றைய பிற்பகல் வேளையில் இருக்கும். ஆகவே அவர்கள் அங்கே கூட்டங்கள் நடத்துகையில், நான் கூட்டங்களை ஆரம்பிக்க விரும்ப வில்லை, என்ன, எங்கே நடத்தப்பட வேண்டுமென்று எனக்குத் தெரியும். ஓ, உங்களுக்குத் தெரியுமா, நான் கூட்டங்கள் நடத்துகையில் யாராவது எழும்பி அதைப் போன்ற சிறிய கூட்டங்களை ஆரம்பித்து விடுகின்றனர். அது சரியெனத் தோன்றவில்லை, உங்களுக்குத் தெரியுமா அது சரியான ஸ்தானத்தில் பொருந்துவதில்லை. ஆகவே சிறிது காலம் நாம் காத்திருப்போம். ஒருவேளை தேவன் நமக்கு உதவுவார். எப்படியாயினும் அவர் நமக்கு உதவி செய்வார். ஆகவே நாம் விசுவாசிக்க மாத்திரம் செய்து, அப்படியே நிலைத்திருந்து தேவனிடத்தில் பயபக்தியுடன் இருப்போம். இப்பொழுது நாம் ஜெபம் செய்வோம்: 21. பரலோகப் பிதாவே, நான் இக்கேள்விகளுக்கு பதில் அளிக்கச் செல்கையில் உமது ஆசீர்வாதங்கள் தாமே எங்கள் மீது பிரகாசிக்கச் செய்யும். ஓ, தேவனே, நான் பார்க்காத சில கேள்விகள் இருக்கின்றன. சிறிது நேரத்திற்கு முன்பு 2 அல்லது 3 மாத்திரமே நான் படித்தேன். பிதாவே சரியானதை மாத்திரம் நான் பேச எனக்கு ஞானத்தையும், புரிந்து கொள்ளும் தன்மையும் எனக்கு அளித்து உதவ வேண்டுமாய் ஜெபிக்கிறேன் பிதாவே. இதை அருளும். உம்முடைய ஞானத்தை நான் கொண்டு இருப்பேனாக, பரிசுத்தாவி தாமே இப்பொழுது இறங்கி தேவையான ஞானத்தை அருளட்டும். கர்த்தாவே, இச்சிறு கூடார மக்களையும், எங்களையும் சேர்த்து ஆசீர்வதியும். 22. எங்களுடைய அருமை சகோதரன் நெவில் அவர்களை ஆசீர்வதியும். இங்கே பிதாவே, அவர் போதகக்களத்திலே கடினமாக பிரயாசப்படுகின்ற மேய்ப்பர், ஆடுகளை புல்லுள்ள இடங்களுக்கும், கால்நடை தீவனமாகப் பயன்படும் மணப்புல் வகை (Clover) இருக்கும் இடத்திற்கும், அல்லது தண்ணீரண்டைக்கும், நிழலிற்கும் அழைத்துச் செல்லப்பட்டு, வியாதிப்பட்ட, தேவைகள் நிறைந்த, ஊனமுற்ற, சோர்வுற்ற ஆடுகள் தேற்றப்பட்டு, உண்மையான ஆடுகளாய் விளங்கட்டும், ஓ, பிதாவே, நீர் அவரை ஆசீர்வதிக்க நான் ஜெபிக்கிறேன். அவருக்கு ஞானத்தையும், அறிவையும், புரிந்து கொள்ளுதலையும் அருளும். 23. பிதாவே, இப்பொழுது எங்கள் எல்லாருக்கும் உதவிச் செய்யும், நாங்கள் உமக்கு துதியை ஏறெடுக்கிறோம். இயேசுவின் நாமத்தில், ஆமென். 24, இப்பொழுது, இங்குள்ள சிலவற்றிற்கு, வேதத்தில் உள்ள அநேக பகுதிகளில் எங்கெங்கு உள்ளதோ, அவைகளை எடுத்து சரியாக கொடுப்பேன். இப்பொழுது சிலவற்றை ஆரம்பித்து கூடுமானவரை எல்லாவற்றிற்கும் சரியாக பதில் உரைப்போம். எல்லாவற்றையும் முடிப்போம் என நான் நம்புகிறேன். நாம் அனைவரும் சீக்கிரம் செல்ல, நான் இங்கு கவனமாக இருப்பேன். 25. இப்பொழுது, கேள்வி ஒரு நேரடியான கேள்வியாகும். 8. 13-வயதில் நான் ஞானஸ்நானம் பண்ணப்பட்டேன். மறுபடியும் நான் எடுக்க வேண்டுமா? 26. இப்பொழுது, கேட்பதற்கு இது ஒரு அருமையான கேள்வி ஆகும். நல்லது, இப்பொழுது, நண்பனே நான் எப்பொழுதும் அந்த நபரிடமே அதை விட்டு விடுவேன், 27. நினைவில் கொள்ளுங்கள், எனக்குத் தெரியாது... யார் இதை எழுதினது என்ற ஒன்றை மாத்திரம் நான் அறிவேன், இங்கே இருப்பவர், அந்த மனிதன் தாமே என்னிடம் வந்து கொடுத்தார். யாரோ ஒருவர் என்னிடம் சற்று முன்பு வந்து இந்த கேள்விக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும் என்று கூறினார். நான் "எனக்கு இங்கே போதுமான நேரம் கிடைத்தால் நான் பதிலுரைப்பேன்" என்று கூறினேன். அவர்கள் காகிதத்தில் அதை இங்கே எழுதி வைக்கவில்லை. 28. இப்பொழுது, இங்கே," நான்..... 13-வயதில் நான் ஞானஸ்நானம் பண்ணப்பட்டேன், மறுபடியும் நான் எடுக்க வேண்டுமா? 29. நீங்கள் 13-வயதிலிருந்து கிறிஸ்தவனாயிருந்து, கிறிஸ்துவிற்குள் ஒரு விசுவாசியாயிருப்பீர்களானால் நான் - நான் நீங்கள் இருப்பது போலவே நானும் இருந்து விடுவேன். நான் இப்பொழுது செய்ய மாட்டேன். அது முதல் தேவன் உங்களை ஆசீர்வதித்து பரிசுத்தாவியை உங்களுக்கு அருளி இருப்பாரானால் நீங்கள் அதைச் செய்யமாட்டீர்கள். 30. ஞானஸ்தானம் என்பது ஒரு-ஒரு-ஒரு முறைமை ஆகும், (form) ஞான ஸ்நானமானது உலகத்திற்கு காண்பிக்கத்தக்கதாக (அல்லது சபையாருக்கு - நீங்கள் அந்நேரத்தில் இருந்தீர்கள் என்று) நீங்கள், சாட்சிகளுக்கு முன்பாக, தேவன் தம்முடைய குமாரனை அனுப்பினார் என்றும், அவர் மரித்து மூன்றாம் நாள் உயிரோடெழுந்தார் என்றும், ஆகையால் நீங்கள் அவருடன் அடக்கம் பண்ணப்பட்டு புதிய ஜீவியம் செய்து நடக்க வேண்டும் என்று விசுவாசிக்கிறீர்கள் என்று நிரூபிப்பதற்காகவே. நீங்கள் ஞானஸ்நானம் பண்ணப்படும்போது உங்களைப் பார்த்த மக்கள், நியாயத்தீர்ப்பில் உங்களைச் சந்திப்பார்கள், பாருங்கள். 31. ஆகவே பிறகு, யாராவது ஒருவர் (அந்நியர்) ''நீயா?'' என்று கூறினால், 32. ''ஆம், என் தேவனுடைய மரணத்தினூடே, அடக்கத்தினூடே நான் ஞானஸ்நானம் பண்ணப்பட்டுள்ளேன். " 33. பாருங்கள், நான் நினைக்கிறேன் ஞானஸ்தானம். . . ஓ, அது தேவை என்று நான் கூறுகிறேன். அது தேவை அல்ல என்று நான் கூறமாட்டேன். ஆனால் அது தேவையான ஒன்று, ஏனென்றால் அது... தேவனுடைய ஒவ்வொரு கட்டளையும் முக்கியமானதாகும். அப்படித் தான் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் அல்லவா? நாம் ஞானஸ்நானம் பண்ணப்படுவது மிகவும் அவசியமாகும். இயேசு மத்தேயு அல்லது மாற்கு 16-ல் இதைக் கூறுகின்றார். அவர் "நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்" என்றார். அவர் நிக்கொதேமுவிடன் பேசிக் கொண்டு இருக்கையில், "ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான்'' என்று கூறினார். ஞானஸ்நானம் பண்ணப்படவேண்டும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் முழுக்கு ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, புதிய ஜீவியத்தில் எழுப்பப்பட்டு, தேவனுடைய கட்டளைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்பதில் நான் விசுவாசமுள்ளவனாயிருக்கிறேன். 34, ஆனால், நீங்கள், "சகோதரன் பில், சிறிய வயதில் அவர்கள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கையில், நீங்கள் மறுபடியுமாக அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்துள்ளீர்களா?" என்று கூறலாம். அநேக முறை நான் அதைக் செய்துள்ளேன். 35. ஆகவே, அங்கே - அங்கே, வேதத்தில் வெளிப்படுத்தின விசேஷம் 2-ஆம் அதிகாரத்தில் ''மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக" என்று அவர் சபையிடம் பேசுகின்றார். அநேகர் இந்த வசனத்தை எப்படி வியாக்கியானம் செய்கிறார்கள் என்றால், நீ சரியாகப் பின்னால் சென்று அதே காரியத்தைச் செய் என்று அது குறிக்கிறது என்று கூறுகிறார்கள். நல்லது, அருமை கிறிஸ்தவ நண்பனே, இதை நீ கவனிப்பாயானால். . . 36. இப்பொழுது, இதனுடன் நான் இணங்காதிருக்க விழையவில்லை, பாருங்கள், ஏனெனில் நம்மிடம் உள்ள ஞானஸ்நானத்தொட்டி நிரப்பப்பட்டு உள்ளது. ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று விரும்புவோர் எவரையும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நாங்கள் ஞானஸ்நானம் கொடுக்க ஆயத்தமாயுள்ளோம். நாங்கள் இணங்காமல் இருக்க மாட்டோம். ஆகவே, நீங்கள் ஞானஸ்நானம் பண்ணப்பட விரும்பினால், நீங்கள் செல்லும் பாதையில் ஏதாவது இருக்குமானால், நீங்கள் ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும் என்று உணர்வீர்களானால், நீங்கள் சென்று அதைச் செய்யுங்கள். அது சரி. நீங்கள் சென்று அதைச் செய்யுங்கள், உங்கள் பாதையில் எதையும் இருக்க விடாதீர்கள், நீங்கள் உங்களைத் தாமே பூரணமாக தெளிவாக்கிக் கொள்ளுங்கள். 37. அநேக வருடங்களுக்கு முன் நீங்கள் ஏதோவொன்றை எடுத்திருந்து, நீங்கள் அதைச் சரி செய்ய வேண்டும் என்று உணர்வீர்களானால், நீங்கள் சென்று அதைச் சரி செய்யுங்கள். அது என்னவாய் இருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் எல்லாவற்றை யும் தெளிவாக்கிக் கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் அந்த இடத்திற்கு வந்து விடுவீர்கள், ஏனெனில் உங்கள் பாதையில் இருக்கும் அதை நீங்கள் விலக்கும் வரையில் உங்களால் தொடர்ந்து செல்ல இயலாது. பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கியிருக்கிற எல்லாக் காரியங்களையும் நாம் தள்ளியாக வேண்டும். 38. நீங்கள் மறுபடியுமாக ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும் என்று விரும்பினால், அப்படியே செய்யுங்கள். செய்ய வேண்டியது அது தான். நான் சிலருக்கு மறுபடியும் ஞானஸ்நானம் கொடுத்துள்ளேன். 39. இப்பொழுது, நீங்கள் குறிப்பிடுகின்ற அந்த வேத வாக்கியம் ஒரு தனிப்பட்ட நபரிடம் பேசவில்லை, அது சபைக்கு பேசப்பட்டதாகும். பாருங்கள், அந்த சபைக்கு, அவர்கள் என்ன செய்தனர், ஆதியிலே அவர்கள் கொண்டிருந்த மகத்தான ஒன்றை, அவர்கள் ஆதி அன்பை விட்டனர். பாருங்கள். அவர்கள் "ஆகையால் நீ மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக," என்றனர். சரியாக அதைச் செய்து, அதை கைக்கொள், ''மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால்" என்று அவர் சபையிடம் பேசுகின்றார். நல்லது, இல்லையெனில், "நான் விளக்குத் தண்டை எடுத்துவிடுவேன்'', என்று கூறுகிறார். 40, ஆகவே நீங்கள் 13-வயதிலோ, அல்லது எந்த வயதிலோ ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தால், நீங்கள் ஞானஸ்நானம் பண்ணப்பட விரும்பினால், என்ன, அது உங்களுக்குச் சரியாயிருப்பின், நீங்கள் ஞானஸ்நானம் பண்ணப்படுங்கள். 41, நீங்கள் மறுபடியுமாக ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும் என்று இப்பொழுது வேதபூர்வமாக நான் உங்களுக்கு கூற முடியுமானால், நீங்கள் பாருங்கள், மக்கள் மறுபடியுமாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள் என்று நான் கூற ஒரு வேத பூர்வமான வழி தான் உள்ளது, முழு வேதத்திலேயே ஒரே ஒரு வசனத்தில் தான் மக்கள் மறுபடியுமாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள் என்றிருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் வருவதற்கு முன்னர் யோவானால் ஞானஸ்நானம் பண்ணப்பட்ட மக்கள் தான் அவர்கள். அப்போஸ்தலர் 19:5-ல் பவுல் அவர்களிடம், அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற வேண்டும் என்றால் அவர்கள் மறுபடியுமாக இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும் என்று கூறினான், பாருங்கள்? 42. இப்பொழுது - இப்பொழுது நீங்கள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டால் தான் பரிசுத்தாவியை பெற முடியும் என்று இல்லை, ஏனென்றால் உங்கள் இருதயம் சரியாக இருந்தாலே நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறலாம். பாருங்கள்? ஏனென்றால் அப்போஸ்தலர் 2-ல், ''நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கு என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்" என்னும் விதியை பேதுரு அளிக்கின்றான். ஆனால், அப்போஸ்தலர் 10:49, தேவன் திரும்பி, புறஜாதியார், ஞானஸ்நானம் பண்ணப்படுவதற்கு முன்பே தேவன் அவர்களுக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை அளித்தார். நீங்கள் பாருங்கள்? ஆகவே, நீங்கள் பாருங்கள், அது உங்கள் இருதயத்தின் நிலையைப் பொறுத்ததாகும். 43, அப்பொழுது பேதுரு. "நம்மைப் போல பரிசுத்த ஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா?" என்றான். நீங்கள் பாருங்கள்? ஆகவே, பிறகு, அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும் என்று அவன் கட்டளை இட்டான். 44. பிறகு, பவுல், அப்போஸ்தலர் 19 கூறுகிறது... பவுல், மேடான தேசங்களின் வழியாய் எபேசுவிற்கு வந்தான். அங்கே சில சீஷர்களைக் கண்டான், அவர்களிடம் ''நீங்கள் விசுவாசிகளான பிறகு பரிசுத்த ஆவியை பெற்றீர்களா-?" என்று கேட்டான். 45. அவர்கள் "பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை.” என்றனர் "அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்?” என்று கேட்டான். அவர்கள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தனர். "யோவான் கொடுத்த ஞான ஸ்நானம் பெற்றோம்” என்று அவர்கள் கூறினர். 46. அவன், “யோவான் 'தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்க வேண்டும் என்பதற்காக மனந்திரும்புதலுக்கேற்ற ஞான ஸ்நானம் கொடுத்தான் என்று கூறினான்", அவர்கள் அதைக் கேட்ட போது அவர்கள் மறுபடியும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றார்கள், பாருங்கள்? ஆகவே அது... 47, இப்பொழுது, இதன் பேரில்... ஆனால் நீங்கள் 13-வயதில் கிறிஸ்தவ ஞான ஸ்நானம் பெற்று இவ்வளவு காலமாக கிறிஸ்தவ ஜீவியம் செய்ததாக இது கூறுகிறதா அல்லது சில நேரங்களில் பின்மாற்றம் நீங்கள் அடைந்து ... 48. எனக்குத் தெரியாது, அவர்கள் அதை, பின்மாற்றத்தைப் பற்றி, எனக்குத் தெரியாது. அதைக் குறித்து யாராவது என்னிடம் கேட்பார்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் பின்மாற்றத்தைக் குறித்து, நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் ஒவ்வொரு நாளும் பின்மாற்றம் அடைகிறீர்கள். அதை தவிர்க்க உங்களுக்கு ஒரு வழியும் இல்லை. அது சரி. நீ "பின்மாற்றம்" அடைவாயானால், சபையில் உள்ள மக்களுக்கு, அது ஆனால் தேவனுக்கு முன்பாக அல்ல, பாருங்கள்? நீ கிறிஸ்துவின் பேரில் பின்மாற்றம் அடைகிறாய், ஆனால் தேவன் பேரில் உன்னால் முடியாது, ஏனென்றால் நீ உண்மையாகவே பாவம் செய்திருந்தால், நீ இழந்து போனவனாய் இருக்கின்றாய். ஆனால் நீ ஒவ்வொரு நாளும் விழுந்து கொண்டிருக்கிறாய், பவுல் ஒவ்வொரு நாளும் சாக வேண்டியதாய் இருந்தது. அது சரியல்லவா? அவன் ஒவ்வொரு நாளும் செத்து, ஒவ்வொரு நாளும் மனந்திரும்ப வேண்டியதாயிருந்தது. கால முழுவதும் அவன் மனந்திரும்பிக் கொண்டே இருந்தான். பாருங்கள்? ஆகவே பவுலே அவ்வாறு செய்ய வேண்டியதாய் இருந்ததால், நான் கூட அவ்வாறே செய்தாக வேண்டும். நீயும் கூட, அது சரி. ஆகவே நாம்... 49. ஆனால் இப்பொழுது, நீ மீட்டுக் கொள்ளப்பட்டவன் என்றும், இயேசு கிறிஸ்துவின் இரத்தம் உன்னை பாவத்திலிருந்து சுத்திகரித்தது என்றும், நீ ஒரு கிறிஸ்தவ ஜீவியம் செய்து கொண்டிருக்கிறாய் என்றும் நீர் உணர்வாயானால், அது (மறுபடியும் ஞானஸ்நானம் பண்ணப்படுவது-தமிழக்கியோன்) தேவை இல்லை என்று நான் நினைக்கிறேன். ஆனால் அவ்வாறு செய்யப்பட நீ விரும்பினால், சரி அது நல்லதாயிருக்கும். அதைச் செய்ய நாங்கள் மகிழ்ச்சியாயிருப்போம். 50, யாரோ ஒருவர் என்னிடம் அங்கே கொடுத்த ஒரு சிறு குறிப்பு இப்பொழுது இங்கே, இருக்கிறது. 9. சுவிசேஷமானது யூதர்களுக்குத் திரும்புகையில் சபை எந்த நிலையில் இருக்கும்? 51. இப்பொழுது, இதை எழுதிய நபர், லூக்காவைக் குறிப்பிடுகிறார். அவர்-அவர் என்னிடம் கூறினார், நம்முடைய சகோதரன், ''புறஜாதியாரின் காலம் நிறைவேறும் வரைக்கும் எருசலேம் மதில்கள் புறஜாதியாரால் மிதிக்கப்படும்" என்று வேதம் கூறுவதை அவர் குறிப்பிடுகின்றார். அது லுக்கா.21:24. இதைக். கூர்ந்து கவனியுங்கள். இது விளங்கச் செய்யும். அருமையான கேள்வி! அற்புதமானது. எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும் போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள். 52. இப்பொழுது, இதை நாம் கூர்ந்து கவனிப்போமாக. "எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும் போது, அதின் அழிவு சமீபமாயிற்று." இப்பொழுது, இதைக் குறித்து அநேக குழப்பங்கள் உள்ளன. ஜனங்கள்,. ஆனால் வேதத்தைக் கொண்டு சரித்திரப்பூர்வமாக அதை நீங்கள் அணுகுங்கள். 53. இப்பொழுது, ஏழாம் நாள் ஆசரிப்பு சகோதரர் எருசலேம் மறுபடியும் சேனைகளால் சூழப்படும் என்று விசுவாசிக்கிறார்கள். நல்லது. இப்பொழுது, அது உண்மையாக இருக்கலாம், ஏனெனில் வேத வசனமானது அநேக அர்த்தங்கள் கலந்து இணைந்ததாய் இருக்கின்றது. 54. வேதாகமம், ஒவ்வொரு தீர்க்கதரிசனத்திற்கும் அநேக அர்த்தங்களை கொண்டு இருக்கிறது என்பதை உங்களில் எத்தனைப் பேர் அறிவீர்கள்? நிச்சயமாக! ஆம் ஐயா, அது அதைக் கூறி இந்த காலத்தைத்தான் அது குறித்துக் காட்டி, திரும்பவுமாக மறுபடியும் இங்கே உள்ள ஏதோ ஒன்றைக் குறித்து கூறும். பாருங்கள்? நான் சீக்கிரமாக சிந்திப்பேனானால் சிலவற்றை நான் குறித்துக் காட்டுவேன். ஓ, ஆம். இங்கே லூக்காவில் ஒன்றுள்ளது., மத்தேயு 2-ல், "என்னுடை... எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன், என்று கூறுகின்றபடி, தீர்க்கதரிசியால் பேசப்பட்டது நிறைவேறும்படியாக, இயேசு எகிப்திலிருந்து வரவழைக்கப்பட்டார்”, என்று கூறுகின்றது. 55, இப்பொழுது, அந்த தீர்க்கதரிசனம், தீர்ககதரிசியால் குறித்துக்காட்டப்பட்ட அது சரியாக இஸ்ரவேல் (தேவனுடைய குமாரன்) குறித்துக் காண்பிக்கின்றது. அவன் எகிப்திலிருந்து வரவழைக்கப்பட்டான். ஆதியாகமத்திலும், யாத்திராகமத்திலும் அது சரி. ஆனால் அது- அங்கே குறிப்பிடப்பட்ட அது, மறுபடியும் இங்கே சொல்லப்படுகிறது. அவர் பாரோனிடம் “நீ..." என்றார். “நீ, - நீ," என்றார். அவன், அவருடைய குமாரனுக்கு என்ன செய்தான்., அவர் அந்த ஜீவனை அழிப்பேன். அவன். அவருடைய குமாரனை போகவிடவில்லை, ஆகவே பாரோன்... தேவன், பாரோனின் குமாரனைச் சங்கரித்தார். அல்லது அந்த மரணதூதன் அதைச் செய்தான். ஆகவே அது அநேக அர்த்தங்களைக் கொண்டதாயுள்ளது. 56. ஆகவே, இப்பொழுது, எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருந்ததைக் குறித்து, நிஜமாகவும் சரித்திரப்பூர்வமாகவும், அது கி.பி.96 ஆம் வருடத்தில், தீத்து எருசலேமை முற்றுகை இட்டபோது நிகழ்ந்தது. இப்பொழுது நீங்கள் கூர்ந்து கவனிப்பீர்களானால் வித்தியாசத்தைக் காணக்கூடும். கடைசி காலத்தில் எருசலேம் சேனைகளால் சூழப்படும் என்று விசுவாசிக்கிறேன். தீத்து அவர்களை முற்றுகை இட்டபொழுது, அந்த அழிவு நடந்தபொழுது... இங்கே இது அதனுடன் ஒத்து இருக்கின்றது என்று தான் நம்புகிறேன். 57. இப்பொழுது, "அந்த அழிவைக் குறித்து தீர்க்கதரிசி தானியேல் பேசும் போழுது... "அது பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கையில்" என்று கூறுகிறான். கவனியுங்கள், அவன், "நீங்கள் பாழாக்கும் அருவருப்பை, பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும் போது" என்று கூறுகின்றான். பாருங்கள், “அந்த அருவருப்பு" அருவருப்பு என்றால் “அசுத்தம்", "பாழாக்குதலைச் செய்கின்ற", பாழாக்குதல் என்றால் “அப்புறப்படுத்து" "அழித்தல்", "நீங்கள் பாழாக்கும் அருவருப்பை பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும் போது, "தீத்து எருசலேமை முற்றுகையிட்ட போது வேதபூர்வமாக நிறைவேறினது அதை எடுத்து 58. இந்த அதிகாரத்தின் துவக்கத்தில் "கடைசி காலம் எப்பொழுது இருக்கும்? கிறிஸ்துவின்... வருகைக்கான அடையாளங்கள் என்ன?" என்று அவர்கள் அவர் இடத்தில் கேட்டனர். தேவாலயத்தைக் குறித்தும், அது எப்படி இருந்தது என்றும், எப்படி மகத்தான கற்களால் அது அலங்கரிக்கப்பட்டதென்றும் அவர்கள் (சீஷர்கள்-தமிழாக்கியோன்) அவரிடத்தில் கூறினர். 59. அவர், “ஒரு கல்லின் மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டு போகும் வேளை வரும், எல்லாம் இடித்துப் போடப்படும்,” என்று கூறினார். அவர் அவர்களுக்கு அற்புதங்களையும், அடையாளங்களையும் கொடுக்கத் துவங்கினார். அப்பொழுது, இயேசு அவர்களிடையே பேசுகையில், தானியேலுக்கு திரும்புகிறார், ஏனெனில் எல்லா தீர்க்கதரிசனங்களும் ஒன்றோடு ஒன்றாக இணைந்து நிறைவேற வேண்டும். முழு வேத வாக்கியங்களும் எங்கேயும் தவறாததாய் உள்ளது. 60. இயேசு, ""வேத வசனங்கள் தவறாததாயிருக்கின்றன'', ஆமென். அங்கே தான் பரலோகத்திற்குப் போகிறேனா? நிச்சயமாகத் தான் செல்கிறேன், வேத வசனங்கள் தவறாததாயிருக்கின்றன. அடையாளங்களையும் அற்புதங்களையும் விசுவாசிக் காத உங்களுக்கு, எப்படி நீங்கள் வேத வசனத்திலிருந்து விலகி இருக்க முடியும்? வேத வசனங்கள் எவ்வாறு தவறாததாய் இருக்கின்றனவோ அவ்வாறே கிறிஸ்துவையும் (மேலே இருக்கின்ற) புறம்பாக்கிட முடியாது, எப்படி மேலே இருக்கிற அவருடைய மகத்தான ஒவ்வொரு அசைவும் கீழே பூமியிலே பிரதி பலிக்கிறதோ அதே போன்று, அது அவ்வாறு இருந்தாக வேண்டும். ஆகவே கிறிஸ்து... உங்கள்... தெய்வீக சுகமளித்தல், தேவனுடைய வல்லமையானது இங்கே பூமியிலுள்ள மாம்சப்பிரகாரமான அல்லது ஆவிக்குரிய சபையிலிருந்து எடுக்கப் பட்டால், அது கிறிஸ்துவிலிருந்தும் நீக்கப்பட்டது போன்றதாகும். அவர் இன்னுமாய்..., 61. ஆனால், ஓ, அந்த உண்மையான திராட்சைச் செடியைப் பற்றியும் கொடிகளாகிய நம்மைப் பற்றியும் என்ன ஒரு அருமையான காட்சி. பாருங்கள்? திராட்சைச்செடி எங்கே செல்கிறதோ அங்கே கொடிகளும் செல்லுகின்றன. அது சரியா? அவருடைய சரீரமானது அசைவுக்குள்ளும் வல்லமைக்குள்ளும் வருவது போன்று அவருடைய மகத்தான சரீரம், ஓ, அவருடைய மகத்தான இரத்தம் வடிகின்ற கரங்கள், விழுகின்ற கண்ணீர், இரத்தம் வடிகின்ற அவருடைய விலாக்கள், அடிக்கப்பட்ட அவருடைய முதுகு, இதைப் போன்று பூமியின் மேலே தேவனுக்கும் (பிதா) பூமியிலுள்ள அழிவுள்ள மானிடர்களுக்கும் நடுவே தொங்கிக் கொண்டு, பரிந்து பேசிக் கொண்டு அவர்களை நேசிக்கின்றாரே அது சபைக்குள் அளிக்கப்பட்டுள்ளது என்பது எவ்வளவு அழகான ஒன்றல்லவா! 62. "என்னுடைய கரங்களை இவ்வழியாய் அசைப்பேன்” என்று அவர் கூறுகையில், அவருடைய சரீரமானது அசைகின்றது. ''இங்கே சென்று சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்'', அந்த சபை சரியாக நேரே செல்வதை நீங்கள் காண்பீர்கள். ஏனென்றால் என் கையினுடைய நிழலானது கையுடனே செல்ல வேண்டும். ஆமென். அது சரியா? ஆமென். ஓ, என்னே, அதைக் குறித்து நான் நினைக்கையில், அங்கே அவர் இருக்கிறார், அவருடைய சரீரமானது அசைகின்றது, ''நீங்கள் உலகமெங்கும் போய், வல்லமையை பிரஸ்தாபித்துக் காட்டுங்கள்", காரியம் என்ன வென்றால் நம்முடைய வேத கல்வி, போதகங்களை, இன்னும் காரியங்களை செய்வோமானால் நாம் மோசமாகத் தோல்வியுறுவோம், ஆனால் இப்பொழுது தேவனுடைய கரமானது அசைந்து, அடையாளங்களும் அற்புதங்களும் நம் கண்ணெதிரில் தோன்றிக் கொண்டுள்ளன. ஏன், என்னே? 63. இயேசு அங்கே பிசாசுகளைத் துரத்தின போது கூறினார்... இப்பொழுது ஒரு கடினமான கேள்வியை விட்டு அகன்று செல்கிறோம். ஆனால் இயேசு பிசாசுகளைத் துரத்தும் போது, "உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்தினால் உங்கள் பிள்ளைகள் எதினால் அவைகளைத் துரத்துகிறார்கள்? நீங்கள் இதைவிட சிறந்ததை உடையவர்களாய் வைத்திருந்தால், எங்களுக்கு அதை காண்பியுங்கள், என்றார். பாருங்கள்? ''நான் தேவனுடைய விரலினாலே," ஆமென். தேவனுடைய "விரலை" குறித்து சற்று சிந்தியுங்கள். கிறிஸ்துவிற்கு மேலாக தேவன் இருக்கிறார்; சபைக்கு மேலாக கிறிஸ்து. அங்கே, பிதா, சில-சில காரியங்களைக் கூறுகிறார்; பிறகு தேவன், குமாரன் தம்முடைய கரத்தை அசைக்கின்றார், நிழல் அதைத் தொடர்கிறது? "நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்தினால் உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்?" 64. கவனியுங்கள், நீங்கள் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். ஓ, பிசாசு உங்கள் மேல் எவ்வளவு பெரிய வியாதியையும் வருத்தத்தையும் கொண்டு வந்தாலும் பரவாயில்லை, அவைகளை அகற்ற அவருடைய விரல் ஒன்றே போதும். ஓ, என்னே! என்னே! அவைகளைப் பாருங்கள், அவைகள் மிகப் பெரிய, வலுவான தோள்களும் கரங்களும், தசைகளும் கொண்டுள்ளன. ஆனால் அவருடைய விரல் ஒவ்வொரு வியாதியையும் பிசாசுகளையும் வெளியேற்றுகிறது. பிசாசு எவ்வளவு சிறியதான ஒன்று!. அவர் தம்முடைய விரலைக் கொண்டு அவனைத் துரத்தள்ளி விடுகிறார். "நான் தேவனுடைய விரலினாலே. . ." 65, இப்பொழுது, நான் உங்களுக்கு தேவனுடைய அன்பை நான் காண்பிக்கட்டும். ஆனால் ஒரு ஆடு தொலைந்த போதோ, அவர் தம்முடைய விரலை உபயோகிக்க வில்லை, அதைத் தம்முடைய தோள்களின் மீது கிடத்தினார். அவர் தம்முடைய முழுவதையும், கைகளையும் பிரயோகித்து ஆட்டை தம்முடைய தோளின் மீது வைத்தார். ஒரு மனிதனுடைய தோள்களும், முதுகும் ஒரு மனிதனின் மிகவும் பலங்கொண்டதும், வல்லமை கொண்டதுமான பாகங்களாகும். நீங்கள் அதை அறிவீர்கள். அவர் தம்முடைய கைத்தசைகள், தசைகளினால் அந்த முழு ஆட்டையும் தூக்கி தம் தோளின் மீது வைக்கிறார். ஆகவே அவர் ஒரு சிறிய, பழைய பிசாசை ஓட்ட தம் விரலைக்கொண்டு வருவது போன்று வரவில்லை, ஆனால் இங்கே தம்முடைய எல்லா தசைகளையும், கால் தசைகளையும், கை தசைகளையும் கொண்டு, வனாந்திரத்தில் சென்று, காணாமற்போன அந்த ஆட்டை எடுத்து தம் தோளின் மீது வைத்துக் கொள்கிறார். ஓ, என்னே! “நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்தினால் உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்” ஓ, அல்லேலுயா! என்னே! 66. சரி, இப்பொழுது பொருளிற்கு வருவோம்: எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும் போது... அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப் போகவும்... வெளியே புறப்படவும்... நாட்டுப் புறங்களிலிருக்கிறவர்கள்... எழுதியிருக்கிறபடி யாவும் நிறைவேறும்படி நீதியைச் சரிகட்டும் நாட்கள் அவைகளே அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால் கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ, பூமியின் மேல் மிகுந்த இடுக்கணும் இந்த இனத்தின் மேல் கோபாக்கினையும் உண்டாகும். பட்டயக்கருக்கினாலே விழுவார்கள், சகல புறஜாதிகளுக்குள் ளும் சிறைபட்டுப் போவார்கள்; 67. கவனியுங்கள். அதைக் குறிப்பாக எடுத்துக்காட்ட இங்கே வேத வாக்கியங்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன. முதலாவதாக, "பட்டயங்களின் கருக்கினாலே', கடைசியாக வருவது அணுகுண்டு ஆகும். பாருங்கள்? ஆனால் இது பட்டயக் கருக்கினால் உண்டாகிறது, யூதர்கள் எல்லா நாடுகளுக்கும் சிறையாக்கிக் கொண்டு செல்லப்பட்டனர். அது அவ்விதம் மறுபடியும் இருக்காது, அவர்கள் கடைசி காலத்திற்காக பாலஸ்தீனாவில் ஒன்று சேர்க்கப்படுவார்கள். பாருங்கள்? இது கடந்து போன நாட்களைக் குறிக்கின்றது. அது சரித்திர பூர்வமாக அப்படியே நடந்தேறியது. 68. அவர்கள் எல்லா நாடுகளுக்கும் கொண்டு செல்லப்பட்டனர். வானத்தின் கீழ் உள்ள ஒவ்வொரு தேசத்திலும் நீங்கள் யூதர்களைக் காணலாம். ஓ, ஒவ்வொரு தேசத்திலும், நீங்கள் சீனாவிற்குச் சென்றால் அங்கே யூதர்களைக் காணலாம். நீங்கள் ரஷ்யாவிற்குச் சென்றால் அங்கே யூதர்கள் இருப்பதைக் காணலாம். ஒவ்வொரு சிறு தீவுகளுக்கும் செல்லுங்கள், அங்கே யூதர்களைக் காணலாம். ஒவ்வொரு தேசத்திலும் சிதறடிக்கப்பட்டிருக்கிறீர்கள், அது என்ன? தேவனுடைய தீர்க்கதரிசனம் ஆகும். தேவன் அதை எத்தனித்தார். சகோதரனே, அந்த யூதர்கள் தான் தூரத்தைக் காட்டும் அடையாளக் கம்பங்கள் ஆவர். நீங்கள் அவர்களைக் காணும் போது. . . 69. அவர்கள் குருடாயிருந்து, கொண்டு செல்லப்பட்டனர் என்று எனக்குத் தெரியும். அவர்கள் ஏமாற்றப்பட்டார்கள். நீயும் நானும் காணத்தக்கதாக அவர்கள் தேவனால் குருடாக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டனர். அது சரி. ஆனால் தீர்க்கதரிசன ஆவியைக் கொண்டும், வேதத்தைக் கொண்டும் நான் கூறுகிறேன், யூதன் வீட்டிற்கு திரும்பும் நேரம் வந்துவிட்டது. ஆம் ஐயா, அவர் ஹிட்லரின் இருதயத்தைக் கடினப்படுத்தி ஜெர்மனி தேசத்திலிருந்து அவர்களை விரட்டினார்; முசோலினியின் இருதயத்தைக் கடினப்படுத்தினார், ரஷ்யாவை விட்டு அவர்களை விரட்டினார். அவர், அவர்களை வெளியே கொண்டு வர அந்நாட்களில் செய்தது போலவே அவர், அவர்களை எவ்விடத்திலிருந்தும் விரட்டிக் கொண்டிருக்கிறார். அவர்கள் வனாந்தரத்தில் சென்று அங்கே கடந்து செல்ல ஆயத்தமாயிருந்த போது, என்ன நிகழ்ந்தது? தேவன் மகத்தான வாதைகளையும் மற்ற காரியங்களையும் கொண்டு அந்த தேசத்தைச் சந்தித்தார். அவர், எசேக்கியேல் மற்றும் வெளிப்படுத்தல் 11-ல் வருகின்ற 2-ஒலிவ மரங்களாகிய தமது 2-ஊழியக்காரர் வருகையில் அவர், மறுபடியும் அதைச்செய்வார். அவர் அந்த அற்புதங்களையும் அடையாளங்களையும் மறுபடியும் செய்வார். 70. வெளிப்படுத்தல் 11-ல் வரும் அந்த 2-சாட்சிகளைப் பாருங்கள், "என்னுடைய இரண்டு சாட்சிகளுக்கும் அதிகாரம் கொடுப்பேன், அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லி வருகிற நாட்களிலே வானத்தை அடைப்பார்கள். வேண்டும் போதெல்லாம் பூமியைச் சகலவித வாதைகளாலும் வாதிப்பார்கள்." அவர்கள் கடைசி நாட்களில் வருகின்ற இரண்டு சாட்சிகள் ஆவர். 71. ''அது பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு" என்கின்ற நவீன போதகம் எனக்குத் தெரியும். அது தவறு! அது தவறு! 72. இங்கே அந்த இரண்டு சாட்சிகள், சரியாக மோசேயும் எலியாவும் திரும்ப வருதல் ஆகும். நீங்கள் கவனியுங்கள், அவர்கள் ஒவ்வொருவரும், மோசே, அவன் மரித்தான், ஆனால் அவன் எங்கு சென்றான்? அவன் மறுபடியும் எழுந்திருக்க வேண்டும். எலியா மரணத்தைக் காணாமல் மறுரூபமாக்கப்பட்டான். அவன் மரிக்க வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு மானிடனும் மரிக்க வேண்டும். ஆகவே அவன் மறுபடியும் திரும்ப வர வேண்டும். ஆகவே அவர்கள் தான் அந்த இரண்டு சாட்சிகள் ஆவர். 73. இப்பொழுது கவனியுங்கள்: அவர்கள்... பட்டயக்கருக்கினாலே விழுவார்கள்,... (24-வது வசனம்). புறஜாதிக ளுக்குள்ளும் சிறைப்பட்டு போவார்கள். புறஜாதியாரின் காலம் நிறைவேறும் வரைக்கும், (ஆமென்!). எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும். 74. நமக்கு சிறிது காலம் மாத்திரமே உள்ளது என்பதை அறியும் போது, அது அதிர்ச்சியூட்டுகின்றதாய் இருக்கிறதல்லவா? தேவன் அவ்வாறே கூறி உள்ளார்! நேபுகாத்நேச்சார் ராஜாவோடு புறஜாதியாரின் காலம் துவங்கியது. ஓ, என்ன குறிப்பிடத்தக்க ஒன்று! இந்தப் பொருளின் மேல் எவ்வளவு நேரமாகிலும் என்னால் செலவழிக்க முடியும், ஆனால் இன்னும் சில நிமிடங்கள் மட்டுமே உள்ளன! ஆனால் கவனியுங்கள், எல்லாரும் தங்கள் கேள்விக்கு பதில் பெற விரும்புகின்றனர். ஆனால் நாம் இதன் மேல் பேசுகையில், நாம் இதைக் குறித்து சிந்திப்போம், சரியாக இப்பொழுது அது நமக்கு மிகவும் தேவையான ஒன்றாய் உள்ளது, 75. கவனியுங்கள்! தேவன் யூத மக்களை நடத்தினார். அவர்கள் ஒரு தேசமாக இருக்கவில்லை, அவர்கள் ஒரு ஜனங்களாய் இருந்தனர். அவர்கள் வெளியே அழைக்கப்பட்ட ஒரு சபையாய் மாத்திரம் இருந்தனர். யூதர்களுக்குள் எப்போதுமே ஒரு ஸ்தாபனம் இருந்ததில்லை, அவர்கள் எப்போதுமே தேவனால் வழி நடத்தப் பட்டனர். 76. ஆகவே அவர்கள் பிறகு அரசியல் ரீதியாகவும், தேச ரீதியாகவும் வர விரும்பிய அவர்களுக்கு - ஒரு ராஜா தேவைப்பட்டது. ஆகவே தேவன் அவர்களுக்கு ஒரு ராஜாவைக் கொடுத்தார். ஆனால் அது கிரியை செய்யவில்லை. தேவன் தான் அவர்களுடைய ராஜா. தேவன் தான் நம்முடைய ராஜா, அது சரி, தேவன் தான் சபையினுடைய ராஜா. 77. இப்பொழுது, கவனியுங்கள். அவர்கள் சிறைபிடிக்கப்பட்டு பாபிலோனிற்கு கொண்டு செல்லப்பட்டனர். ஏனென்றால் அவர்கள் பூமியிலுள்ள நாடுகளைப் போல போலியாக இருக்க விரும்பினர். இன்றைய சபை உலகத்திற்கு அது என்ன ஒரு அருமையான காட்சி. இன்றைக்கு சபை உலகத்தைப் போலியாக்கிக் காண்பிக்க முயன்று, தங்களுடைய வாழ்க்கையின் போக்கிலே அப்படியே அடித்துச் செல்லப் படுகின்றனர். உலகம் ஜீவிக்கிறது போல சபையும் ஜீவிக்கிறது, அப்படியே செய்து கொண்டு, அப்படியே நடந்து கொண்டு எல்லாவற்றையும் செய்து கொண்டு, தான் சபையென்று கூறிக் கொண்டிருக்கிறது. நீ அதைச் செய்யக்கூடாது. இல்லை ஐயா. நீ யார் என்பதை உன் ஜீவியம் நிரூபிக்கிறது. 78. நீ யார்... நான் துவக்கத்தில் கூறினது போன்று. நீ வேறெங்கேயோ என்னவாய் இருக்கிறாயோ அதைத் தான் நீ இங்கே பிரதிபலிக்கிறாய், உன்னுடைய, மேலே எங்கேயோ உள்ள வானத்துக்குரிய சரீரம் (celestial body) எப்படியுள்ளதோ அல்லது பூமிக்குரிய சரீரம் (terrestrial body) எங்கோ எப்படி உள்ளதோ அதைத் தான் இங்கேயும் பிரதிபலிக்கிறாய். ஆவிக்குரிய தேசத்தில் என்னவாய் இருக்கிறாயோ அதே போன்று தான் இங்கேயும் இருக்கிறாய். நீ ஆவிக்குரிய பிரதேசத்தில் கெட்ட சிந்தை உடையவனாய் இருந்தால் இங்கேயும் கெட்ட சிந்தையுடையவனாய் இருக்கிறாய். பகைமை எண்ணம், பொறாமை, சச்சரவு உள்ளம் போன்றவைகளை ஆவிக்குரிய இடத்தில் கொண்டிருப்பாயானால் அது இங்கே திரும்பி பிரதிபலிக்கும். ஆனால் உன்னுடைய முழு உள்ளான காரியங்கள் அப்புறப்படுத்தப்பட்டு சுத்தமாக்கப் பட்டிருந்தால், அங்கே உனக்காக சுத்தமாக்கப்பட்ட ஒரு சரீரம் காத்துக் கொண்டிருக்கிறது என்பதை அது காண்பிக்கின்றது, அது இங்கே மாம்சத்திலே பிரதிபலிக்கின்றது. இதை நீ காண்கிறாயா? பாருங்கள், இங்கே இருக்கிறது. ''இந்த பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்து போனாலும் நமக்காக ஒன்று ஏற்கெனவே காத்துக் கொண்டு இருக்கின்றது." பாருங்கள்? 79. இப்பொழுது, இந்தக் காலத்தில் இந்த கடைசி காலத்தில், எப்படி இந்த மாம்சீக ஒப்பனை செய்தல், கிறிஸ்தவ மதத்தை போலியாக்குதல் எல்லாம் கலந்து அப்போது நடந்தது போல ஒரு பெரிய பாபிலோனாகி உள்ளது. அவர்கள் பாபிலோனுக்குள் கொண்டு செல்லப்பட்டனர். அது சரியா? "கர்த்தருடைய தூதன் வந்து என் ஜனங்களே, 'பாபிலோனை விட்டு வெளியே வாருங்கள்! என்று அழைத்தான். " என்று வேதம் கூறுகின்றது. 80. குழப்பம்! "நான் ஒரு பாப்டிஸ்ட், நான் ஒரு மெத்தோடிஸ்டு, நான் ஒரு பிரஸ்பிடேரியன்” இது எல்லாம் குழப்பமே. அதில் இரட்சிப்பு என்பதே கிடையாது. 81. இப்பொழுது, பாப்டிஸ்டு மக்கள் இரட்சிப்பைப் பெறவில்லை, மெத்தோடிஸ்ட் மக்கள் இரட்சிப்பைப் பெறவில்லை என்று நான் கூறவில்லை. நான் அதைக் குறித்து பேசவில்லை. நான் சபையைக் குறித்தும் அதினுடைய அரசியல் வல்லமையைக் குறித்தும் நான் பேசுகிறேன். அது அரசியல். அரசியல் பூர்வமாகப் பேசினாலும், ஏனெனில் நீ மெதோடிஸ்டாக அல்லது பாப்டிஸ்டு அல்லது பிரஸ்பிடேரியன் அல்லது கத்தோலிக்கனாக இருப்பதால் அதனுடன் செய்வதற்கு ஒன்றுமில்லை. தேவன் அதை அங்கிகரிப்பதில்லை. ஆகவே அது இன்றைக்கு பாபிலோனாக இருக்கிறது, தேவன் தமது சபையை, இருதயத்தில் சுத்தமுள்ளவர்களை, அவைகள் எல்லாவற்றையும் விட்டு வெளியே வர அழைக்கிறார், அதை தம்முடைய சபை ஆக்குகிறார். எவ்வளவு அழகான ஒன்று! 82. இப்பொழுது கவனியுங்கள், உங்களுக்கு அதிர்ச்சியூட்டும் காரியத்தை என்னால் கூற முடியும். ஆனால் அது... கவனியுங்கள், இப்பொழுது கவனியுங்கள். பாபிலோன் எப்படி.,. என்ன நடந்தது. பாபிலோனில், உண்மையாக தொழுது கொண்டவர்கள் மீது நிர்ப்பந்தம் கொண்டு வரப்பட்ட போது என்ன நடந்தது என்பதைக் கவனியுங்கள். அன்று சிறை பிடிக்கப்பட்டவர்களில், தேவனை உண்மையாக தொழுது கொண்டவர்களாகிய வெகு சிலரான ஷாத்ராக், மேஷாக் ஆபெத்நேகோ, தானியேல், தாங்கள் யார் என்றும், அவர்களுடைய உண்மையான சுவாபம் என்னவென்றும் காண்பிக்க தேவன் அவர்களை அழைத்ததை நினைவில் கொள்ளுங்கள். ஒரு விக்கிரகத்தை வழிபட அவர்கள் நிர்பந்திக்கப்பட்டனர். அது சரியல்லவா? விக்கிரக ஆராதனை! அவர்கள் விக்கிரகத்தை வணங்க நிர்ப்பந்தம் செய்யப்பட்டனர், ஒரு சொரூபத்திற்கு முன்பு தலை வணங்க வேண்டியதாய் இருந்தது. அவர்கள் அப்படி செய்யவில்லை என்றால், அவர்கள் துன்புறுத்தப்பட்டனர். 83. ஓ, தானியேலையும், வெளிப்படுத்தின விசேஷத்தையும் எடுத்து ஒன்றாக இணைத்து வேத வசனத்தின் மூலம் சபையும் வெளியே அழைக்கப்படுவதற்கு முன் அத்தகைய துன்புறுத்தல் அடைவாள் என்பதை காண்பித்தல் எவ்வளவு அழகான காட்சியாக இருக்கிறது. அந்த விதமாகத்தான் புறஜாதி சபையானது உள்ளே கொண்டு வரப்பட்டது. அவ்விதமாகவே புறஜாதி சபையும் வெளியே எடுக்கப்படும். எப்படி வருகின்றாளோ அவள் அவ்விதமாகவே செல்வாள். 84. அவன் எப்படி அந்த சொரூபத்தைக் கண்டான் என்பதைச் கவனியுங்கள். ஆகவே, இப்பொழுது, நினைவில் கொள்ளுங்கள். அந்த சொரூபம்... இப்பொழுது இது சொந்த இடம். கவனியுங்கள். நேபுகாத்நேச்சார் ராஜா செய்த சொரூபம், பரிசுத்த மனிதனாகிய தானியேலுடையது என நான் நம்புகிறேன். நீங்கள் கவனிப்பீர்களா னால், நேபுகாத்நேச்சார் அரசன் தானியேலை “பெல்தேஷாத்சார்" (அது அவனுடைய சொரூபமாயிருந்தது) என்று ஏற்கனவே அழைத்திருந்தான். அவன் ஒரு சொரூபத்தை உண்டாக்கினான். இந்த சிங்கக் கெபியில் தானியேலுக்கு பிறகு யாருமே போடப்படவில்லை. அவள் "தானியேலின் தேவனைத் தவிர, வேறே தேவர்களை யாரும் சேவிக்கக் கூடாது” என்றான், ஆகவே இந்த பரிசுத்த மனிதனின் சொரூபமாக அது இருந்திருக்கக் கூடும். அந்த மகத்தான சிலையை, எல்லாரும் வணங்க வேண்டியதாயிருந்தது. 85. ஆனால் சபையாகிய, ஷாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ... தானியேல் தலைவனாய் இருந்தான், கிறிஸ்து சபைக்கு தலைவராய் இருக்கிறது போல, 86. ஆகவே அவர்கள் இந்த சொரூபத்திற்கு வணங்கி, அதை சேவிக்க வேண்டியதாய் இருந்தது. கவனியுங்கள்! நீங்கள் கவனிப்பீர்களானால், அந்த நேரங்களில் தானியேல் அமைதியாயிருந்தான், ஆமென்! ஓ, இதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். தானியேல் அமைதியாயிருந்தான், அவர்களை... அவர்கள் தங்கள் சொந்த தெரிந்தெடுத்தலை செய்ய வேண்டியவர்களாய் இருந்தனர். 87. அந்த நாளில்... புறஜாதிகளின் சமயம் முடிவடையும் நேரத்தில், அங்கே ஒரு சொரூபம் இருக்கும், எல்லாரும் இந்த சொரூபத்தை வணங்கி, அதை தொழுது கொள்ள வேண்டும். அது எவ்வளவு பரிசுத்தமாய் இருந்தாலும் சரி, நீங்கள் ஒரு சொரூபத்தை தொழுது கொள்ளக் கூடாது (சொரூப -வழிபாடு). 88. இப்பொழுது கவனியுங்கள். ஓ, என்னே! கடைசி நேரத்தில், தானியேல் மறுபடியும் உள்ளே வருகிறான். எவ்வளவு மகத்துவமானது! வைப்பாட்டிகளுடனும், மற்றவர்க ளுடனும் அந்த மகத்தான விருந்து நடக்க இருந்த அந்த இரவில் சுவற்றில் ஒரு கையுறுப்பு வந்து "'மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின்'' என்று எழுதியது. அது அந்நிய பாஷையில் எழுதப்பட்டு இருந்ததால், யாராலும் அதற்கு வியாக்கியானம் அளிக்க முடியவில்லை. யாருமே அதற்கு அர்த்தம் உரைக்க முடியவில்லை,. 89, அவர்கள் சென்று சிறந்த ஞானிகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் "எங்களுக்குத் தெரியவில்லை'' என்று கூறினர். 90, அவர்கள் சென்று அவர்களுடைய எல்லா குறி சொல்பவர்களையும், ஜோதிடக் காரர்களையும் அழைத்து வந்தனர், அவர்கள், ''எங்களுக்குத் தெரியவில்லை. அதைக் குறித்து எங்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. இதைப் போன்ற ஒரு பாஷையை, மொழியை நாங்கள் பார்த்ததுமில்லை, கேட்டதுமில்லை '' என்றனர். 91. ஆனால் அங்கே ஒரு மனிதன் இருந்தான்! தேவன் தம்முடைய மனிதனை வைத்திருந்தார். தானியேல் அங்கே இருந்தான். அவன் - ''நீங்கள் சென்று அவனைக் கொண்டு வாருங்கள், ஏனெனில் தேவனுடைய ஆவி அவனுக்குள் வாசம் செய்கிறது” என்று கூறினான். 92. ஆகவே தானியேல் அங்கே வந்து அந்த சுவற்றில் எழுதப்பட்ட அந்த பாஷையைப் படித்து அதை வியாக்கியானம் செய்கிறான். அவன், அதை வியாக்கியானம் செய்கிறான். அவன்... அதன் வியாக்கியானம் என்ன? "ஓ, நீர் ஆசீர்வதிக்கப்படுவீராக, ஓ ராஜாவே நீர் என்றும் வாழ்க'' என்றல்ல, ஆனால் நேரடியாக முரடான குரலில், அவன் நேரடியாக நிராகரிக்கப்பட்டான் என்னும் விதத்தில், ''நீ தராசிலே நிறுத்தப்பட்டு, குறையக் காணப்பட்டாய்" என்றான். 93. கவனியுங்கள், அது அதே விதமாகத்தான் இருக்கின்றது. இயற்கைக்கு மேம்பட்ட காரியம் எப்படி புறஜாதியாரின் ராஜ்ஜியத்தை உள்ளே கொண்டு வந்ததோ, அதே போன்று இயற்கைக்கு மேம்பட்ட காரியம் இதை புறஜாதியார் இடமிருந்து வெளியே எடுக்கிறது. இயற்கைக்கு மேம்பட்ட விதத்தில் ராஜ்ஜியம் ஆரம்பித்து, இயற்கைக்கு மேம்பட்ட விதத்தில் அது வெளியே செல்கிறது. எருசலேமின் மதில்கள் மேல் அவர்கள்... அது... ''புறஜாதியாரின் காலம் நிறைவாகும் வரை புறஜாதியார் அதை கொண்டிருப்பார்கள்". பிறகு தேவன் யூதர்களிடம் திரும்புகிறார். ஆமென்! ஓ என்னே! 94. ஓ, நண்பர்களே, இதன் மேல் இன்னுமாய் சென்று கொண்டிருக்க நான் விரும்புகிறேன். நீங்களும் தானே? நாம் இந்த பொருளின் மேல் சுமார் ஒரு வாரம் நீடித்திருக்கலாம், பாருங்கள், வேத வசனங்களை நாம் முழுவதுமாக ஆராய நமக்கு ஏதுவாயிருக்கும். 95. அதை, கவனியுங்கள், இப்பொழுது அவர் என்ன கூறினார் என்று கூர்ந்து கவனியுங்கள், அவர் என்ன கூறினார், "புறஜாதிகளின் காலம் நிறைவேறும் வரை எருசலேம் புறஜாதிகளால் மிதிக்கப்படும்,'' தீத்து எருசலேமை முற்றுகையிட்ட பின்னர் அதைப் பிடித்தான். அவர், “பாழாக்கும் அருவருப்பை நீங்கள் காணும்போது?" என்றார். "ஆம்" "நல்லது, புறஜாதிகள் உள்ளே வந்த பிறகு தான்" “ஆம், எங்களுக்கு புரிகின்றது" என்று சீஷர்கள் கூறினார்கள். ''இப்பொழுது, புறஜாதியார் இப்பொழுது தங்கள் அரசாங்கத்தை கொண்டு இருக்கின்றனர்'' ''நிச்சயமாக'' 96. "எருசலேம் அப்பொழுது புறஜாதியாரின் அரசாங்கத்தின் கீழ் இருந்ததா?" ஆம், ஐயா! ரோமர்கள். அவர்கள் இன்னும் எருசலேமில் அரசாங்கத்தைக் கொண்டு இருந்தனர். தானியேல் பேசின அந்த பாழாக்கும் அருவருப்பு அப்போதே ஆரம்பித்து விட்டது. 97. இப்பொழுது அவர், "காலமானது சமீபமாய் இருக்கிறது, ஏனெனில் அவர்கள் முகமதியர், புறஜாதியர், இந்த ஆலயத்தை அழித்துப்போட்டு, ஒமர் மசூதியை இந்த இடத்தில் கட்டுவார்கள், இதே இடத்தில் அது நிற்கப் போகிறது, அது இங்கே நிற்கப் போகிறது." என்றார். 98. புறஜாதி என்றால் "அவிசுவாசி” என்று பொருளாகும். அது சபை அல்ல, இப்பொழுது, அது புறஜாதி, பாருங்கள், அவிசுவாசி. இப்பொழுது புறஜாதியார் காலம் நிறைவேறும் வரை அது அங்கே நிற்கும். புறஜாதிகளின் யுகம் முடிவடையும் போது அந்த மகத்தான பிரபு கடைசிக் காலத்தில் மக்களுக்காக நிற்பார் (அவர் கிறிஸ்து). 99. தானியேலில், "அவனிடத்தில் அவர் வந்தார்'', ''அவருடைய சிரசின் மயிர் வெண்மையாய் இருந்தது, ” வெளிப்படுத்தின விசேஷம் 1-ஆம் அதிகாரத்தில் நீங்கள் காண்பது போன்று. நியாயசங்கம் உட்கார்ந்தது, புஸ்தகங்கள் திறக்கப்பட்டன. எழுதப் பட்டவைகளின்படியே ஒவ்வொருவரும் நியாயத் தீர்ப்படைந்தனர். கவனியுங்கள், புஸ்தகங்கள் திறக்கப்பட்டன. ''அவன் பார்த்துக் கொண்டிருக்கையில் அவர் வந்தார், ஆயிரமாயிரம் பேர் அவரைச் சேவித்தார்கள்" அவருடன் பரிசுத்தவான்கள் வந்தனர். அது சரியா, அது தானியேலில் உள்ளது. 'புஸ்தகங்கள் திறக்கப்பட்டன', அதுதான் தானியேலில் உள்ளது. "புஸ்தகங்கள் திறக்கப்பட்டன', அது தான் உன் ஜீவியத்தின் புஸ்தகமாகும். "ஒவ்வொரு மனிதனும்- இவ்விதம் நியாயந்தீர்க்கப்பட்டான். "வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது'', அது தான் ஜீவ புஸ்தமாகும். "ஒவ்வொரு மனிதனும் நியாயந்தீர்க்கப்பட்டான்", 100. இப்பொழுது கவனியுங்கள், அது மூன்றாக இருக்கின்றது என்பதை நீங்கள் எப்போதும் நினைவுகொள்ளுங்கள். நீங்கள் இதை நினைவு கொள்ளவில்லை எனில் நிச்சயமாக நீங்கள் குழம்பிப் போவீர்கள். பூமியின் மேல் பிறந்த மக்களில் 3-வகையைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள்; ஆதியில் 3-வகையினர் இருந்தனர்; கடைசியிலும் 3- வகையினர் இருப்பர். என்ன... 101. அவரைத் தொழுது கொண்டிருக்கிற ஆயிரமாயிரம் பேர்களோடும் இயேசு திரும்பி வந்தார். அவர் கூறினதை நினைவில் வைத்திருக்கிறீர்களா, "உங்களில் ஒருவனுக்கு வழக்குண்டானால், வழக்காடும்படி அவன்... அந்தக்காரரிடத்தில் போகத்துணிகிறதென்ன? பரிசுத்தவான்கள் உலகத்தை நீயாயந்தீர்ப்பார்கள் என்பதை அறியீர்களா?" பரிசுத்தவான்கள் பூமியை நியாயத்தீர்ப்பார்கள்! அல்லேலூயா! தான் அதை நினைக்கையில், என்னே! அவருடைய இரத்தத்தால் கழுவப்பட்டவர்களுடன் அவர் வருவதையும், ஆயிர வருட அரசாட்சிக்குப் பிறகு, மீட்பையும், காலங்கள் தோறும் மீட்கப்பட்ட யாவரும் அவருடைய பிரசன்னத்தில் நிற்பதையும் காண்பதை நான் நினைத்துப் பார்க்கிறேன், என்னே! இரத்தத்தால் கழுவப்பட்ட மணவாட்டி! 102. நன்மக்களாய் இருப்பவர்கள் அல்ல, அவர்கள் நிச்சயமாக முதலாம் உயிர்த் தெழுதலில் இருக்க மாட்டார்கள், வேதம், "மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை," என்று கூறுகிறது. அது சரியல்லவா? அவர்கள் ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புஸ்தகத்தில் பெயர் எழுதப்பட்டவர்கள், ஆனால் பரிசுத்த ஆவியை பெற மறுத்தவர்கள்... 103. அந்நேரத்தில் தெரிந்து கொள்ளப்பட்டவர் மாத்திரமே உள்ளே செல்வர். ஆயிர வருட அரசாட்சியில் தெரிந்து கொள்ளப்பட்டவர் மாத்திரமே செல்வர். ஓ, அப்படி ஆனால், சகோதரனே, என்ன விதமான மக்களாய் நாம் இருத்தல் வேண்டும்? நான் ஆயிர வருட அரசாட்சியில் முழுவதுமாக இருக்க விரும்புகிறேன்! நாம் நம்முடைய பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் புறம்பே தள்ளுவோமாக. ஒரு சகோதரன் ஏதோ ஒன்றைக் தவறாக கூறி, அல்லது இந்த விதமாக தவறாகச் செய்தால், நாம் அவருக்காக ஜெபித்து, தொடர்ந்து சென்று கொண்டே இருப்போம். உன்னுடைய ஒரே நோக்கமானது தேவனை நோக்கியவாறே இருக்கட்டும். வேறுயாரும் சென்றுடையவில்லை ஆனாலும், நீ சென்றடை.. ஏனென்றால் தெரிந்து கொள்ளப்பட்டவர் மாத்திரம் கிறிஸ்துவுடன் ஆயிரம் வருடம் ஜீவிக்க உள்ளே சென்று, ஆயிர வருட அரசாட்சியில் முழுவதுமாக ஜீவித்து, மகிமையில் அவருடன் சென்று, திரும்பவும் வருவார்கள், பொல்லாங்கரின் உயிர்த்தெழுதல் நடைபெற்றவுடன், ஆயிர வருட அரசாட்சி... ஆயிர வருட அரசாட்சி முடிவடைந்த பின்னர்,... அப்பொழுது கிறிஸ்து சபையுடன் மேலே செல்வார், ஆயிர வருட கடைசியில் அவர் சபையுடன் திரும்ப வருவார். 104, கிறிஸ்து மூன்று முறை வருகின்றார். முதலாவதாக, தமது சபையை மீட்க வந்தார். அது சரி தானே? இரண்டாவது முறையாக, தமது சபையை பெற்றுக் கொள்ள வருகிறார். மூன்றாவது முறையாக அவர் சபையுடன் வருகிறார். பாருங்கள்? அவளை மீட்க வருகிறார்; அவளை எடுத்துக் கொள்ள வருகிறார், வாதைகள் இன்னும் மற்ற காரியங்களின் நேரத்தில் ஆகாயத்தில் எடுத்துக்கொள்ள வருகிறார்; ஆயிர வருட அரசாட்சிக்காக திரும்பவும் வருகிறார், ஆயிரம் வருடங்கள் முழுவதும் இருக்கின்றார், 105. அதன் பின் அந்த மகத்தான ராஜாவும் ராணியும் நியாயத் தீர்க்க கீழே வருகின்றனர். வெள்ளைச் சிங்காசன நியாயத்தீர்ப்பு வைக்கப்பட்டு புஸ்தகங்கள் திறக்கப்பட்டன. அதோ அங்கே மீட்கப்பட்டவர்கள் அங்கு நின்று கொண்டு இருக்கின்றனர். பரிசுத்தாவியினாலே பிறந்து ஜீவிக்கிற தேவனுடைய சபை அங்கே அந்த அழகுடன் நியாயத்தீர்க்க நின்று கொண்டிருக்கிறது, "புஸ்தகங்கள் திறக்கப் பட்டன, நியாயத்தீர்ப்பு வைக்கப்பட்டது, ஒவ்வொரு மனிதனும் இவ்வாறு நியாயத் தீர்ப்படைந்தான்'' அது தான் பாவிகள். ''வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது”. பரிசுத்தாவியால் நிரப்பப்பட்டுள்ள மணவாட்டிக்கு அல்ல, அவள் எடுக்கப்படுதலில் இருப்பதினால் அவள் அதில் இல்லை. 106. இந்த காலையில் நீங்கள் பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டிருந்தால், தேவனுடைய வல்லமை உங்கள் சரீரத்தின் ஒவ்வொரு தசையிலும் அசைந்து கொண்டிருக்கும் ஆனால், நியாயத்தீர்ப்பின் நாளிலே எப்படிப்பட்ட நன்மையை அது உங்களுக்கு அளிக்கும்? நீங்கள் ஏற்கனவே நியாயந் தீர்க்கப்பட்டு, ஏற்றுக் கொள்ளப்பட்டு, நிறைக்கப்பட்டு, ஏற்கெனவே கிறிஸ்து இயேசுவுடன் உன்னதங்களுக்குள் அமர மாற்றப்பட்டுள்ளீர்கள். நீங்கள் அப்படி இருக்கப்போகிறீர்கள் என்பதல்ல, நீங்கள் இப்பொழுதே மாற்றப்பட்டு இருக்கிறீர்கள், சரியாக இப்பொழுதே மாற்றப்பட்டு இருக்கிறீர்கள்! 107. "அவர் எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியும் இருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியும் இருக்கிறார். ஆகவே, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் கீழ் இருந்து பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்ட, இவ்வுலகத்தில் இருக்கின்ற ஒவ்வொரு மீட்கப்பட்ட நபருக்கும் நித்திய ஜீவன் இருக்கின்றது. அவன் அழிந்து போக முடியாது, அவன் ஏற்கனவே கிறிஸ்து இயேசுவிற்குள் உன்னதங்களில் அமர்ந்து இருக்கிறான், அவன் ஆக்கினைக்குள்ளாக வர முடியாது. அவன் ஏற்கனவே மீட்கப்பட்டுள்ளான். அது அற்புதமானதல்லவா? பாருங்கள்? ஏற்கெனவே மீட்கப்பட்டு, கிறிஸ்துவுடனே உன்னதங்களில் அவர்கள் அமர்ந்து இருக்கின்றனர். ஏற்கெனவே மகிமைப்படுத்தி விட்டார், ஏற்கெனவே மகிமைப்படுத்தி விட்டார். 108. ''சகோ, பில், வேத வாக்கியம் அப்படி கூறுகின்றதா?" என்று நீங்கள் கேட்கலாம். 109. இயேசு அதைக் கூறினார், அல்லது வேதவாக்கியம் அதைக் கூறுகிறது. அல்லது இதை எழுதின பவுல், எவர்களை நீதிமான்களாக்கினாரே, அவர்களை ஏற்கனவே மகிமைப்படுத்தியுமிருக்கிறார். அது என்ன? ஓ, என்னே! (என்னை மன்னியுங்கள்) ஏற்கெனவே மகிமைப்படுத்திவிட்டார்! அப்படியானால் நாம் பரிசுத்தாவியினால் நிறைந்து, தம்முடைய தசைகளும், அவையவங்களும் தேவனுக்குள் காக்கப்பட்டு இருக்குமானால், இது நமக்கு முடிந்து போய், நீ செல்லத்தக்கதாக ஒரு மகிமையின் சரீரம் ஏற்கனவே உனக்கு காத்துக் கொண்டிருக்கிறது. எவர்களை நீதிமான்கள் ஆக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார். 110. நான் சிறிது நேரத்திற்கு முன் கூறினது போன்று, அதை உங்களுக்குத் தெளிவாகப் புரியும்படி செய்ய எனக்கு போதுமான கல்வியறிவு இருந்தால் நலமாய் இருக்கும், போதுமான வகையில் கூற என்னால் முடியவில்லை. நான் எதைக் குறித்து பேசுகிறேன் என்பதை அறிந்திருக்கிறேன், ஆனால் நான் கூற நினைக்கும் விதத்தில் அதைக் கூறிட என்னால் முடியவில்லை. 111. (ஒலிநாடாவில் காலி இடம்- ஆசி). சிவந்த சமுத்திரம்... யூதர்கள், செல்வம் மிகுந்தவர்கள் மற்றும் எல்லாக் காரியங்களையும் அங்கே வயல்களில் வெளியே போடுகின்றனர். ஆனால் அதே காரியம் அவர்கள் உடைய கூடாரத்தை மறுபடியும் மாசுபடுத்தும். ஆம்! உலகத்தின் பட்டணங்களினின்று அவர்கள் சரியாக வருவார்கள். ரஷ்யாவும் வந்து, "அந்த காரியத்தை நாம் பெற்றாக வேண்டும். அங்கே யுரேனியம், மற்ற காரியங்களும் இருக்கின்றன. நாம் அதைப் பெற்றாக வேண்டும்'' என்று கூறுகிறது. அவர்கள் செல்கையில், அர்மெகேதோன் யுத்தம் நிகழும். அப்பொழுது தேவன் பள்ளத்தாக்கிலே இஸ்ரவேலுக்காக நின்று யுத்தம் செய்தாரே அதைப் போன்றே செய்வார். ஆனால் அது புறஜாதியாரின் காலம் முடிந்தவுடன் நிகழும், காலமானது முடிவுற்ற.... கேள்விகளும் பதில்களும்..... 112. (ஒலிநாடாவில் காவி இடம்) இப்பொழுது இந்த கேள்வியைக் கேட்ட அருமையான நபருக்கு, இது தான் என்னுடைய தாழ்மையான கருத்து. 10. அந்த நாட்களில் இருந்த அந்த இராட்சதர்கள் யார்? 113. இப்பொழுது ஜோசபஸ் அங்கே... எனக்குத் தெரியும், நமது சபை, நீங்கள் என்னை போன்று தான் இருக்கிறீர்கள். நான்- நான் ஒரு ஏழாவது வகுப்பு வரை படித்த ஒரு பேதை, நான் - நான் கல்வியறிவைக் குறித்தோ மற்றவைகளைக் குறித்தோ கவலைப்படுவதில்லை, சுவிசேஷத்திற்கு இருக்கின்ற தடைகளிலே அது தான் மிகப் பெரிய தடை என்று நான் கருதுகிறேன். ஆனால் இன்னுமாய், சில சமயங்களில் ஒன்று அல்லது இரண்டு புத்தகத்தை நான் எடுக்கிறேன். இப்பொழுது என்னைப் போன்ற மக்களிடையே நான் கொண்டிருக்கின்ற தொடர்பு என்னவெனில் நாம் எல்லாரும் ஒரே கோட்டில் உள்ளோம், நாம் சாதாரண மக்களாயிருக்கிறோம். நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். வேதம் "சாதாரண மக்கள் அவருடைய உபதேசத்தை விருப்பத்தோடு கேட்டார்கள்" என்று கூறுகின்றது. அங்கே வேறொரு பிரிவினராகிய செல்வந்தர் இருந்தனர். ஆனால் சாதாரண மக்களோ... நம்மைப் போல மிகவும் சாதாரண மக்கள், தேவனை நேசித்து இந்த உலகத்தைக் குறித்து அவ்வளவு அக்கறைக் கொள்ளாமல், தங்கள் குடும்பத்துடனும் பிள்ளைகளுடனும், இருக்கும் மக்கள், நாம் தேவனை நேசித்து சபைக்கு செல்ல விரும்பும் மக்கள் ஆவோம். அவருடைய ராஜ்ஜியத்திற்காக நமது துணிகளையும், எதையாகிலும் கொடுப்போம். நாம் அவரை நேசிக்கின்றோம், நாம் எதையும் செய்வோம், சாதாரண மக்கள் தான் அவருக்குச் செவி கொடுத்தனர். இன்றைக்கும் அதே போன்று தான், சாதாரண மக்கள் அவருடைய உபதேசத்தை விருப்பத்தோடு கேட்கின்றனர். 114. இப்பொழுது ஐசுவரியவானுக்கு உலகத்தைக் குறித்து சிந்திக்க நிறைய காரியங்கள் உண்டு, பாருங்கள். அங்கே இருக்கும் அவனிடம் நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது. அவன் இதற்கு கவனமே செலுத்த மாட்டான். ஆனால் சாதாரண மக்கள் அவருக்கு மகிழ்ச்சியாய் செவி கொடுத்தனர். 115. இப்பொழுது ஜோசபஸ் என்பவர் எழுதியிருக்கிறார்... இப்பொழுது ''தேவ குமாரர்கள்” மனுஷக்குமாரத்திகளை பெண் கொண்டதைக் குறித்து அவருடைய வியாக்கியானம் இதோ இருக்கிறது. அவர் கூறினார். "பூமியின் மேல் இருந்த விழுந்து போன ஆவிகள்...'' 116. இப்பொழுது உங்களுக்குத் தெரியும்.., வெளிப்படுத்தின விசேஷம் 11-ஆம் அதிகாரம்... அல்லது 7-வது என்னை மன்னி... வெளிப்படுத்தல் 12-வது அதிகாரம் சூரியனில் நின்று கொண்டிருந்த ஸ்திரி. ''சிவப்பான பெரிய வலுசர்ப்பம், தன் வாலைக் கொண்டு நட்சத்திரங்களில் மூன்றில் இரண்டு பங்கை இழுத்து பூமியில் விழுத்தள்ளிற்று" அது சாத்தான் என்று நாம் அறிந்து கொள்கிறோம், ஆதியிலே அவன் வடதிசைகளில் தன் ராஜ்ஜியத்தை ஸ்தாபித்தான். மிகாவேலினுடையதை விட அது அழகாக இருக்க வேண்டும் என்று அவன் விரும்பினான். ஒரு நாள் அவன் பரலோகத்தில் யுத்தத்தை அறிவித்தான். மூன்றில் இரண்டு பங்கு தேவ தூதர்களை தன்னுடன் இழுத்துக் கொண்டான். அது சரியா? 117. அந்த காரணத்தால்தான் நாம் சிறுபான்மை மக்களாக இருக் கின்றோம். நான் கருதுவது அந்த அந்த பக்கம், இன்று காலையில் சிறுபான்மையாயுள்ள நாம்-பரிசுத்த ஆவியால் பிறந்து கிறிஸ்துவ பரிமாணத்தில் உள்ள நாம், “அந்த - அந்த சிறுபான்மையாய் இருக்கின்றோம். அது சரி. 118. ஆதியாகமத்தில் எழும்பி வருகின்ற அந்த ஆவிகளை நீங்கள் கவனிப்பீர்களானால், அது எழும்ப ஆரம்பிக்கின்றது. அந்த அழகான, மிகவும் நேர்த்தியான, உயர்தர சபை வழிபாட்டைக் கவனியுங்கள். அது காயீனிடம் இருந்ததைக் கவனியுங்கள். இன்றைக்கும் அதைக் கவனியுங்கள். அது சரியாக வந்து அந்த பரிசேயர்களுக்குள் புகுந்தது. அங்கே இரண்டு வகையினர் இருந்தனர். பரிசேயர், சதுசேயர். பாருங்கள். இப்பொழுது அது சரியாகச் சென்று கொண்டு இருக்கின்றது. கத்தோலிக்கத்தில் மகத்தான அசைவுகளில், அழகான ஸ்தலங்களில் அது உள்ளதைப் பாருங்கள், 119. நல்லது, ஒரு சிறிய ஆட்டுக்குட்டியுடன் இருந்த ஆபேலை கவனியுங்கள். பாருங்கள். ஒரு சாதாரண காரியம். இயேசுவின் நாட்களில் அது இருந்ததைக் கவனியுங்கள். வேத வாக்கியங்கள் முழுவதிலும் அது செய்கிறதைக் கவனியுங்கள், அது எப்படி இருக்கிறது என்பதைப் பாருங்கள். தேவன் காலங்கள் தோறும் தம் சபையை அழைத்தபோது, நாம் அந்த நாளில் நாம் சரியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அந்த சிறிய கோடு வேதம் முழுவதும், முழு வழியிலும் அந்த சிறிய சிவப்புக் கோடு ஓடுகின்றது, வேதம் முழுவதிலும் அது ஓடுகின்றது. அது இரத்தத்தால் கழுவப்பட்ட மக்கள் உடையது. கவனியுங்கள்.! 120. இப்பொழுது எனது கருத்தின்படி இந்த "தேவ குமாரர்”, நீங்கள் நிச்சயமாக... ஜோசபஸ் என்ன கூறினார் என்பது அவருக்குத் தெரியாது என்று கூறுவதன் மூலம் நான் அவருடன் ஒத்துக் கொள்ளாமல் இருக்கவோ அல்லது அவரை விட அறிவாளியாகவோ நான் இருக்க விழையவில்லை, ஆனால் நான் எப்படி மனிதனாயிருக்கிறேனோ அவ்வாறே அவரும் மனிதன் தான். அவர் எப்பேர்ப்பட்ட அறிவாளியாய் இருந்தாலும் சரி, அவர் ஒரு மனிதன் தான். அவர் செய்த ஒரே காரியம் அவர் பழைய வேத வசனங்கள், பழைய புனித சின்னங்கள் மற்றும் மேலும் சிலவற்றை ஆராய்ந்து பார்த்தாகும். ஆனால் நம்மிடையே உள்ள பரிசுத்த ஆவியைப் போன்ற மேலானது எதுவும் அவரிடம் இல்லை, இப்பொழுது, அவர் தன் இயல்பான மனம் எப்படி செல்கின்றதோ அப்படி... 121. ஆனால் ஆவிக்குரிய மனதில் நாம் எடுத்துக் கொள்கிறோம். அந்த ''தேவகுமாரர்" தூதர்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகிறார்கள். அப்படித் தான் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் நம்புகிறேன்... 122. இப்பொழுது, ஜோசபஸ் அதே காரியத்தைத்தான் கூறினார், ஆனால் அவர் ''அவர்கள் மனித மாம்சத்தில் பலவந்தமாகப் புகுந்து கொண்டு... மனுஷக் குமாரத்திகளைக் கொண்டார்கள்” என்று கூறினார். இப்பொழுது நாம் எல்லாரும் கலப்பு சபையாய் கூடியிருக்கிறோம். நாம் இந்த காலை எல்லாரும் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள், சிறுமிகள், பெரியவர்களாக, கலந்துள்ள வித்தயாச மானவர்களாக இங்கள்ளோம். இங்குள்ள வயது வந்தோர் புரிந்து கொள்ள இதை நான் பேசுகிறேன். அவர் "இந்த தூதர்கள், பெண்களைப் பார்த்து, மனிதன் ஸ்திரியோடு வாழ்வதைப் பார்த்த போது இச்சைக் கொண்டு, மனித சரீரத்தில் பலவந்தமாகப் பிரவேசித்தார்கள். ஆகையால்... அவர்கள் மனுஷக் குமாரத்திகளைக் கொண்டார்கள்" என்று கூறுகிறார். 123. நல்லது, நான் - நான் அதை நம்புவது கிடையாது. அவர்கள் அங்கே கானானில் பிறந்தவர்கள் என்னும் இக்காரியத்தை நான் நம்புகிறேன். அவர்கள் நோத் தேசத்திற்கு அனுப்பப்பட்ட காயீன் கூட்டத்திலிருந்து பிறந்தவர்கள் ஆவர். அவனை யாரும் கொல்லக் கூடாதபடிக்கு அவன் மேல் ஒரு அடையாளம் இருந்தது. ஏனென்றால் அவன் கொலை..... அவன் தன் சகோதரனைக் கொலை செய்தான், ஆனால் கவனியுங்கள், இஸ்ரவேலர் அங்கே சென்ற போது அம்மக்கள் சிலரைக் கண்டனர். அவர்கள் மிகப் பெரியவர்களாய் இருந்தனர். ஆகவே அவர்கள் பக்கத்தில் நின்றால் தாங்கள் வெட்டுக் கிளிகளைப் போலக் காணப்படுவோம் என்றனர். அது சரி தானே? நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு பின்னர், மகத்தான, பெரிய முரட்டு மனிதர்கள் இருந்தனர். சில சமயங்களில் குழிகளைத் தோண்டுகையில், இம் மகத்தான மனிதர்களின் பிணங்களைக் கண்டெடுத்துள்ளனர். 124. இப்பொழுது அது எங்கிருந்து வந்தது என்று நான் நினைக்கிறேன். இப்பொழுது, என்னுடைய போதகத்தில் சிறிதானதை கூறுகிறேன். சபை மக்களே, பாருங்கள். காயீன் சாத்தானுடைய குமாரன் என்று தான் நினைக்கிறேன். இதனுடன் நீங்கள் உடன்பட மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும். என்னுடைய சொந்த சபை செய்கின்றது. ஆனால் அது இன்னுமாய் தேவன் வித்தியாசமானதை என்னிடம் காண்பிக்கும் வரை, அவன் சாத்தானுடைய குமாரன் தான் என்ற காரியத்தை நான் - நான் அதே காரியத்தைத் தான் விசுவாசிப்பேன். ஏனென்றால் அந்த தேவனற்ற, கொலை பாதகமான ஆவி தேவனிடத்தில் இருந்து வருகின்றது என்று என்னால் பொருத்திக் கூற முடியவில்லை. இல்லை ஐயா. அவனுடைய தந்தை... இங்கே, சர்ப்பத்தின் மேலே சாத்தான் ஏறின போது, அவன் தன் தந்தையைப் போலவே இருந்தாக வேண்டும். 125. சர்ப்பம் ஒரு ஊரும் பிராணி அல்ல, சாபம் அதை ஊரும் பிராணி ஆக்கிற்று. அது ஒரு மனிதனைப் போலவே நிமிர்ந்து நடந்தது. அது அங்கே இருந்த ஸ்திரீயினிடம் சென்றது. அவள் விபச்சாரம் செய்து தன் முதல் குமாரனான காயீனைப் பெற்று எடுத்தாள், தன் தந்தையின் சுபாவம். அந்த பெரிய மிருகம் ஒரு மனிதனைப் போலவே நிமிர்ந்து நடந்தது. இதிலிருந்து தான் இந்த இராட்சதர்கள் வந்தனர் என்று நான் நம்புகிறேன். ஆம், அது முற்றிலும் சரி, இப்பொழுது, அது என்னுடைய சொந்த எண்ணம், அது ஒரு வேளை நான்- நான் தவறாய் இருக்கலாம். இது என்னுடைய கருத்து, பாருங்கள். ஆனால் அவர்கள் பெரிய மனிதர்களாயிருந்தனர். 126. நீங்கள் கவனித்திருப்பீர்களானால், தேவன் ஆதாமிற்கும் ஏவாளுக்கும் முன்பாக நின்று கொண்டு ''நீ மண்ணிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ மண்ணுக்குத் திரும்புவாய். நான்..." என்று கூறுகிறார். 127. "ஏனெனில் நீ... செவி கொடுத்ததனால்... உன் புருஷனுக்கு பதிலாக மிருகத்திற்கு செவி கொடுத்ததால் நீ உலகத்திலிருந்து ஜீவனை எடுத்து விட்டாய், ஆகையால் நீ அதை உலகத்திற்கு மறுபடியும் கொண்டு வருவாய்." 128. ஆகவே, அவர், "சர்ப்பமே, உன் கால்கள் உன்னை விட்டு அகலுவதாக. பாருங்கள், நீ இனி நடக்கப் போவதில்லை. நீ மிருகமாய் இருக்கப் போவதில்லை, நீ இப்பொழுது ஊரும் பிராணியாய் ஆகப் போகிறாய். நீ உன் வயிற்றினால் நகர்வாய், மண் தான் உன்னுடைய ஆகாரமாக இருக்கும்,” என்றார். 129. அங்கே தான் நான் நினைக்கிறேன்... அந்த முரட்டு சுபாவமுடைய அந்த மிருகம் இந்த ஸ்திரீயுடன் வாழ்ந்து, இந்த பிள்ளையைப் பெற்றாள். பெரிய, உயரமான, வயது கொண்ட மனிதன். அது பாதி மனிதத் தன்மையும், பாதி மிருகத் தன்மையையும் கொண்டிருந்தது. காயீன் அந்த சுபாவத்தைக் கொண்டிருந்தான். ஆகவே பிறகு அவன் வெளியிற் சென்றான். அவனுக்குப் பிள்ளைகள் பிறந்தனர். அவர்கள் ஆதியிலே இருந்த தன் தகப்பனைப் போன்று மிருகத்தனமாகவும், மாம்சீக இச்சை உடையவர்களாயும் இருந்தனர். அந்த பழைய இச்சையுடைய மிருகம் இந்த குமாரத்திகளையும் மற்றவைகளையும் கண்டு, மனுஷக் குமாரத்திகளையும் கொண்டனர். அது சரி. 130. இந்த மனிதர்களைக் கொண்டு வந்த அதே விழுந்து போன ஆவிகள், அவை சந்ததி சந்ததியாக மக்கள் மேல் இறங்கின, நினைவில் கொள்ளுங்கள், அப்பொழுது வாழ்ந்த அதே ஆவிகள், இன்றைக்கும் வாழ்கின்றன... 131. இன்றைக்கு அதைக் கவனியுங்கள்! நல்லது, நம் நாட்டில் மக்கள் உள்ளனர். இப்பொழுது, நான். இந்த, நான் ஒரு அமெரிக்கன் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் இதை நான் உங்களுக்குக் கூறட்டும், நான் உங்களுக்கு ஒன்றைக் கூறட்டும், உலகத்திலுள்ள நாடுகளில் பிரான்ஸ் நாட்டிலுள்ள பாரீஸைக்காட்டிலும், எனக்குத் தெரிந்த வரை இந்த நாடே மிகக் கீழ்த்தரமான நாடாய் இருக்கின்றது. இது மிகவுமாய் இழிந்த நிலையில் உள்ளது! 132. ஏன், ஆப்பிரிக்கா, ஸ்வீடன் நாடுகளைச் சேர்ந்த அயல் நாட்டு மக்கள்... அங்கே அவர்கள் "அமெரிக்க மக்களாகிய உங்களுக்கு என்ன ஆயிற்று, உங்கள் ஸ்திரீகளுக்கு நீங்கள் மரியாதை கொடுப்பதே இல்லையே? வானொலிப் பெட்டியில் ஒலிபரப்பப்படும் பாடல்களெல்லாம் ஸ்திரீகளைக் குறித்து மிகவும் கேவலமாக, இழிவாக உள்ளதே, உங்கள் ஸ்திரீகளுக்கு அங்கு மரியாதை என்பதே கிடையாதா?" என்று கூறுகின்றனர். 133. நம்முடைய பாடல்களெல்லாம் ஸ்திரீகளைக் குறித்த, பாலுணர்வைக் கொண்டதும், இச்சையுடையதும், மற்றக் காரியங்களை உடையதுமாய் உள்ளது. ஏனென்றால் பிசாசு அதைத் தன் கட்டுக்குள் கொண்டு வந்து இருக்கின்றான். அது முற்றிலும் சரி. பழைய ஹாலிவுட், தொலைகாட்சி, மற்ற எல்லாமும் அந்த கேவலமான, இழிவான, தேவனற்ற காரியங்களை வெளியே அனுப்புகின்றன, அது செய்தித் தாள்கள், பத்திரிக்கைகள், விற்கும் இடங்களிலும், மற்ற இடங்களிலும் செல்கின்றன. எல்லாவற்றிலும் ஸ்திரீகள் ஆடைகளை அவிழ்த்துப் போட்டு இருப்பதும், மற்றவைகளும் இடம் பெறுகின்றன. அது சரியாக ஆதியில் என்னவாய் ஆரம்பித்ததோ அதைப் போலவே முடிவும் பெறுகிறது. அது ஒரு அவமானமாகும்! 134. ஒழுக்கம் என்கிற காரியத்திற்கு வருவோமானால், ஸ்திரீயின் ஸ்தானம் தான் எந்த ஒரு தேசத்திற்கும் முதுகெலும்பாய் இருக்கின்றது. நீ தாய்மையை உடைப்பாய் ஆனால், நீ உன்னுடைய தேசத்தை உடைத்து விட்டாய். நாம் இந்த இடத்திற்கு வந்துள்ளோம். நமது ஸ்திரீகள்... புகை பிடித்துக் கொண்டும், விஸ்கி குடித்துக் கொண்டும்... மற்றவைகளைச்செய்து கொண்டும் இருக்கிறார்கள், அது வெட்கக்கேடு, அவக்கேடு ஆகும். 135. ஒரு வாலிபன் ஒழுக்கம் நிறைந்த, கன்னிகையை தன் மனைவியாக அடையத் தேடுவானானால், அத்தன்மை கொண்ட ஒரே ஒரு ஸ்திரீயை அடைய அவன் சில நல்ல பழைமையான, பரிசுத்தாவி சபைக்குத் தான் செல்ல வேண்டும். அது முற்றிலும் சரி. 136. அது முட்டாள்தனமானது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், சகோதரனே அது உண்மையா இல்லையாவென்று நீங்கள் ஆராய்ந்து அறியுங்கள், கண்டு கொள்ளுங்கள். அது வெட்கக்கேடு! அது சரி. அவர்கள் தேவ குமாரர்கள் அங்கே... இப்பொழுது, அதை நான் விளக்கி விட்டேன்.. பாருங்கள், அது... 137. "ஏன், சகோதரன் பில், கர்த்தரிடத்திலிருந்து ஒரு குமாரனைப் பெற்றேன் என்று ஏவாள் கூறினதாக வேதம் உரைக்கிறதே” என்ற வேறொரு கேள்வி இன்றைக்கு என்னிடத்தில் உள்ளது. அது முற்றிலும் சரி. அது கர்த்தர் இடத்திலிருந்து தான் வர வேண்டியதாயிருந்தது. தேவன் தான் ஒரே சிருஷ்டிகர். அவர், பிசாசை தேவன் சிருஷ்டித்தார். அது எப்படி-? தேவன் பிசாசை சிருஷ்டித்தார். ஒவ்வொரு விழுந்து போன தூதனையும் தேவன் தான் சிருஷ்டித்தார். அது சரி தானே? ஏன், நிச்சயமாக. அது அவர்களுடைய தெரிந்து கொள்ளுதலாயிருந்தது, அவருடையது அல்ல. அவர் உன்னை உண்டாக்கினார், அதைக் குறித்து நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? அவர்களைப் போலவே நீயும் நியாயந்தீர்க்கப்படுவாய். அது அவ்விதமே, நிச்சயமாக! 138. இவர்கள் தேவனுடைய குமாரர்கள், ஆனால் அவர்கள் கிருபையிலிருந்து விழுந்து, இந்த மிருகத்தனம் வாய்ந்த மனிதனிற்குள் வந்தனர். அவர்கள் வெளியில் சென்று இச்சித்தனர். அவர்கள் ஸ்திரீகளைப் பார்த்த போது, அப்படியே எடுத்துக் கொண்டனர். ஏன், அவர்கள் இன்னும் இங்கே இருக்கின்றனர். அமெரிக்காவின் ஒழுக்கக் கேடானது தேவனுடைய ஆவி இல்லாத மனிதர்களால் நிறைந்துள்ளது. அவர்கள் ஒரு குழந்தையை அதன் தாயின் கரங்களிலிருந்து பிடுங்கி வீசியெறிந்து, அவளை மானபங்கப்படுத்துகின்றனர். தேவனில்லை என்றால் அவன் - அவன் மிருகத்தைவிடக் கேவலமானவனாயிருக்கிறான். அவன் இன்னுமாய் மிருகத் தனத்தை, தேவன் அற்ற சுபாவத்தை கொண்டிருக்கிறான். மனிதன்.. அவர்கள் ''மதம் ருசியாக உள்ளது, எனவே மனிதன் மதத்தின் பேரில் பைத்தியம் கொண்டான்” என்கின்றனர். மதம் தான் ஒரு மனிதனுக்கு சரியான மனநிலைமையை அளிக்கும், அது இயேசு கிறிஸ்துவின் மதம் ஆகும். 139. கிறிஸ்துவை நீ கண்டடையும் வரை உனக்கு சரியான மன நிலைமை இராது என்பதை வேதத்தைக் கொண்டு என்னால் நிரூபிக்க முடியும். அது சரி. அது மிகவும் கடினமானதாய் இருக்கிறது. ஆனால் அதை வேதத்தைக் கொண்டு என்னால் நிரூபிக்க இயலும். அது சரி. நீ இயேசு கிறிஸ்துவைக் கண்டடையும் வரை நீ மிருகத்தனமாகவும், இச்சை கொண்டவனாகவும், எல்லாவற்றையும் கொண்ட வனாக இருப்பாய். அவர் தான் அந்த அருமையானவர், 140. இப்பொழுது, கர்த்தரைக் குறித்து மக்கள் மிகவுமாக ஆராய்கிறார்கள், மிகவும் கடினமாகச் சிந்திக்கிறார்கள், மிகவும் முன்னே செல்ல பிரயாசப்படுகின்றனர் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதனால் சில சமயங்களில் அவர்களுக்கு மனநிலை பாதிக்கப்படுகின்றது. நீங்கள் அதை விட்டு விடவேண்டும்! நீங்கள் அதைச் செய்யத் தேவை இல்லை. நீங்கள் செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம் அவரில் அன்பு கூர்ந்து, அப்படியே அவரை நேசித்து சென்று கொண்டே இருக்க வேண்டும். அதுசரி. அது உங்களைத் தானே எதற்குள்ளாகவோ தள்ளிக் கொண்டோ, நீங்கள் இல்லாத ஒன்றாக உங்களை ஆக்கிக் கொள்ளவோ அல்ல, முன்னே சென்று தேவன் உனனை எப்படி பயன்படுத்த விரும்புகிறாரோ அவ்வாறே உங்களை விட வேண்டும். உங்களைத் தாமே நீங்கள் ஒப்புக் கொடுத்து, கீழ்ப்படிந்து, சந்தோஷமாக, பாடி துதித்து சென்று கொண்டேயிருங்கள். அது தான் வழியாகும். 141. வேதம் “தேவனிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாக நடைபெறும்" என்று கூறுகிறது. ஆகவே நீங்கள் அவரில் அன்பு கூர்வதில் நிச்சயம் உள்ளவர்களாய் இருங்கள். நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது அது ஒன்று மாத்திரமே. ஆமென்! அவரில் மாத்திரம் அன்பு கூர்ந்து நடந்து செல்லுங்கள். ''கர்த்தாவே நான் உம்மை நேசிக்கிறேன், நான் உம்மை நேசிப்பதை நீர் அறிவீர்” என்று கூறுங்கள். ''நீங்கள் இதை நேசிக்கிறீர்களா?" "இல்லை, ஐயா, கர்த்தாவே நான் உம்மை, நேசிக்கிறேன்" பாருங்கள்? 142. ''நல்லது, நீ... நீ ஒரு மகத்தான பிரசங்கியாக ஆக விரும்புகிறீரா? நீங்கள் இதைப் போன்று ஆக விரும்புகிறீரா?'' என்று கூறும்போது, 143. "இல்லை, இப்பொழுது கர்த்தாவே, என்ன... அப்படி நான் இருக்க வேண்டும் என்று நீர் விரும்புவீரானால், அப்படியே ஆகட்டும். நீர் அப்படி. விரும்பவில்லையென்றால், ஆமென், நான் இங்கே சபையின் மிதியடி ஆகவே சரியாக இருப்பேன்.'' 144. "நல்லது, இப்பொழுது இதைக் குறித்து நீர் ஏதாவது ஒன்றைச் செய்வீரானால் மக்களும் உமது சபையைக்குறித்து அதிகமாக நினைப்பார்கள் என்று நான் நம்புகிறேன்'' 145. ''மக்கள் என்ன நினைத்தாலும் எனக்குக் கவலை இல்லை, கர்த்தாவே, நீர் என்ன நினைக்கின்றீர் என்பதையே நான் அறிய விரும்புகிறேன். நான்- நான் உம்மோடே இருப்பேன், நீர் என்னிடம் என்ன செய்ய வேண்டும் என்று கூறுகின்றீரோ அதைச் செய்வேன், நான் எல்லாவற்றையும் நேசிப்பேன். நிச்சயமாக." ''நல்லது, இப்பொழுது சகோதரி இன்னார் இன்னாரை அறிவீரா, நீர் அவளை நேசிப்பதில்லை." "ஆம், நான் நேசிக்கிறேன் கர்த்தாவே, ஆம் நிச்சயமாக அவளை நான் நேசிக்கிறேன்." "ஏன்?'' 146. "ஏனென்றால் நீர் அவளை நேசிக்கிறீர், நீர் என்னுள்ளும் இருக்கிறீர். ஆகையால் நான் அவளை நேசித்து தான் ஆக வேண்டும், ஏனெனில் நீர் எனக்குள் இருந்து அவளை நேசிக்கின்றீர்" வ்யூ. அது தான். 147. நான் நினைக்கிறேன், அந்த மிருகங்கள் அங்கே... விழுந்த அந்த மிருகம், பாருங்கள். 11, "தேவ குமாரர்” என்றால், அவர்கள் தூதர்களா அல்லது பரலோகத்தில் இருந்து வந்த ஆவிகளா? 148. அது தான் அந்த நபரின் கேள்வி. அது சரி. அவர்கள் தூதர்கள் அல்ல என்று நான் நம்புகிறேன். பாருங்கள். அவைகள் ஜீவிகளாய் இருந்தன, "தேவகுமாரர்" என்று வேதம் கூறுகிறது. தூதர்கள் அல்ல, அவர்கள் தேவ குமாரராய் இருந்தனர், அவர்கள் பரலோகத்திலிருந்து பூமிக்கு வந்தனர். வந்து மாம்சத்திற்குள் வைக்கப்பட்டனர்; அவைகள் தாங்களே மாம்சத்திற்குள் நுழைந்து கொள்ளவில்லை " இல்லை. இயேசு கிறிஸ்துவைத் தவிர, மற்ற எல்லா மாம்சமும் பாலுணர்வின் மூலம் பிறந்த ஒன்று என்று நான் நம்புகிறேன். கன்னிப் பிறப்பின் மூலம் பிறந்த நபர் இயேசுகிறிஸ்து ஒருவர் தான் என்று நான் விசுவாசிக்கிறேன். ஜோசபஸ் மகத்தான சரித்திர அறிஞராயிருந்தாலும்கூட, நான் தான் அதைக் குறித்து அவருடைய கருத்துடன் இணங்குவதில்லை. ஆனால் அவைகள் இயற்கைக்கு மேம்பட்ட ஜீவிகள் என்றும், அவை கீழே வந்து மனிதனின் ஆவியை ஆட்கொண்டன என்றும் நான் நம்புகிறேன். அவைகள் இங்கே சரியாக ஜெபர்சன்வில்லில் இன்றைக்கும் இருக்கிறது, சுற்றி நடந்து கொண்டிருக்கிறது என்று நான் நம்புகிறேன். அதே மிருகத்தனமாக, இச்சைக் கொண்ட, தேவனற்ற ஆவிகள் இன்றைக்கு மனிதர்களுக்குள், இருக்கின்றது. இப்பொழுது ஒரு நாளிலே இம்மனிதர் மரிப்பர்; வேறொரு சந்ததி இருக்குமானால், அவைகள் அவர்கள் மீது வரும். 149. நினைவில் கொள்ளுங்கள். தேவன் தம்முடைய மனிதனை எடுக்கின்றார். ஆனால் தம்முடைய ஆவியை எடுப்பதில்லை, இது பெந்தெகொஸ்தேயில் அவர்கள் பெற்ற அதே பரிசுத்தாவியாகும், 150. அதே பிசாசுதான் (மதங்கள் என்ற வடிவில்) கிறிஸ்துவை சிலுவையில் அறைந்தது, அதே பிசாசு தான் இன்றைக்கு நீண்ட அங்கிகளை அணிந்து சபையில் இருக்கின்றது. ஆகவே அவர்கள்... அவர்கள் சரீரத்தின் மேல் உள்ள நீண்ட அங்கிகளை நான் குறிப்பிடவில்லை. உங்கள் ஆத்துமாவின் மேல் உள்ள அங்கியை நான் குறிப்பிடுகிறேன். பாருங்கள், "ஏன், அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன, அப்படிப்பட்ட ஒரு காரியம் இல்லவே இல்லை. "நீங்கள் நவீன பரிசேயர்களைக் குறித்து பேசுகின்றீர்கள்! சரியாக அது தான். 151. எப்படியாயினும், வேதம் ''அவர்கள் தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு" என்று கூறுகின்றது. அவர்கள் இன்னுமாய் தேவ குமாரர்களாய் இருக்கின் றனர். ஆனால் விழுந்து போன நிலையில் அவர்கள் உள்ளனர். நான் என்ன கூற முனைகின்றேன் என்பதை பாருங்கள்? சிலர் ஊழியக்காரர்களாய் இருக்கிறார்கள், சிலர் மூப்பர்களாய் இருக்கிறார்கள், சிலர் உதவியாளர்களாக இருக்கிறார்கள், சிலர் பிஷப்புகளாக இருக்கிறார்கள், எவ்வளவு முடியுமோ அவ்வளவு மதப்பணி ஆர்வமிக்கவர்களாய் அவர்கள் இருக்கின்றனர். ஆனால் வேதம்... 152. இப்பொழுது, சகோதரனே, சிறிது நேரத்திற்கு முன் நீர் கேட்ட கேள்விக்கு நான் பதிலுரைக்கப் போகிறேன். யாரோ கூறினார்: 12. சகோதரன் பிரான்ஹாம், ''இந்த மனிதன் பரிசுத்தாவியைப் பெற்றிருக்கிறார், ஏனென்றால் 'இதை' செய்தார்" அல்லது "இந்த ஸ்திரீ பரிசுத்தாவியை பெற்று இருக்கிறாள், ஏனெனில் 'அதை' செய்தாள்” என்று அறிந்து கூற நான் விரும்புகிறேன். 153. இதை அறிந்து கொள்ள உங்களுக்கு உலகத்தில் ஒரு வழியும் கிடையாது. அது சரி. நீங்கள் அறிந்து கொள்ள உலகத்திலே ஒரு வழியும் இல்லை, நாம் ஒருவரையும் நியாயம் தீர்ப்பதற்காக அல்ல, தேவன் தான் நியாயாதிபதியாய் இருக்கின்றார், நியாயந் தீர்க்க நாம் இல்லை. பாருங்கள்? நீங்கள் சுவிசேஷத்தை மாத்திரம் பிரசங்கியுங்கள், வாழுங்கள்... 154. சில காலத்திற்கு முன் ஒரு மனிதன் என்னிடம் வந்தார். கடந்த இரவு நான் கூறியதைக் குறித்து பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். அவர் என் வீட்டிற்கு வந்து, "சகோதரன் பிரான்ஹாம் தான்-நான்-நான். விரும்பினது. நான் என் பாவங்களை அகற்ற விரும்புகிறேன். நான் ஒரு கிறிஸ்தவனாக இருக்க விரும்புகிறேன்” என்று கூறி அமர்ந்தார். 155. அவர் “சர்வதேச பிரசித்த பெற்ற, மகத்தான மனிதனாகிய பில்லிகிரகாம் என்னும் பெயர் கொண்ட நபரைக் குறித்து நான் கேட்டிருக்கிறேன். ஆகையால் அவருடைய கூட்டங்களுக்கு நான் சென்றேன், அவர் 'கிறிஸ்தவர்களாக இருக்க விரும்பும் எல்லாரும் உங்கள் கரங்களை உயர்த்தி கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள்' என்று கூறினார். ஆகையால் தான் என்னுடைய கரங்களை உயர்த்தினேன், அவர் 'இப்பொழுது நாமெல்லாரும் எழுந்து ஜெபம் செய்வோம்" என்றார். ஆகையால் நான் எழுந்து ஜெபித்தேன்.... (என்னை மன்னிக்கவும்)" எவ்வளவு உத்தமமாக ஜெபிக்க முடியுமோ அவ்வளவு உத்தமமாக ஜெபித்தேன்." ஆனால் அது எனக்கு ஒரு நன்மையையும் அளிக்கவில்லை . " என்றார். 156. அவர் "அதன் பிறகு நான் ஓரல் ராபர்ட்ஸ் கூட்டங்களுக்குச் சென்றேன். அவர், 'நான் அவரைக் குறித்து கேள்விபட்டிருக்கிறேன். அங்கே அவர்கள் அவ்வளவாய் மகிழ்ந்து களிகூர்வதைக் குறித்து நான் கேள்விப்பட்டு இருக்கிறேன்'' என்றார், மேலும் அவர், " "நான் ஓரல் ராபர்ஸிடம் சென்று 'ஒரு கிறிஸ்தவனாக மாற நான் என்ன செய்யவேண்டும்?' என்று கேட்டேன். அவர் “நீங்கள் அங்கே செல்லுங்கள்...' நான் பில்லி கிரகாமின் கூட்டத்தில் கைகளை உயர்த்தினேன் என்று கூறினேன். அதற்கு அவர் 'நீங்கள் அந்த கேள்வி கேட்கப்படும் அறையில் சென்று சந்தோஷமாக அந்நிய பாதைகளில் பேசும் வரை இருங்கள்," என்றார். அவர் மேலும், ''நான் அங்கே உள்ளே சென்று அந்நிய பாஷையில் பேச ஆரம்பிக்கும் வரை நான் ஜெபித்தேன், ஆனால் நான் வெளியே வந்த பிறகு அது எனக்கு ஒரு நன்மையும் அளிக்கவில்லை" என்று கூறினார். 157. அவர் ''.அதன் பிறகு நான் வேறொரு கூட்டத்திற்கு சென்றேன், அவர்கள் நான் பரிசுத்தமாக்கப்படவில்லை என்று என்னிடம் கூறினர். 'நீங்கள் பரிசுத்தமாக்கப் பட்டு, மகிழ்ந்து சப்தமிட வேண்டும், போதுமான சந்தோஷத்தைப் பெற வேண்டும் ஆகவே நான் சத்தமிடும் வரை ஜெபித்தேன், ஆனால் இன்னுமாய்," என்றார், 158. நான் ''சகோதரனே, அந்த எல்லாக் காரியங்களும் சரியானவைகளே, ஒவ்வொன்றும் நன்மையானதே. உன்னுடைய கரங்களை உயர்த்துதல், அந்நிய பாஷைகளில் பேசுதல், சத்தமிடுதல், அந்த ஒவ்வொரு காரியத்தையும் நான் விசுவாசிக்கிறேன், ஆனால் இருந்த போதிலும் அந்த காரியம் அதுவல்ல, அது இயேசு கிறிஸ்துவாகிய அந்த நபரை ஏற்றுக் கொள்வது ஆகும். பாருங்கள்?" பாருங்கள் அது.. 159. இவைகள் எல்லாம் தன்மைகளாகும். சத்தமிடுதல், அந்நிய பாஷைகளில் பேசுதல், ஓடுதல், குதித்தல், அழுதல், ஜெபம் செய்தல், பேசுதல் ஆகிய இவைகள் எல்லாம் தொடர்ந்து வருகின்ற தன்மைகள் மாத்திரமே. முதலாவது காரியம் கிறிஸ்து இயேசுவை ஏற்றுக் கொள்வது மாத்திரமே. பாருங்கள்? ஆகையால் அங்கே நாம் கூறத்தக்கதான சாட்சிகள் இல்லை. ஏனென்றால் ஒரு மனிதன் அழுகின்றான் என்பதினாலா? ஒரு மனிதன் மிகவுமாக அழுது, அழுது முதலைக் கண்ணீர் வடித்து, ஆனால் இன்னுமாய் அவன் தன்னால் இயன்ற மட்டும் மிகப் பெரிய பாவியாய் இருப்பதை நான் கண்டிருக்கிறேன். 160. கவனியுங்கள், இயேசுவிற்கு ஆடுகளைத் தவிர வேறொன்றும் கிடையாது. அது சரி தானே? மேய்ப்பன் தன் ஆடுகளை அறிந்திருக்கிறான். வெள்ளாட்டின் சப்தத்தை இங்கிருப்பவர்கள் யாராவது கேட்டிருக்கிறீர்களா? நல்லது, சகோதரனே, நீங்கள் வித்தியாசத்தை அறிந்து கொள்ள வேண்டுமானால் நீங்கள் மேய்ப்பர்களாய் இருத்தல் நல்லது. ஒரு வெள்ளாடு, செம்மறியாட்டைப் போலவே சப்தமிடும். ஹ. அந்த பழைய வெள்ளாட்டை எங்கேயாவது நிறுத்தி வைத்து, ஒரு சிறிய செம்மறியாட்டை வேறு பக்கமாக நிறுத்திவீர்களானால், "பா...'', "பா...'' என்ற சத்தம் ஒரே விதத்தில் அமைந்து இருக்கும் 161. அவர்கள் பீடத்தின் கீழே ''ஓ தேவனே'' என்று அழுது ''ஓ தேவனே என்று விம்மிக் கொண்டிருப்பதை நான் கேட்டிருக்கிறேன், ஆனால் முழு நேரமும் வெள்ளாடாய் இருக்கின்றனர். அது சரி, சப்தமிடுதல்? நல்லது என்னே, அவர்கள் மிகவுமாய் சப்தமிட்டு, தரையில் இங்கும் அங்குமாக ஓடி மேலும் கீழுமாக குதிப்பதை நான் கண்டிருக்கிறேன். 162. இப்பொழுது, “'சகோதரன் பிரான்ஹாமே, அழுவதில் நீங்கள் நம்பிக்கைக் கொள்வதில்லையா?” என்று நீங்கள் கூறலாம். 163. நீங்கள் என்னைத் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள், நிச்சயமாக, அழுவதில் நான் நம்பிக்கைக் கொண்டுள்ளேன். ஆனால் அது சாட்சியைக் குறிக்கவில்லை என்று நான் கூறுகிறேன், பாருங்கள், ஏனென்றால் அவை இரண்டுமே அழுகின்றன. அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிகமாக சப்தமிடுகின்றனர் என்பதை நான் கண்டிருக்கிறேன். ஆம் ஐயா. பிறகு அவ்வாறே இருந்துவிடுகின்றனர். நான் எதைக்குறித்து பேசிக்கொண்டிருக்கின்றேனோ, அவ்விதமாக உங்களில் அநேகர் இருந்து வருகின்றனர். அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசுவதை நான் கேட்டு இருக்கிறேன், பிறகு அவர்கள் வெளியிற்சென்று எவ்வித வாழ்க்கையையும் வாழ்ந்து எதையாகிலும் செய்கின்றனர். ஆகவே, அது ஒரு அடையாளம் இல்லை. ஆனால் நீங்கள்... நீங்கள் அதற்கு எதிராக உள்ளீர்கள், "' என்று கூறலாம். 164. ஓ, இல்லை. அந்நிய பாஷைகளில் பேசுவதில் நான் விசுவாசம் கொண்டு இருக்கிறேன், அது சபையில் உள்ள தேவனுடைய வரம் ஆகும். அதை நான் வெளியே எடுத்தேனென்றால், நான் தேவனுடைய ஒரு பாகத்தை வெளியே எடுத்து விடுவேன். நான் என்னுடைய நாவை வெளியே எடுத்தால் என்னுடைய நாக்கு என்னுடைய சரீரத்தின் ஒரு அவயம், அப்படியானால் முழுமையான சரீரம் எனக்கு இல்லை. இயேசு கிறிஸ்துவின் சரீரத்திற்குள் நாவுகள் இருக்கின்றன. இங்கே இருக்கின்ற இயேசு கிறிஸ்துவின் சரீரம் நாவுகளைக் கொண்டதாய் உன்ளது; ஆகையால் நீ அதை வெளியே எடுத்தால், கிறிஸ்துவினுடைய ஒரு பாகத்தை நீ வெளியே எடுக்கின்றாய். ஆனால் அது தான் சரீரம் என்று நீ இன்னுமாய் அதைக் கூற முடியாது, பாருங்கள். பாருங்கள்? பாருங்கள்? 165. ஆனால் அது கிறிஸ்து இயேசுவை அந்த நபரை ஏற்றுக் கொள்வதாகும், அதன் பிறகு இந்த மற்றைய காரியங்கள் சரியாக உள்ளே வந்து ஒன்றோடு ஒன்றாக இணைந்து பொருந்திவிடும். ஆகவே இக்காலையில் இச்சரீரத்தின் ஒவ்வொரு அங்கத்தினனும் இந்த சிறிய மக்கள் குழு, நாம் ஒவ்வாருவரும் திரைகளை நம் பக்கமாக இழுத்து வைத்து, இங்கிருக்கும் ஒவ்வொருவரும் கிறிஸ்து இயேசு என்னும் நபரை பெற்றுக் கொள்வோமானால், ஒரு குழப்பமோ, அல்லது விவாதமோ நம்மத்தியில் இருக்கவே இருக்காது. அங்கே பரிபூரண அன்பு மாத்திரமே இருக்கும். நீங்கள் இன்னுமாய் இதை அல்லது அதை விசுவாசித்தாலும் முழுவதும் அன்பினாலே நிறையப்பட்டு இருக்கும், நீங்கள்... பாருங்கள்? அதுதான். இப்பொழுது, இயேசு, "அவர்கள் உடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்” என்று கூறினார். ஆகவே ஆவியின் கனி அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற் குணம், சாந்தம், விசுவாசம் என்பதாகும். 166. இப்பொழுது, நான். ஒரு மனிதன் ஒரு கிறிஸ்தவன் என்று சாட்சி பகருகின்ற ஒரு காரியத்தை, என்னுடைய மதிப்பீட்டை, எனக்கு தெரிந்த ஒன்றை நான் கூறுகிறேன். அது என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? அது பெருமுயற்சி கடும் முயற்சி செய்கின்ற ஆத்துமாவாகும். தேவனுக்காக மிகவுமாக பசி தாகம் கொண்டிருக்கிற ஒரு மனிதன். அவர்கள். இரவும் பகலுமாய், அவர்களால் - அவர்களால் தாங்க முடியாது. அவர்கள் -அவர்கள் அவர்கள் தேவனுக்கென்று ஏதாவதொன்றைச் செய்தாக வேண்டும் என்றிருப்பார்கள். அவர்கள் முழுவதுமாக அன்பினால் நிறைந்து... அவர்கள் ஆத்துமா கடும் முயற்சி செய்யும், எப்பொழுதும், எந்நேரமும் பிரயாசப்பட்டுக் கொண்டே இருக்கும். வேதம் ''கண்ணீரோடே விதைக்கிறவன் கெம்பீரத்தோடே அறுப்பான். அறுத்த அருமையான அரிகளை சுமந்து கொண்டு கெம்பீரத்தோடே திரும்பி வருவான்'' என்று கூறுகின்றது. அது சரியா? அந்த எல்லாக் காரியங்களும். . . 167. இப்பொழுது, கவனியுங்கள், அங்கே இந்த சபையானது.... இக்காலை வேளையில் நான் கூறுவேனானால், இக்கூட்ட மக்களும் நானும்... தேவன், "இப்பொழுது, வில்லியம் பிரான்ஹாம், கவனி, அந்த மக்கள் குழுவிற்கு நீ என்ன கூறுகின்றாயோ, அதற்கு நீ பதிலுரைக்கும்படியாக நான் செய்யப் போகிறேன். இப்பொழுது, அவர்கள் எல்லாரும் சப்தமிட வேண்டும் என்று நீ விரும்புகிறாயா?" என்று கூறினால், ''நிச்சயமாக, அவர்கள் சப்தமிடவேண்டும் என்று நான் விரும்புகிறேன்'' "அவர்கள் எல்லாரும் அந்நியபாஷையில் பேசவேண்டும் என்று நீ விரும்புகிறாயா?" "ஒவ்வொருவரும் அவ்வாறு செய்யவேண்டும் என்று நான் விரும்புகிறேன்" அவர்கள் "எல்லாரும் ஆவியில் நடனமாட வேண்டும் என்று விரும்புகிறாயா?'' ''ஒவ்வொருவரும் அவ்வாறே செய்யவேண்டும் என்று நான் விரும்புகிறேன்'' 168. ''சரி, மிகவும் நல்லது, ஆனால் அவர்களை வைத்து நீ என்ன செய்யப் போகிறாய்?” ஹ-ஹூம் 169. "ஜெபிக்க வேண்டும் என்று தங்கள் இருதயத்தில் பாரம் கொண்டவர்களாய், இந்த பீடத்தின் கீழே இருந்து, இங்கே இரவும் பகலும் தங்கியிருந்து, மற்றைய காரியங்கள் உள்ள ஒரு சபை; அவர்கள் வீட்டிலே எந்நேரமும் ஜெபத்திலேயே இருந்து, மக்களை தேவனண்டையில் வரும்படிச் செய்து, தாழ்மையாய் நடந்து, மருத்துவமனைகளில் சென்று நோயாளிகளைச் சந்தித்து, சபைக்கு மக்கள் வரும் படிச் செய்து, சரியானவைகளைச் செய்து கொண்டிருக்கின்ற ஒரு சபையையே நான் கொண்டிருப்பேன். அந்த மற்ற காரியங்கள் யாவும் ஒன்றாக இருந்து அந்த மற்றவை சரியாய் இருந்த போதிலும், அது சபைக்குள்ளானதாயிருந்தாலும், இவைகளைக் காட்டிலும் நான் அந்த சபையையே (ஆத்துமா பாரங்கொண்ட சபையை-) நான் பெற்று இருக்க விரும்புகிறேன்.'' 170. ஆனால் அதை நான் கொண்டிருக்க விரும்பினால், அந்த ஒன்றை நான் முதலாவதாக வைப்பேன். ஏனெனில் நீ அதை பெற்றுக் கொள்வாயானால், மற்றவை நடந்தேறும். ஹா..ஹம். பாருங்கள்? நீங்கள் அதைப் பெற்றுக் கொள்வீர்களானால், நீங்கள் தேவனுக்காக மிகவுமாக பசி கொள்வீர்கள், சப்தமிடுவது தானாக நடை பெறும். நீங்கள் தேவனுக்கென்று மிகுந்த பசி அடைவீர்களானால் அந்நிய பாஷைகளில் பேசுவது நிகழும். நீங்கள் தேவனுக்காக மிகவும் பசியடைவீர்கள் ஆனால், நீங்கள் தாமே பசி கொண்டவர்களாகவே இருப்பீர்கள். இப்பொழுது நீங்கள் தாமே வேற்றுமை சிந்தை கொண்டவர்களாய் ஆவதை நீங்கள் கவனிப்பீர்களானால், ஞாபகம் கொள்ளுங்கள், அதை கவனியுங்கள், அங்கே வேறொரு ஆவி கிரியை செய்ய முயல்கிறது என்பதாகும். தேவனுக்கு முன்பாக தாழ்மையாகவும், ஆத்துமப் பசிமிக்கவர்களாயும் நடவுங்கள். நல்லவர்களாகவும் பழமை நாகரீகம் கொண்டவர்களாயும் இருங்கள்... 171. எசேக்கியேல் 9-ம் அதிகாரத்தின்படி, "பரிசுத்தாவியினால் முத்திரை இடும் படியாக முதலாவதாக தேவனுடைய தூதன் சென்ற போது, அவன் நகரத்திலே செய்யப்படுகிற சகலவித அருவருப்புகளினிமித்தமும் பெரு மூச்சுவிட்டு அழுகிறவர்களையே அவன் முத்திரையிட்டான்" என்ற வேத வாக்கியத்தின் மூலம் நான் அதை நிரூபித்துக் காட்டமுடியும். அது சரியா? நகரத்திலே செய்யப்படுகின்ற அருவருப்புகளினிமித்தம் பெருமூச்சு விட்டு அழுகிற மனுஷரின் நெற்றிகளிலே முத்திரையிட்டான், 172. இப்பொழுது, நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன், நான் இந்த கேள்வியைக் கேட்கிறேன். (இப்பொழுது கூடுமானவரை சீக்கிரமாக நான் முடித்து விடுகிறேன்) பரிசுத்தாவியானவர் தாமே ஜெபர்ஸன்வில், நியூ ஆல்பனி, லூயிவில் ஆகிய இடங்களின் வழியாகச் சென்று இந்த மத்திய வேளையில் வீட்டில் இருப்போரை முத்தரித்தால் இன்றைக்கு என்ன நிகழும், “தேவனே கூட்டத்திற்காக மிகவும் பசியாய் இருப்பவர்களுக்கு எழுப்புதலை அனுப்பும். ஓ, தேவனே, இப்பட்டணத்தின் பாவங்களைப்பாரும் ஓ, அது மிகவும் மோசமானதாய் இருக்கிறது அல்லவா, தேவனே? ஓ, நீர் தயவு கூர்ந்து ஒரு எழுப்புதலை அனுப்பமாட்டீரோ, தேவனே. ஒரு அருமையான பிரசங்கியை எவராவது, ஒரு வரை அனுப்பும். ஓ, கர்த்தாவே பரிசுத்த ஆவி தாமே...''? எங்கே அவர் முத்தரிப்பார்? அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். 173. இப்பொழுது, "நல்லது, சகோதரன் பிரான்ஹாம், நீர் என்ன கூற முயல்கிறீர்?" 174. நான் இதைத்தான் பயத்தோடும், வலிமையில்லாத கயிறுகளின் மேல் நடந்தவாறு இதை கூற விழைகிறேன். உள்ளே இருப்பவர்களுக்கு நாளானது முடிவடையப் போகின்றது என்று நான் நம்புகிறேன். பாருங்கள்? பாருங்கள்? கதவுகள் மூடிக்கொண்டிருக்கின்றன. உங்களுக்குள்ளே அதைக்குறித்த பாரம் என்பதே இல்லாமலிருக்கின்றது. 175. பில்லிகிரஹாமும், ஓரல் ராபர்ட்-யும், நம்மிடையே உள்ள மற்ற எல்லாரும் தேசம் முழுவதும் கூட்டங்களை நடத்தினோம், நாம் கதறினோம், ஜெபித்தோம், மற்ற எல்லாவற்றையும் செய்தோம். ஆனால், நீங்கள் பாருங்கள், கதவுகள் மூடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. "அசுத்தமாய் இருக்கிறவன் இன்னும் அசுத்தமாய் இருக்கட்டும்." நான் வேத வசனங்களை மேற்கோடிட்டு காட்டுகிறேன், "அசுத்தமாய் இருக்கட்டும். நீதியுள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.'' புறஜாதியாரின் கதவுகள் மூடிக் கொண்டிருக்கின்றன என நான் நம்புகிறேன். பாருங்கள்? காலங்களின் நேரம் முடிவடையப் போகின்றது, இன்னும் வர வேண்டியது சிலர் மாத்திரமே. தேசம் முழுவதும் கூட்டங்களை நடத்தினோம், ஆத்துமாவைக் குறித்து பிரசவ வேதனை இல்லாததால் தான் அதைப் போன்று கூட்டங்கள் உங்களுக்கு இருக்கவில்லை. உங்களுக்கு அந்த பாரம் இருக்கவில்லை . 176. அநேக வருடங்களுக்கு முன் சம்பவித்தது என் நினைவிற்கு வருகின்றது, அன்று நடந்ததை அவர்கள் சபையில் பேசுகின்றதை நீங்கள் எப்பொழுதும் கேட்கின்றீர்கள். ஆனால் அதுவோ இன்னுமாய்த் தொடர்ந்திருக்கவில்லை, சிறிதேனும் இல்லை, ஆனால் அன்று அது புதுப்பொலிவுடன் இருந்தது. தேவன் தமது சபையை அழைத்துக் கொண்டிருந்தார். அவர்கள் கதறி அழுதுக் கொண்டு, விம்மிக் கொண்டு இரவு முழுவதும் பீடத்தின் மேல் விழந்து கிடந்ததை நான் கண்டிருக்கிறேன். நான் அவர்கள் வீடுகளுக்குச் சென்று இருக்கிறேன். நீங்கள் அவர்கள் வீட்டருகில் வரும் போழுது - ஆணும் பெண்ணுமாக ''ஓ, தேவனே'' என்று கதறிக் கொண்டிருப்பதை உங்களால் கேட்க முடியும். 177. அவர்கள் சபையினூடே நடந்து செல்வதை நீங்கள் காணலாம். அப்பொழுது, "இயேசுவே கல்வாரியில் என்னை வைத்துக் கொள்ளும்'' என்று பியானோ கருவியில் இசைக்கப்படுவதை நான் காண்பேன், அங்கே கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும், உங்களுக்குத் தெரியுமா. (சகோ. பிரான்ஹாம் சப்தத்தை உண்டாக்குகிறார்- ஆசி) இந்த சபைக்குள் செல்வோம், வேறொரு சபைக்கு செல்வோம், ''அங்கே அருமையான ஒரு ஊற்று'' என்று அங்கே பாடப்படுவதைக் கேட்போம், "ஓ, தேவனே, என்னுடைய மகனைக் காத்தருளும். என் மகளைக் காப்பாற்றும், அவள் இழந்து போயிருக்கிறாள், கர்த்தாவே, தயை கூர்ந்தருளும்!'' 178. அதைப் போன்று இன்று உன்னால் காணமுடியாது. காரணம் என்ன? விலக்கிக் கொண்டுள்ள தேவனுடைய ஆவி இயேசு இதை முன்னறிவித்தார், அவர்களுடைய அன்பு தணிந்து போகும். அக்கிரமம் மிகுதியாவதால் அநேகருடைய அன்பு தணிந்து போகும். பாருங்கள்? பாருங்கள்? குளிர்ந்து போய் அகன்று விடுகின்றனர். அன்பு தணிந்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் வேஷத்தை தரித்து, பியானோ கருவியை மேலும் கீழாக வாசித்து, ஓ," அல்லேலுயா! தேவனுக்கு மகிமை! அல்லேலூயா! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்' என்பார்கள். பாருங்கள், அது வெறும் வேஷமே. அதைப் போன்று உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள், பாருங்கள், பாருங்கள், பாருங்கள், பரவாயில்லை நாம், நான் இப்படிச் சொல்கையில்... 179. நாம் நம்முடைய சபையைக் குறித்து பேசவில்லை, அமெரிக்காவில் நான் கண்டதைக் குறித்தே பேசுகிறேன். அது ஒரு வேஷம் போலாகிவிட்டது, அது நம்மிடையே இருந்ததைப் போன்று ஒரு நடிப்பாக ஆகிவிட்டது. அந்த ஆத்தும பசி, முயற்சியானது ஏறத்தாழ இல்லாமற் போயிற்று. ஓ, சகோதரனே, சகோதரியே (தேவன் நம் மேல் இரக்கமாய் இருப்பாராக). தேவன் இரக்கமாயிருப்பாராக! 180. இந்த எழுப்புதல்களையும், மற்ற பலமான காரியங்களையும் நோக்கிப் பாருங்கள், சுவிசேஷமானது தெளிவாகப் பிரசங்கிக்கப்படுகிறது, அது.... எழுப்புதலானது முடிவுற்றவுடன் அவர்கள் சென்று விடுவதை இன்றைக்குக் கவனியுங்கள். அது என்னவென்று தெரியுமா? 181. இதை நான் கூறட்டும். தான் ஏன் இதைவிட முடியவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் கவனியுங்கள், இயேசு கூறினார், "பரலோக ராஜ்ஜியம் ஒரு மனிதன் கடலிலே போடப்பட்டு சகலவிதமான மீன்களையும் சேர்த்து வாரிக் கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது. அவன் வெளியே இழுத்த போது, கடலில் இருந்த அநேக ஜந்துக்களை எடுத்தான். ஆமைகள், பாம்புகள், நீர் நாய்கள், நண்டு வகைகள், மீன் ஆகியவைகள் வந்தன. பாருங்கள், நான் விசுவாசிக்கிறேன் அந்த வலை... 182. இப்பொழுது, கவனியுங்கள்! இங்கே ஒரு ஆமை உள்ளது, இங்கே ஒரு மீன் உள்ளது. அந்த ஆமை, ஆமையாகத்தான் இருக்க வேண்டும், ஏனென்றால் துவக்கத்திலிருந்தே அது ஆமையாகத் தான் இருந்தது. ஆமையினுடைய சுபாவம் தான் அதற்கு அமைந்திருக்கும், அந்த ஒரு சுபாவம் மாத்திரமே அதற்கு இருக்கும். இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். நான் ஜெயிக்கப் போகிறேன் என்று கூறி இருக்கிறேன். பாருங்கள், அது துவக்கத்திலிருந்தே ஆமையாகத்தான் இருக்கின்றது, இப்பொழுதும் அது ஆமை தான். பாம்பாக அது துவங்கியிருக்குமென்றால் அது இப்பொழுதும் பாம்பாகத் தான் இருக்கும். நீர் நாயாக துவக்கத்தில் அது இருந்திருக்குமானால்..... 183. அந்த குளத்தில் இருந்த எல்லா மீன்களும் பிடிபடும் வரை அந்த வலையானது போடப்பட்டுக் கொண்டே இருந்திருக்கும் என்று நான் நம்புகிறேன். 184. அந்த காரணத்தால் அவர்கள், ''நல்லது என் கைகளை நான் உயர்த்தினேன். தேவனுக்கு மகிமை உண்டாவதாக! நான் இரட்சிக்கப்பட வேண்டும். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!" என்று கூறுகின்றனர். அதன் பிறகு சிறிது நாட்கள் கழித்து, "ஓ, லிடியா, அந்த காரியம் உனக்குத் தெரியுமா, அது... முட்டாள்தனமான ஒன்று. நான் சரியாகத்தான் ஊகித்தேன்'' என்று கூறுவர். ஏன்? அதன் சுபாவம் அங்கே இருக்கின்றது, அதன் ஆரம்பமே நீர் நாயாகவும், சர்ப்பமாகவும் இருந்தது. 185. ஏரியிலிருந்து அந்த மீன் இப்பொழுது எடுக்கப்பட்டிருக்கும், வலை காய்வதற்காக வைக்கப்படும். பிறகு இயேசு வந்து தம்முடைய மீனை எடுத்துக் கொள்வார். நான் என்ன கூற முயல்கிறேன் என்பதைப் பாருங்கள்? ஓ, கிறிஸ்துவத்தின் ஒரு சிறு துளி மாத்திரம் உங்களில் இருந்தால், தேவனுக்கு சேவை செய்ய வேண்டும் என்னும் எண்ணம் சிறிய அளவில் மட்டும் இருந்தால் முடிந்த வரை இக்காலை வேளையில் அதை உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள், உங்கள் இருதயத்தில் அதை வைத்து களி கூறுங்கள், 186. 'தேவ குமாரர் மனுஷ குமாரத்திகளைக் கொண்டார்கள்". நிச்சயமாக அவர்கள் தேவகுமாரர் தான். இப்பொழுதும் அவர்கள் இன்னுமாய் தேவ குமாரர்களாய் இருக்கின்றனர், ஆனால் அவர்கள் விழுந்து போன தேவ குமாரர். அவர்களில் சிலர் வேதபூர்வமாக இருக்கின்றனர், வியூ அவர்கள் எவ்வாறு வேத வாக்கியங்களைப் பேசுகின்றனர்! அவர்கள் தேவகுமாரர். சாத்தான் தேவனுடைய வலது கரமாக விளங்கியவன் என்று உங்களுக்குத் தெரியுமா. இன்றைக்கு உலகில் உள்ள வேத ஞானிகளைக்காட்டிலும் வேத வாக்கியங்களை அவன் அதிகமாக அறிந்திருக்கிறான் என்பது உங்களுக்குத் தெரியுமா. அதைக்குறித்து பேசி அவன் வேத கலாசாலைகளை தலை கீழாக ஆக்கிக் கொண்டிருக்கிறான், குறிப்பாக இங்கேயிருந்த பாப்டிஸ்டுகள், "இயேசு கிறிஸ்து ஒரு ரோம போர் வீரனுக்கோ, அல்லது ஜெர்மானிய போர் வீரனுக்கோ பிறந்திருக்க வேண்டும்'' என்று கூறுகின்றனர். அதைக் குறித்த புத்தகத்தை நான் வைத்திருக்கிறேன், வருகின்ற நாட்களில் என்றாவது ஒரு நாளிலே அதை நான் உங்களுக்கு காண்பிப்பேன். அது சரி. 187. முடிவாக யாத்திராகமம்... ஓ நாம் அதை முடிக்கும் வரை அதை புரிந்து கொள்ள முடியாது. சீக்கிரமாக அதை தான் முடிக்கின்றேன். உங்களுடைய நேரத்தை அதிக அளவில் நான் எடுத்துக் கொள்கிறேன் என்று எனக்குத் தெரியும். என்னோடு சிறிது நேரமாக பொறுத்துக் கொள்வீர்களா? (சபையார் "ஆமென்” என்கின்றனர் - ஆசி) 13. வெளிப்படுத்தின விசேஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, மீதியான யூதர்களில் 144000 பேர், சயை எடுக்கப்படுதலில் பங்கு கொள்வார்களா? துவக்கத்தில் இஸ்ரவேல்.. அவர்கள் துவங்கி.. (என்னை மன்னிக்கவும்) காலத்திலே செல்கின்ற. , , 188. என்னை மன்னியுங்கள், ஒரு நிமிடத்தில் இது என்ன என்பதை நான் அறிந்து கொள்ளட்டும். அது பேப்பரில் ஒரு வகையாக எழுதி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. ...கிறிஸ்துவினுடைய ஆயிரம் வருஷங்கள் நேரத்தில் இது சம்பவிக்குமா அல்லது மனிதன் நவீன மதவாதிகளாக வாழ்பவனை. ஆம் ஐயா, 189. இப்பொழுது, ஒரு நிமிடம், இந்த கேள்வி என்னவென்பதை சரியாக பார்ப்போம்: அந்த 144000 பேர் நம்மில் மீதியான. - - 190. முதலில் நான் அதை சரி செய்து அதைக் குறித்து நீங்கள் நிச்சயமாக இருக்க விரும்புகிறேன், பாருங்கள், அந்த 144000 பேர். , , வெளிப்படுத்தின விசேஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மீதமுள்ள யூதர்களாகிய அந்த 144000 பேர் சபை எடுக்கப்படுதலில் பங்குடையவர்களாய் இருப்பார்களா? அது 144000 பேர்.... 191. இப்பொழுது,.... நான் - நான்... இதைத் துவங்குவதற்கு முன் நான் இதை என் மனதில் தெளிவாய் பெற்றிருக்க விரும்புகிறேன். வெளிப்படுத்தின விசேஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மீதமுள்ள யூதர்களாகிய 144000 பேர் சபை எடுக்கப்படுதலில் பங்குடையவர்களாய் இருப்பார்களா? 192. இதை நான் முதலில் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். அந்த 144000 பேர் மீதம் உள்ள யூதர்கள் ஆவர், ஆனால் அவர்கள் எடுக்கப்பட்ட சபை அல்ல. பாருங்கள்? வெளிப்படுத்தின விசேஷம் 6.ஆம் அதிகாரத்தில் அதை நீங்கள் காணலாம். 193. நாம் அதைக்குறித்த அந்த பாகத்தை- அந்த பக்கத்தை- நாம் அடுத்ததாக பார்க்கலாம். அவர்கள் அதைக் குறித்த மற்றொரு கேள்வியை வைத்து உள்ளனர். இந்த காரியங்களைக் கவனியுங்கள். 194. அது சரி, வெளிப்படத்தின விசேஷம் 6-ல் இப்பொழுது, அங்கே இதை நீங்கள் பார்க்கலாம். பாருங்கள்? இப்பொழுது நாம் ஆரம்பிக்கப் போகிறோம், அவன் மேற்சென்று குதிரை சவாரி செய்பவர்கள், இன்னும் மற்றவைகளைக் குறித்து அவன் கூறுகின்றான். ''அவர்கள் அதைத் திறந்த போது"... வெளிப்படுத்தின விசேஷம் 6-ஆம் அதிகாரம் 3-ஆம் வசனத்தை நாம் பார்ப்போம். அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது.... 195. நான் -நான்- தான் தவறு செய்து விட்டேன், நான் தவறான அதிகாரத்தை எடுத்து விட்டேன். அது 7-வது அதிகாரம்: இவைகளுக்குப் பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, 196. ஓ, என்ன அருமையான ஒரு கேள்வி, அதைப் பார்க்க சிறிது நேரம்தான் உள்ளது, நாம் வியாதியஸ்தருக்காக ஜெபிக்க வேண்டும். இவைகளுக்குப் பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று பூமியின் மேலாவது, சமுத்திரத்தின் மேலாவது, ஒரு மரத்தின் மேலாவது, காற்று அடியாதபடிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக் கண்டேன். ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக் கோலையுடைய வேறொரு தூதன்... ஏறி வரக்கண்டேன்... 197. ஓ, நிச்சயமாக இது ஒரு அருமையான கேள்வி தான், பாருங்கள்? இப்பொழுது, யோவான், பூமியிலிருந்து சென்று, ஆவியில், பூமியை நோக்கிப் பார்த்து கூறின மகத்தான காட்சி இது. அவன், பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின் காற்றுகளையும் பிடித்திருப்பதைக் காண்கிறான். 198. இப்பொழுது வேதத்தில், "காற்றுகள்” என்றால்... வேத வசனங்களை உங்களுக்கு எடுத்துக் கூற எனக்கு நேரம் இல்லை, ஆனால் நாம் இதைப் பார்க்கலாம். இதற்கு சரியாக பதில் உரைக்கப்படவில்லையெனில், நான் வேறொரு சமயத்தில் அதை எடுப்பேன். அந்த நான்கு, வேதத்தில் காற்றுகள் என்றால் “யுத்தங்களும் சச்சரவு களும்'' என்று அர்த்தம். யோபின் காலத்தில் காற்று கீழே வந்து அவனுடைய குமாரர்களை எடுத்துப்போட்டது என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். நான் என்ன கூற முயல்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியுமா, அது -அது -அது தொந்தரவு, வேதனை, பாருங்கள், --பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் (நான்கு தூதர்கள், அல்லது “நான்கு செய்தியாளர்கள்'') அவர்கள் அந்த மூலைகளில் நின்று கொண்டு... அல்லது பூமியின் நான்கு திசைகளிலும் நின்று கொண்டு, அவர்கள் பூமியின் நான்கு காற்றுகரையும் பிடித்திருக்க கண்டேன். . . ...அவன் பூமியையும் சமுத்திரத்தையும் சேதப்படுத்துகிறதற்கு அதிகாரம் பெற்ற அந்த நான்கு தூதரையும் நோக்கி. (இப்பொழுது, அவன் கர்த்தருடைய வருகையைக் குறித்து பேசிக் கொண்டிருக்கின்றான். பாருங்கள்?) நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றியில் முத்திரை போட்டுத் தீருமளவும் பூமியையும் சமுத்திரத்தையும் மரங்களையும் சேதப்படுத்தாது இருங்கள் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டான். (ஊழியக்காரர்). 199. இப்பொழுது, சபையானது அவருடைய ஊழியக்காரர்கள் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாம் அவருடைய குமாரர், அவருடைய ஊழியக்காரர் அல்ல, யூதர்கள் தான் எப்பொழுதுமே அவருடைய ஊழியக்காரராய் இருந்து வந்து உள்ளனர். சபையானது அவருடைய ஊழியக்காரராக ஒரு போதும் இருந்ததில்லை, அது அவருடைய பிள்ளைகளாய் இருந்தது. பாருங்கள்-? அந்த ஊழியக்காரர்: முத்திரை போடப்பட்டவர்களின் தொகையைச் சொல்லக் கேட்டேன்; இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரைப் போடப்பட்டவ ர்கள் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர். (இப்பொழுது, கவனியுங்கள், எல்லாரும் யூதர்கள்) 200. இப்பொழுது கவனியுங்கள்! “யூதா கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். ரூபன் கோத்திரத்தில் பன்னீராயிரம். காத் கோத்திரத்தில் பன்னீராயிரம். நப்தலி கோத்திரத்தில் பன்னீராயிரம். இன்னும் மற்ற கோத்திரங்கள் சிமியோன் கோத்திரத்தில் பன்னீராயிரம். செபுலோன் கோத்திரத்தில் பன்னீராயிரம். பென்யமீன் கோத்திரத்தில் பன்னீராயிரம். இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்கள், ஆக பன்னிரண்டு பன்னிரண்டு... என்ன? 144000. இப்பொழுது இஸ்ரவேல் புத்திரரின் எல்லா கோத்திரத்தாரையும் கவனியுங்கள். அவர்கள் தேவனுடைய "ஊழியக்காரர்" என்பதை இப்பொழுது கவனியுங்கள். 201. ஒரு வேளை, உங்களுக்கு நான் இதை தெளிவாக்கக்கூடும். இப்பொழுது கவனியுங்கள். இவைகளுக்குப்பின்பு நான் பார்த்தபோது இதோ சகல ஜாதிகளிலும் (இப்பொழுது இங்கே வேறொரு கூட்டம் இருப்பதைப் பாருங்கள்) கோத்திரங்க ளிலும், ஐனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும் ஒருவனும் எண்ணக் கூடாததுமான திரளான கூட்டமாகிய இனங்கள் வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து ஆட்டுக்குட்டியான வருக்கு முன்பாகவும் நிற்கக் கண்டேன். அவர்கள் மகா சத்தமிட்டு... (இந்த பரிசுத்தாவியின் கூட்டத்திற்கு செவி சாயுங்கள்!)... இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித் தார்கள். தூதர்கள் யாவரும் சிங்காசனத்தையும் மூப்பர்களையும் நான்கு ஜீவன் களையும் சூழநின்று சிங்காசனத்திற்கு முன்பாக முகங்குப்புற விழுந்து, தேவனை தொழுதுகொண்டு: ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும்... மகிமையும். ஸ்தோத்திரமும்... வல்லமையும். பெலனும் சதாகாலங்களிலும் உண்டவதாக; ஆமென், என்றார்கள், அப்பொழுது. மூப்பர்களில் ஒருவன்... (இப்பொழுது கவனியுங்கள், அது... யோவான் தரிசனத்தில் இருந்தான்).... மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி, (இப்பொழுது, யோவான் ஒரு யூதனாய் இருந்ததால் அந்த பன்னிரண்டு கோத்திரங்களை அவன் பார்த்தபோது அவர்களை அடையாளம் கண்டு கொண்டான்)...வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான். இப்பொழுது நீ யூதர்களை கண்டிருக்கிறாய், அவர்கள் ஒவ்வொருவ ரையும் உனக்குத் தெரியும், கோத்திரங்களாக அவர்களை நீ கணக்குப் பார்த்து எத்தனை ஆயிரம் பேர் முத்திரிக்கப்பட்டார்கள் என்று நீ கூறினாய். ஆனால் சகல ஜாதிகளிலும், கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலுமிருந்து வந்தவர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தனர்? அதற்கு நான்; ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். (வேறு விதமாகக் கூறுவோமானால், ''அவர்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. தான் ஒரு யூதன், தான் இங்கே நின்று கொண்டு இருக்கிறேன், அங்கேயுள்ள என்- என் ஜனத்தை தான் கண்டேன்" என்று யோவான் கூறுகிறான்).... அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து, பாருங்கள்! மகா உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக் குட்டியானவருடைய இரத்தத்திலே (சபைகளில் அங்கத்தினர்கள் ஆவதன் மூலம் அல்ல)... ஆனால் ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள். (பாருங்கள்?). ஆனப்படியால், இவர்கள் தேவனுடைய சிங்காச னத்திற்கு முன்பாக இருந்து இரவும் பகலும் அவருடைய ஆலயத்தில் அவரைச் சேவிக்கிரர்கள்..... 202. இப்பொழுது திருமதி. பிரான்ஹாம் எங்கே எனக்குப் பணி விடை செய்கிறார்கள்? வீட்டிலே. அது தான் மணவாட்டி. திருமதி. நெவில் அங்கே தானே, உங்கள் வீட்டிலிருந்து, உங்களுக்கு பணிவிடை செய்கிறார்கள். அங்கே தான் மணவாட்டி (அவர்கள் ஊழியக்காரர் அல்ல).... மணவாட்டி பணிவிடை செய்கிறாள். சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாய் இருப்பார். இவர்கள் இனி பசியடைவதுமில்லை.... (அவர்கள் இங்கே இருக்கையில் சில வேளை தங்கள் உணவை அவர்கள் இழந்திருக்கலாம். அப்படித் தானே?)... இனி தாகமடைவது இல்லை. வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள் மேல் படுவதில்லை. இவர்கள் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களே ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன் தாமே இவர்களுடைய கண்ணீர் (அங்கே சென்று இருந்த மக்கள் அழுது கொண்டிருந்த கூட்டமாயிருந்தனர்) யாவையும் துடைப்பார் என்றான். (பாருங்கள்?) 203. இப்பொழுது, கவனியுங்கள், அவர்கள் பசியுள்ளவர்களாயும், தாகம் உள்ளவர்க ளாயும், அழுதும், முனகியும், கதறியும் உபத்திரவத்திலிருந்து வெளி வந்தவர்க ளாயும் இருந்தனர். ("அந்த பரிசுத்த உருளையர் கூட்டத்தைப் பாருங்கள், ஓ அவர்களுக்கு பைத்தியக்காரர்கள்" என கூறப்பட்டது) ஓ, என்னே! ஆம். பாருங்கள்? ஆனால் அவர்கள் அழுது கதறினர், அவர்கள் குழப்பம் ஏதும் உண்டாக்கவில்லை. அவர்கள் அழுது கதற மாத்திரம் செய்தனர். ஆகையால் பாருங்கள், அவர்கள் சகல ஜாதிகளும், கோத்திரரும், பாஷைக்காரருமாய் இருந்தனர். 204. இப்பொழுது, இந்த 144000 பேர் யூதர்களாய் இருந்தனர். ஆபிரகாம் தேவனுடைய ஊழியக்காரனாய் இருந்தான். யூதர்கள் எப்போதுமே தேவனுடைய ஊழியக்காரர்க ளாய் இருந்தனர். புறஜாதியார் அவருடைய ஊழியக்காரர்களாய் எப்போதும் இருந்ததில்லை. 205. இப்பொழுது நாம் சீக்கிரமாக கடந்து செல்வோம், ஏனெனில் நம் இடையே இன்னும் 2 அல்லது 3 கேள்விகள் உள்ளது. என்னால் முடிந்த அளவிற்கு வேகமாக இவைகளைக் கடந்து செல்வேன். ஆனால் நான் திரும்பவும் வந்து அடுத்த ஞாயிறன்று (கர்த்தருக்கு சித்தமாயிருக்கும் பட்சத்தில்) இவைகளின் பேரில் அதிக நேரம் செலவிடுவேன். 206. ஆனால் இப்பொழுது, கவனியுங்கள், அவன் பூமியின் நான்கு திசைகள் யாவையும் கண்டான், பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நிற்பதை அவன் கண்டான். "அது வட்டமாக இருந்தது என்று நான் எண்ணினேன்" என்ற நீங்கள் கூறலாம். நீங்கள் பாருங்கள், அதனால் அங்கு நான்கு திசைகள் இருக்கக் கூடாது என்பதல்ல, அது சரி. 207. இப்பொழுது, "பூமியின் நான்கு திசைகளிலும், நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக் கண்டேன்" வேறு விதமாகக் கூறினால், உலக முழுவதும் போரிலும், சச்சரவிலும் இந்த காற்றானது சென்று வீசினது. அது எப்பொழுதாவது நிகழ்ந்து உள்ளதா? முதலாம் உலகப் போர் ஆரம்பிக்கும் வரை அது நிகழவில்லை. ''காற்றுகளையும் பிடித்திருக்கக் கண்டேன்" உள்ளே செல்லாதப்படிக்கு அவர்கள் கடினமாகப் பிரயாசப்பட்டுக்கொண்டிருந்தனர். 208. ஆகவே இப்பொழுது, இங்கே வேறு ஓருவன் வருகிறான். இப்பொழுது அந்தத் தூதனைக் குறித்து நீங்கள் கவனிப்பீர்களானால், எசேக்கியேல் 9-ல், புருஷர் தங்கள் கைகளிலே வெட்டுகிற ஆயுதங்களைப் பிடித்துக் கொண்டு எருசலேம் முழுவதுமாக யூதர்களை வெட்டுவதற்காக வாசலிலிருந்து புறப்பட்ட போது, இதே தூதன் தான் அங்கே வந்தான். அது உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவன், "நிறுத்து! நிறுத்து! நீ நகரமெங்கும் உருவப்போய், அதற்குள்ளே செயல்படுகிற சகல அருவருப்புகளின் நிமித்தம் பெருமூச்சு விட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு" என்றான். அது சரி தானே? 209. அதன் பிறகு, அவர்கள் சென்று படுகொலைகளை செய்ய அவன் அனுமதித்தான். அது தீத்து இராயன் கீழ் நிகழ்ந்த அடக்கு முறை, துன்பம். இப்பொழுது கிழக்கிலிருந்து (அங்கிருந்து தான் இயேசு வருவார்) வருகின்றவனும் அதே தூதன் தான் என்பதை நீங்கள் கவனியுங்கள், அவன் ஜீவனுள்ள தேவனுடைய முத்திரையை வைத்து இருக்கிறான், மகிமை! 210. இப்பொழுது, ஜீவனுள்ள தேவனுடைய முத்திரை என்றால் என்ன? ஓ... அது உலகத்திலே மிகவும் சர்ச்சைக்குரிய ஒன்றாக இன்று இருக்கின்றது அல்லவா! சிலர் அது ஓய்வு நாள் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர், சிலர் அது இதை அல்லது அதை செய்வது தான் என்று கூறுகின்றனர். ஆனால் வேதம், "பரிசுத்தாவி தான் தேவனுடைய முத்திரை" என்று கூறுகின்றது. எபேசியர் 4:30, "அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்தாவியை துக்கப்படுத்தாதிருங்கள்" என்று கூறுகின்றது. பாருங்கள்? அது சரியே. அது பரிசுத்தாவி. 211. பிறகு என்ன வருகின்றது? இப்பொழுது கவனியுங்கள்! ஓ, இதை நான் நினைக்கையில் என் இருதயம் துள்ளி குதிக்கின்றது. இப்பொழுது அவன்," நான்கு காற்றுகளையும் அசையாதபடிக்கு அப்படியே பிடித்திருங்கள்" என்று கூறுகிறான் (வேறொரு வார்த்தையில் கூறுவோமானால்) "நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரை போட்டுத் தீருமளவும்" அந்த ஊழியக்காரன், அந்த "யூதர்" (யோவான் திரும்பி, "முத்திரை போடப்பட்ட 144000 பேர்களை நான் கண்டேன்” என்று கூறுகிறான்) இப்பொழுது, காற்று அடிக்க ஆரம்பித்து, பூமியை முழுவதுமாக நிரப்பி, முதலாம் உலகப்போரின் போது அர்மெகேதோன் யுத்தம் நிகழ்ந்திருக்கும், ஆனால்... 212. இப்பொழுது, உங்களுக்குக் காண்பிக்கத்தக்கதாக வேறொரு வேத வாக்கியத்தை நான் வைத்திருக்கிறேன். இயேசு அந்த மக்களைக் குறித்து பேசினார். அவர், ''சிலர் ஒன்றாம் மணி வேளையில் வருவர், சிலர் வேறொரு மணி வேளையில் வருவார்கள், அவர்கள் தான் பதினோராம் மணி வேளையில் வந்தவர்கள். பதினோராம் மணிவேளை மக்கள்" என்று கூறினார். இப்பொழுது, ஆவிக்குரியவர்க ளாகிய நீங்கள் இடைப்பட்ட வரிகளை படித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் நான் துரிதமாக இங்கும் அங்கும் தாவவேண்டியவனாய் இருக்கின்றேன். இப்பொழுது கவனியுங்கள். "பதினோராம் மணிவேளை மக்களே, உள்ளே வாருங்கள்" ஆகவே சரியாக இப்பொழுது.., "முதலாம் மணி வேளையில் வந்தவர்கள் வந்து கூலியை பெற்றுக் கொண்டார்கள், அடுத்ததாக வந்தவர்களும் கூலியைப் பெற்றுக் கொண்டார்கள், பதினோராம் மணி வேளையில் வந்தவர்களும் முதலாம் மணி வேளை மக்கள் பெற்ற அதே கூலியை பெற்றுக் கொண்டனர். 213. இப்பொழுது, கவனியுங்கள், யூதர்கள் தான் நாம் பின்பற்றும் தூரத்தைக் காட்டும் மைல் கம்பம். இப்பொழுது, முதலாம் உலகப் போர் நிகழ்ந்த போது ஒவ்வொரு யூதனும் பல நாடுகளுக்கு சிதறி செல்லும்படியாக ஆனது. முதலாம் வசனத்தைக் குறித்து இன்றைக்கு கேட்கப்பட்டது போன்று, எப்படி அவர்கள் எல்லாரையும் அவர் சிதறடித்திருப்பார், அவர்கள் எல்லாரும் அங்கே உள்ளனர். எல்லா இடங்களிலும் ஒரு உலகப்போர், இங்கே காற்றுகள் எருசலேமிற்குள் செல்ல வருகின்றது, 214. ஆகவே, அவன், "தாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரைப் போட்டுத் தீருமளவும் நிறுத்துங்கள், பிடித்திருங்கள்" என்றான், வேறொரு விதமாகக் கூறினால், "நாம் அவர்களை எல்லா இடத்திலிருந்தும், எல்லா நாடுகளிலிருந்தும் அவர்களைக் கொண்டு வருகிறோம், ஏனென்றால் 144000 பேரை முத்திரை போடத்தக்கதாக நாம் அவர்களை சரியாக உள்ளே கொண்டு செல்ல வேண்டும். பிடித்துக் கொண்டிருங்கள்" 215. ஆகவே, பதினோராம் மணி நேர மக்கள் உள்ளே வரத்தக்கதாக முதலாம் உலகப் போரானது, அந்த வருடத்தின் பதினோராம் மாதத்தின் பதினோராம் நாளில், அந்த நாளின் பதினோராம் மணி வேளையில் முடிவுற்றது. யூதனுக்கு விடுக்கப்படுகின்ற கடைசி அழைப்பு! அவன் ஆதியில் அங்கே பெந்தெகொஸ்-தேயில் அவர்கள் பெற்ற அதே பரிசுத்தாவியை அவன் பெற்று, அதேவிதமாக ஞானஸ்நானம் பண்ணப்படு வான், அதே எல்லாக்காரியங்களும் பெற்றுக்கொள்வான். பதினோராம் மணிவேளை மக்கள் உள்ளே செல்கின்றனர். 216. அவன் ''இப்பொழுது, நாம் முத்திரைப் போட்டு தீருமளவும் பிடித்துக் கொண்டு இருங்கள்," என்றான். "எவ்வளவு நேரமாக நீங்கள் அதைப்பிடித்து கொண்டிருப்பீர் கள்?" 217. "நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரை முத்திரை போட்டுத் தீருமளவும் பொறுத்திருங்கள். இப்பொழுது நாம் - நாம் புறஜாதிகளை முத்தரிக்கின்றோம், அவர்கள் ஆயிரமாயிரம் பேர் இந்த பாடுகளின் மூலமும், உபத்திரவங்களின் மூலமும் அவர்கள் முத்தரிக்கப்பட்டனர். ஆனால் ஒரு நிமிடம் பொறுத்திடுங்கள். ஒரு நிமிடம் மாத்திரம் பொறுங்கள்.! இந்த, நாம் இந்த ஊழியக்காரரை முத்தரிக்கும் வரை அந்த நேரத்தை வரவிடாதிருங்கள்", ஆகவே அவன் 144000 பேரை முத்தரித்தான். 218. பிறகு காற்றுகள் திறந்து விடப்பட்டன. இப்பொழுது, கவனியுங்கள். முதலாம் உலகப் போர் முதற்கொண்டு யூதருக்கு எதிராக அடக்குமுறை கையாளப்பட்டுக் கொண்டே இருந்தது. இரண்டாம் உலகப் போரிற்காக ஹிட்லர் எழும்பினான், அவன் ஆரம்பிக்கையில்.... என்ன? அவன் முழு உலகத்தையே கிழித்து எறிய புறப்பட்டான். அது சரி தானே? அவன் அதை கிழித்தெறிய முற்பட்டான். ஆம், அவன் அவ்விதம் இருந்தான். 219. எல்லாமே கம்யூனிசமாக இருக்க வேண்டும் என்று விரும்பினர். இங்கே என்னை நீங்கள் சிறையில் அடைக்க முற்பட்டதை நீங்கள் நினைவில் கொண்டிருக்கிறீர் களா? அந்த இரவிலே, ரிவர் ஹாலில் இதே காரியத்தை குறித்துதான் நான் பேசிக் கொண்டிருந்தேன். ஆம், ஐயா, தான் "அங்கே மூன்று கொள்கைகள் (TSMS) தோன்றும். அவை எல்லாம் சேர்ந்து ஒரு கொள்கை (ISM) ஆகிவிடும், அந்த கொள்கை ஒரு அடக்குமுறையைக் கொண்டு வந்து இயேசு கிறிஸ்துவை மறுபடியுமாக பூமிக்கு அனுப்பும்," என்று கூறினேன். அது முற்றிலுமாக சரி. அது கம்யூனிசம் ஆகும். ஹிட்லர், நாசி (Nazi) இன்னும் மற்றவை; முஸ்ஸோலினியினுடைய பாஸிசம் கொள்கை, மற்றும் ஹிட்லர், ஸ்டாலின். நான் "அவைகளில் ஒரு காரியம் நிகழ்ந்தேறும். எது என்று எனக்குத் தெரியாது, ஆனால் அது வடக்கில் உள்ள இராஜாவாய் இருக்கலாம் என்று நான் நம்புகிறேன்" என்றேன். சகோ.மாஹோனி, அங்கே இருந்து வருபவர்களாகிய நீங்கள், அந்த காரியங்கள் இங்கே எப்படி போதிக்கப்பட்டன என்று நிச்சயமாக நினைவில் வைத்திருப்பீர்கள். 220. ஆகவே அவர்கள் "நீ அதை பிரசங்கித்தால்.... " என்றனர். 221. இந்த N.R,A வைக் குறித்து, நான் "அது மிருகத்தின் முத்திரை அல்ல, நிச்சயமாக அல்ல. அது ஒரு மதச்சம்பந்தமான புறக்கணிப்பு; அது அதுவல்ல'' என்றேன். ''இது தான் துன்பத்தின் ஆரம்பம் என்பதை மக்கள் அறிந்து, ஆயத்தம் அடைவதற்காக இது முன்னோடியாக உள்ளது, இங்கேயிருந்து தான் நாம் ஆரம்பிக்க வேண்டும். சரியாக இங்கேயிருந்து தான் காலமானது முடிய ஆரம்பிக்கும் நேரம் ஆகும். இப்பொழுது கவனியுங்கள், அந்த நேரம் அங்கே உள்ளது” என்றேன். 222. இப்பொழுது, யூதர்கள் மேல் அடக்குமுறை கையாளப்படுகின்றது, ஒவ்வொரு தேசத்திலும் அவர்கள் மேல் அடக்குமுறை, இன்னல், வருவிக்கப்பட்டு சரியாக எருசலேமிற்குள் விரட்டப்படுகின்றனர். அது சரி தானே? ஒவ்வொருவரும், அவர்கள் சரியாக... ஆகவே நீங்கள் 144000 பேரை உடையவர்களாய் இருப்பீர்கள். இங்கு வெளிப்படுத்தின விசேஷத்தில் இன்னுமாய் சற்று பாருங்கள். யோவான்... 223. திரு. போஹனான் இங்கே என்னிடம், "என்னால் அந்த வெளிப்படுத்தின விசேஷத்தை படிக்க முடியவில்லை" என்று கூறினார். அவர் ''அங்கே மணவாட்டி சீனாய் மலையின் மீது நின்று கொண்டிருந்தாள், அங்கே மணவாட்டி மேலே பரலோகத்தில் இருக்கின்றாள், அங்கே மணவாட்டி இருந்தாள், அந்த தண்ணீர்.... அவளுடன் போரிடத்தக்கதாக வலுசர்ப்பம் தன் வாயிலிருந்து வெள்ளத்தை ஊற்றினது" என்றார். 224. நான் ''திரு. போஹனான், முதலாவதாக நீர் செய்த தவறு அதை மணவாட்டி என்று அழைத்தது" என்றேன். நான் "அந்த 144000 பேர்களான அந்த யூதர்கள் சீனாய் மலையின் மீது நிற்பார்கள். மணவாட்டி சரியாக இயேசுவுடன் பரலோகத்தில் இருப்பாள். அந்த வலுசர்ப்பம் மீதமுள்ள ஸ்திரீயின் வித்துக்களுடன் போரிடத்தக்க தாக தன் வாயிலிருந்து வெள்ளத்தை ஊற்றினது" என்றேன். இந்த குழுதான் அங்கே செல்ல வேண்டியதாயிருக்கிறது, அந்த குழு அல்ல, பரிசுத்த ஆவியைப் பெறாமல் மீதமுள்ள ஸ்திரீயின் வித்து, "பரிசுத்தமாக்கப்பட்ட சபை", இதனுடன் தான் அவன் போர் செய்கிறான். பாருங்கள்? 225. இங்கே மூன்று கோத்திரங்கள், பிரிவுகள் உள்ளன. நீங்கள் எப்பொழுதுமே மூன்றை உங்கள் மனதில் கொள்ளுங்கள். ஆகவே இங்கே நாம், இந்த மகத்தான மீட்கப்பட்ட மணவாட்டியை சுற்றி இந்த 144000 பேர் இருப்பதை பார்க்கிறோம். இங்கே, பரிசுத்தமாக்கப்பட்டு, பரிசுத்த ஆவியைப் பெற மறுத்தவர்கள் உள்ளனர். சபையானது அவர்களுக்கெதிராக அடக்கு முறையை ரோம சபை அவர்களைத் துன்பப்படுத்தும். ஆனால் மணவாட்டி ஏற்கெனவே எடுத்துக்கொள்ளப்பட்டு பரலோகத்தில் இருப்பாள். அவர்கள் எவ்வாறு இருப்பார்கள் என்று வேதம் கூறுகின்றதோ, அவ்விதமாகவே அவர்கள் இருப்பார்கள். பாருங்கள்? 226. ஆகவே அந்த 144000 பேர் யூதர்கள் ஆவர், தேவனுடைய ஊழியக்காரர். ஆகவே பரிசுத்தாவியின் சுவிசேஷம் அவர்களுக்கு பிரசங்கிக்கப்படும் போது ஆதியில் பெந்தெகோஸ்தே நாளில்-தமிழ்) அவர்களுக்கு என்ன நிகழ்ந்ததோ அதே போன்று இவர்களும் பரிசுத்த ஆவியைப் பெறுவார்கள், புறஜாதியின் காலம் முடிவுபெறும், சபையானது முத்தரிக்கப்பட்டு, எடுத்துக் கொள்ளப்படுதல் வருகின்றது. 227. புறஜாதிகளின் நாட்களிலே, சுவிசேஷமானது எல்லா இடங்களிலும் பிரசங்கிக்கப்பட்டு, புறஜாதிகளிடையே ஆணித்தரமாக கூறப்பட்டு, தண்ணீரில் உள்ள எல்லா மீன்களையும் பிடிக்க முயற்சிக்கப்பட்டது, அவைகளைப் பாருங்கள், அந்த பெரிய,.?, ஆமைகள், தண்ணீர் ஜந்துக்கள் இன்னும் மற்றவை பிடிக்கப்பட்டன. ஆனால் எழுப்புதல் முடிவு பெற்ற உடனே அவை மறுபடியுமாக உலகத்திற்குள் சென்று விடுகின்றன. மீனானது ஏற்கனவே எடுத்து வைக்கப்படுகின்றது. நான் என்ன கூற விழைகிறேன் என்று பாருங்கள்? 228. சுவிசேஷமானது பிரசங்கிக்கப்படுகின்றது! பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற் காக, அழுதல், கதறுதல், முனகுதல் போன்றவைகளை இப்பொழுது நீங்கள் கேட்பதில்லை. அவர்கள் உள்ளே வந்து நூற்றுக் கணக்கானவர்கள் மேல் கைகளை வைக்க விரும்புகின்றனர். அவர்கள் நடனமாடி, இன்னும் இதைப் போன்று மற்ற காரியங்களைத் தொடர்ந்து செய்ய விரும்புகின்றனர். அது எல்லாம் சரியே, ஆனால் அதெல்லாம் வெறும் தன்மைகள் ஆகும். 229. கிறிஸ்து இயேசுவாகிய அந்த நபர் உண்மையானவைகளை மாத்திரம் பிறப்பித்து, கிறிஸ்து வரும் வரை அந்த நபரை பாதுகாப்பாக வைத்து இருக்கிறார். அவ்விதம் இருக்கின்றார். ஆகவே தான் இப்பொழுது அழுதல் போன்றவை இல்லை, கதவானது மூடப்படுகின்ற நிலையில் இருக்கின்றது. செய்தியானது சென்றுள்ளது, அது கடைசி முறையாகச் செல்கின்றது, சிலரை தேவனுடைய இராஜ்ஜியத்தில் இழுக்கத்தக்கதாக செல்கின்றது. கதவுகள் மூடப்படுகின்றன! பிரசங்கிக்கப்படும் போது ஆதியி.... 230. பிறகு அடுத்த காரியம் என்ன? யூதர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்படவேண்டும். எல்லா காலங்களிலும் அவர்கள் அதை துன்புறுத்தி அதை கேலி செய்தனர்; ஆகவே அவர்களுக்கு பரிசுத்த ஆவி அளிக்கப்படும்பொழுது அவர்கள் பரிசுத்த ஆவியின் அபிசேஷகத்தை பெறுகின்றனர். புறஜாதி சபை எடுத்துக் கொள்ளப்படுகின்றது. அதை மறுத்து, நீதிமானாக்கப்படுதலில் மாத்திரமே நடந்தவர்கள், அந்த வலுசர்ப்பம் (ரோம் அதிகாரம்) வெள்ளத்தை ஊற்றி, அதன் வாயிலாக கம்யூனிசத்துடன் இணைந்து, சபையை துன்பத்தில் ஆழத்தும். அவர்கள் இங்கே சரியாக படம் பிடித்து காண்பிக்கப்படுகின்றனர். 231. ஓ, சகோதரனே, அது வருவதை நாம் காண்கையில், அதன் காரணமாகத் தான் நான் தேவனிடம் "கர்த்தாவே, அந்த யூதர்களிடம் நான் செல்லட்டும். நான் அங்கே ஆப்பிரிக்காவில் ஆரம்பித்து, அங்கே உள்ள சில புறஜாதிகளிடமும், முகமதியர்க ளுடனும் பணி செய்யட்டும். நான் அங்கே இருந்து இந்தியாவிற்கு சென்று உண்மையான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை, அவருடைய அற்புதங்களுடனும், அடையாளங்களுடனும், அவருடைய ஞானஸ்தானத்தையும், பரிசுத்தாவியையும் அவர்களுக்கு காண்பிக்கட்டும்." என்று கதறுகிறேன். பிறகு நாம் எருசலேமிற்கு வரும் போது,,, 232. சகோதரன் பீலர், இதைக் குறித்துதான் நீர் கேட்டுக் கொண்டிருந்தீர். அவர்கள் எருசலேமிற்கு வரும் போது, அங்கே நின்று, "இப்பொழுது, இயேசு தாம் மரித்தோரிலிருந்து எழுந்த தேவ குமாரனானால், அவர் அன்றைக்கு ஆதியில் செய்தது போல அதே காரியத்தைக் குறித்து அவருக்குத் தெரியும், அன்றைக்குச் செய்தது போல அதே ஜீவனை இன்றைக்கு பிறப்பிக்க முடியும். அவ்வாறே அவர் செய்தாரானால் நீங்கள் அவரை உமது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்வீர்களா?" என்று கேட்டு, உயிர்த்தெழுதலின் காரியங்களையும், அவருடைய மகத்தான வல்லமையோடு தேவன் நம்மோடு இருக்கிறார் என்பதை காண்பிப்போம்.. 233.பிறகு அவர்கள் அதைச் செய்யும் போது, "என்னே, அவரை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டிருப்பவர்களே... பெத்தேகோஸ்தே நாளில் விழுந்த அதே ஆவி தான் இங்கே உங்களுக்காக இருக்கிறது" என்று கூறுங்கள். அவர்களில் ஆயிரக்கணக்கான பேர் இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். 234. சுவிசேஷமானது சரியாக அந்த நேரத்தில் யூதர்களுக்குச் செல்கின்றது. அங்கே யூதர்கள் மத்தியில் ஒரு எழுப்புதல் இருக்கும். அதனால் பத்தாயிரக் கணக்கான யூதர்கள்... 144000 பேர் தேவனுடைய இராஜ்ஜியத்தில் கொண்டு செல்லப்பட்டு, முத்தரிக்கும் தூதனால் முத்திரையிடப்படுவர். 225. அவர், கிழக்கிலிருந்து வருகின்றார் என்று நான் நம்புகின்றேன். அவர் தம்முடைய கையில் அவருடைய முத்திரையுடன் அவ்வாறே தான் நம்மிடையே இப்பொழுது வந்திருக்கிறார். பிறகு, ஓ, நான் அங்கே கூட்டிச் சேர்க்கப்பட விரும்புகிறேன். "நான் இங்கேயும், அங்கேயும் அடக்குமுறையை, துன்பத்தை அனுப்பியிருக்கிறேன், என்னால் முடிந்த வரை கடினமாக பிராயசப்பட்டு யூதர்களை விரட்டியிருக்கிறேன். அவர்கள் உள்ளே துரத்தி அடிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க ஐக்கிய நாடுகளிலுள்ள அநேக யூதர்கள் (அதிலிருந்து அவர்கள் தப்பமுடியாது) ஏற்கெனவே பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளனர். ஆனால் அங்கே பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற அங்கே நின்று கொண்டிருக்கும் 144000 பேரை நான் கொண்டு இருக்கிறேன்" 236. அங்கே, முத்திரையிடும் தூதன் அந்த 144000 பேரை முத்திரையிட ஆரம்பிக்கையில், புறஜாதி சபையின் கதவுகள் மூடப்படும், யூதர்கள் பரிசுத்த ஆவியை யூதர்களிடம் கொண்டு செல்வர். முழு உலகத்தையும் அசைக்கத் தக்கதான ஒரு எழுப்புதலை அவர்கள் கொண்டிருப்பர். அல்லேலுயா! தேவனுடைய வல்லமையானது யூதர்கள் மத்தியில் வெளிப்படும். ஓ, என்னே இனிமையானது! வ்வியூ ஓ, என்னே! 237. ஏசாயாவை நான் எடுக்கட்டும். நம்மிடையே அந்த "தேவ குமாரர்" பற்றி உள்ளது. இப்பொழுது நாம் பார்ப்போம்: இஸ்ரவேலானது.. 238. பாருங்கள் நீங்கள் அதைப் படிப்பீர்களானால், சகோதரனே. நான்... அது ஒன்று சேர்த்து எழுதப்பட்டுள்ளது, சிலவற்றை அவர் அடித்து விட்டு இருக்கிறார். நான் வேறொன்றை எடுக்கிறேன். உங்களால் முடியுமானால், தயவு செய்து (சகோதரன் நெவில் கீழ்கண்ட கேள்வியைப் படிக்கின்றார் - ஆசி) 14. “பட்டயத்தின் முடிவு” என்னும் ஏசாயாவின் கருத்து கிறிஸ்துவின் ஆயிர வருட அரசாட்சியில் நிகழப்போகும் செழிப்பை குறிக்கின்றதா, அல்லது வேறு விதமாக மனிதனால் கொண்டு வரப்படும் ஒன்று (அநேக நவீன மதங்கள் நமக்கு கூறுவது போன்று! 239. எனது அருமை சகோதரன் அல்லது சகோதரி, நீங்கள் யாராயிருந்தாலும் சரி... இது ஒரு மனிதனின் கையெழுத்து போல் உள்ளது. ஆனால், எப்படியாயினும், யாராயிருந்தாலும் சரி, நீங்கள் முற்றிலும் சரியாக கேட்டு இருக்கிறீர்கள்! மண்வெட்டிகள்.... அல்லது பட்டயங்களை மண்வெட்டிகளாக அடிப்பார்கள். அது ஆயிர வருட அரசாட்சியை கொண்டு வரும். இந்த நவீன மதக்கோட்பாட்டுக் குழுக்கள் எங்கும் சென்று மக்களுக்கு அறிவை போதித்து தேவனுடைய இராஜ்ஜியத்தில் சேர்க்க முயல்கின்றனர்... அது தேவன் தாமே இயற்கைக்கு மேம்பட்டவராய், இயற்கைக்கு மேம்பட்ட வல்லமையுடன், இயற்கைக்கு மேம்பட்டவைகளை விசுவாசித்து, இயற்கைக்கு மேம்பட்ட வல்லமையை பெற்றுக் கொள்ளும் மக்களிடம் வருவதாகும், அது தேவனுடைய பிள்ளைகளை உருவாக்கும். அல்லேலூயா! அது, இனி மேல் படித்தல், எழுதுதல், கணிதம் போன்றவையாய் இருக்காது, அது இயேசு கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுந்த வல்லமையால் தான் இருக்கும். உலகமானது இனி யுத்தத்தைக் கற்பதில்லை. 240. இன்றுள்ள ஒவ்வொரு நாடும், எந்தவொரு அதிகாரமும், ஒவ்வொரு இராஜ்ஜியமும் பிசாசின் கட்டுக்குள் இருக்கின்றது. வேதம் அவ்வாறு கூறுகின்றது. ஆகவே ஒரு நாளில் இவ்வுலகத்தின் இராஜ்ஜியங்கள் நம்முடைய கர்த்தருடைய, கிறிஸ்துவினுடைய இராஜ்ஜியங்களாகி விடும், அவர் இப்பூமியில் ஆயிரம் வருடம் அரசாளுவார்; சபையை எடுத்துக்கொள்வார். வேதத்தை வாசிக்கும் என் அருமையானவனே, அது முற்றிலும் சரி, 241. அந்த 144000 பேர் ஊழியக்காரர் ஆவர். மனிதன் எண்ணக்கூடாத திரளான கூட்டம்., ''ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாக ஜனங்கள்'', அவர்கள் புறஜாதிகள் ஆவர். 242. இன்னும் ஒரு நிமிடம், ஒரே ஒரு சிறு காரியம் இருக்கிறது. என்னால் முடியவில்லை. இன்னும் சில நிமிடங்களில் சபை ஜெபத்தை நான் வைப்பேன். இங்கே கவனியுங்கள், இப்பொழுது இது மிக முக்கியமான ஒன்று என்று நான் நினைக்கிறேன். நான் வியாதியஸ்தருக்காக ஜெபிக்க வேண்டும், நாம் துரிதப்படுவோம். நான் பகுத்தறிதலை வைப்பதற்கு பதிலாக, நேராக சென்று விடுவோம். நான் உங்களை ஒன்று கேட்கவிரும்புகிறேன். வேறென்று இருக்கின்றதா? நான் இதை மாத்திரம் எடுத்துக் கொண்டு அடுத்த ஞாயிறன்று பார்க்கலாம் என்று நான் யூகிக்கிறேன். 243. நண்பர்களே! இதன் பேரில் கவனம் செலுத்துங்கள், இது எவ்வளவு அழகாயுள்ளது! கவனியுங்கள்! (இந்த கேள்வியைக் கேட்ட நபர் யாராயினும்) இதை நீங்கள் கூர்ந்து கவனிக்க நான் விரும்புகிறேன், அந்த 144000 பேர், பணி செய்கின்ற ஊழியக்காரர் ஆவர். நீங்கள் சரியாக நிலைப்படுத்தி பார்த்து இருப்பீர்களானால், பழைய வேத வசனத்தில்... 224. நிழற்பட நேர்படிவத்தை (positive - பாஸிடிவ்) நீங்கள் பார்க்க வேண்டும் என்றால் அதன் நிழலை (Shadow) எப்போதும் கவனியுங்கள். அது சரி. அதைக் கூர்ந்து கவனித்து, அது என்னவென்பதைப் பாருங்கள். இப்பொழுது, சிலுவை முதற்கொண்டு அது எதிர்மாறாக இருக்கின்றது, நீங்கள் நிழல் (Shadow) என்றால் என்ன என்பதை காண வேண்டுமென்றால் நிழற்பட நேர்படிவத்தை, பாஸிடிவ்வை நீங்கள் காணவேண்டும். அங்கே சிலுவை எதிர் நோக்கி சார்ந்திருக்க வேண்டியிருந்தது. சிலுவை எவ்விதம் இருக்கும் என்பதைக் காண நாம் திரும்பிப் பார்த்து நிழலைக் காண வேண்டி இருந்தது; இப்பொழுது அந்த நிழல் என்ன என்பதைக் காண நாம் சிலுவையிலிருந்து பார்க்க வேண்டியதாய் உள்ளது. பாருங்கள்? கிறிஸ்து அந்த நாளிலே பூமியில் இருந்த போது என்னவாயிருந்தார் என்றும், இப்பொழுது அவர் என்னவாயிருக்கிறார் என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும். இது தான் அவருடைய நிழல். நான் என்ன கூற முயல்கிறேன் என்பதை புரிந்து கொள்கிறீர்களா? துவக்கத்தில் அது எப்படிப் பட்டதாயிருந்தது என்பதை நான் விவரித்ததை நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது, நான் அங்கேயிருந்து பார்ப்பேனானால், இது எப்படிப்பட்டதாய் இருக்கும், சிலுவை என்பது என்ன என்பதை அறிந்து கொள்ளத் தான் அந்த நிழல் என்ன என்பதை பார்க்க வேண்டும். 245. இப்பொழுது ஒரு நாளிலே இஸ்ரவேலிலே பாவம் இருந்தது, அங்கே ஒரு மனிதன் இருந்தான்... அது லேவி என்னும் பேரையுடைய கோத்திரம். அவர்கள் தங்கள் பட்டயங்களை உருவி மோசேயுடன் பாளையத்திற்கு சென்று பாவமாய் இருந்த எல்லாவற்றையும் அழித்து போட்டார்கள். அது சரி தானே? தேவன் பார்த்து, ''நீங்கள் எனக்காக நின்று இதைச் செய்தபடியால் உங்களுடைய... எல்லாரும் உங்களுக்கு பணிவிடை செய்வார்கள். நீங்கள் நேராக சென்று ஆலயத்தில் ஆசாரியர்களாய் இருங்கள். நீங்கள் ஆலயத்திலேயே இருங்கள், மற்றவர் வேலை செய்து பத்தில் ஒரு பங்கை கொண்டு வந்து உங்களைப் பராமரித்து பார்த்துக் கொள்வார்கள்" என்று கூறினார். அது சரியல்லவா? 246. ஓ, அல்லேலூயா! அந்த ஆலயம் என்னவென்பதை நீங்கள் காண்பீர்களானால், அந்த லேவியர், மணவாட்டி, யாவர். இப்பொழுது, பாவமானது ஒவ்வொரு தருணத்திலும் எழும்புகையில் லேவியர் தங்கள் பட்டயங்களை உருவுகிறார்கள். பரிசுத்த ஆவியினால் பிறந்த மணவாட்டி அங்கே நின்று கொண்டு, "பாஸிடிவ்வில் உள்ள' (positive) இயேசு கிறிஸ்து தான், 'நெகடிவ்விலும் இருக்கின்றார். அதே அவ்வாறு தான். பாவம் இன்னுமாக பாவம் தான், அந்த காரியங்களைச் செய்வது தவறு!'' என்று கூறுகிறார். அதுசரி, அவர்கள் பட்டயத்துடன் நின்று கொண்டு இருக்கின்றனர். 247. தேவன் "என் பிதாவினால் ஆசிர்வதிக்கப்பட்டவர்களே, உள்ளே வாருங்கள்'' என்று கூறுகிறார். அது தான் மணவாட்டி. 248. அங்கே ஊழியக்காரர் உள்ளனர், அந்த ஊழியக்காரர் எங்கே பாளயமிறங்கி இருக்கிறார்கள் என்று பாருங்கள். இந்த பக்கம் பன்னிரண்டு.. -இல்லை, இந்த பக்கமாக நான்கு, அந்த பக்கமாக நான்கு, அந்த பக்கம் நான்கு, அந்த பக்கம் நான்கு; பன்னிரண்டு கோத்திரங்கள். பன்னிரண்டு கோத்திரங்கள் தான் அந்த 144000 பேர். வெளிப்படுத்தின விசேஷத்தில் பாருங்கள். அந்த நகரத்திற்கு பன்னிரண்டு அஸ்திபாரங்கள் இருப்பதை அவன் காண்கிறான். ஒவ்வொரு வாசலின் மேலும் ஒரு அப்போஸ்தலனுடைய பெயர் எழுதப்பட்டுள்ளது, பன்னிரண்டு வாசல்கள், அதைச் சுற்றி பன்னிரண்டு கோத்திரங்கள் (அல்லேலூயா!) உட்கார்ந்து கொண்டிருக்கின்றன. 249. அதன் உள்ளே மீட்கப்பட்டவர்கள் இருந்தனர். அல்லேலூயா! கறுப்பு, வெள்ளை, மஞ்சள், பழுப்பு, மற்றும் அவருடைய ரத்தத்தால் கழுவப்பட்ட எல்லாரும் அவருடைய ஊழியக்காரர்களாய் இருப்பர், அவர்கள் அவரோடு இருப்பார்கள் என்று அவர் கூறியிருக்கிறார். அவர்கள்... சூரியன் அவர்கள் மீது இனி விழுவதுல்லை, அவர்கள் இனி பசியோ, தாகமோ அடைவதில்லை, முடிவேயில்லாத யுகத்தில் கிறிஸ்துவுடனே கூட அவர்கள் என்றென்றுமாக அரசாளுவார்கள்: இராஜாவும், ராணியாகிய அவர்களும் என்றென்றுமாக அரசாளுவார்கள்! 250. கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. ஆமென். நான் இவைகளை வைத்துக் கொள்ளுகிறேன், கர்த்தருக்கு சித்தமானால் ஒரு வேளை, இன்றிரவு இவைகளை என்னுடன் கொண்டு வந்து அவைகளுக்கு பதில் அளிப்பேன் அல்லது எப்பொழுதாகிலும் சகோதரனே... நாம் ஒன்றாகக் கூடிப் பேசுவோம். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக, உங்களுடைய முழு இருதயத்துடன் அவரை நேசியுங்கள். ஓ, நான் அவரைக் காண விரும்புகிறேன், அவருடைய முகத்தைக் காண விரும்புகிறேன், அவருடைய இரட்சிப்பின் கிருபையின் மூலம் அங்கே என்றென்றுமாக ஜீவிப்பதற்கு; மகிமையின் வீதிகளிலே என்னுடைய குரலை நான் உயர்த்தட்டும்; கவலைகளெல்லாம் கடந்து, வீடு வந்து, என்றென்றுமாக களிகூற (ஓ, என்னே ) இந்த பிரதேசத்திலே, பாடிக் கொண்டே நான் செல்கையில், ஆத்துமாக்களை கல்வாரியை, செந்நிற வெள்ளத்தை நோக்கி காண்பித்து, (சபையை நோக்கி அல்ல, கல்வாரியை நோக்கி) 251. அங்கே தான் நாம் குறித்துக் காண்பிக்கின்றோம்; வேத சாஸ்திரத்தை நோக்கி அல்ல, ஆனால் இயேசு கிறிஸ்துவினுடைய செந்நிற வெள்ளத்தை நோக்கி. "இரத்தத்தில் தான் ஜீவன் உள்ளது" ஆகவே நம்முடைய ஜீவனாயும், இப்பொழுது நமக்குள்ளே வாசம் செய்யும் தேவனுடைய இரத்தம் அவரே. பிணைக்கும், பிணைப்பு சிறந்ததாய் இருப்பதாக! 252. நாம் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கப் போகையில், ஒரு விசேஷமான ஒரு பாடலை நான் விரும்புகிறேன். சகோதரி கெர்ட்டி, அவருடைய மகள், அவர்களுக்கு விருப்பமானால், இங்கே அவர்கள் வர நான் விரும்புகிறேன். நம்பிடுவாய், இது தான் உண்மையான பழைய பாடல், நீங்கள் அதை எனக்காக பாடவேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் அந்த கதவிற்குள் வரும் போதும், எல்லா நாடுகளிலும் இந்த பாடல் என்னைப் பின் தொடர்ந்து வருகின்றது என்பதை நினைவில் கொள்கிறேன். அவர்கள் அதைப் பாட நான் - நான் விரும்புகிறேன், சகோதரி கொட்டி அதை முதன் முறையாக (இசைக் கருவியால்) வாசித்தபோது, அதை நான் முதன் முறையாக கேட்டேன். பால் ரேடர் என்ற எனக்கு அறிமுகமான நபர் இதை எழுதினார். ஆகவே, தாம் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கச்செல்லும் முன், தேவனுடைய ஆசீர்வாதங்கள் இந்த வியாதியுள்ள மக்களின் மேல் அமர்ந்திருக்க, இந்தப் பாடலை அவர்கள் பாட நான் விரும்புகிறேன். 253. சகோ, நெவில் அவர்களே. நிறைய நேரத்தை தாங்கள் எடுத்துக் கொண்டதற் காக எங்களை மன்னியுங்கள். தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக. நீங்கள் கேள்விகளை விரும்புகிறீர்களா? நான் விரும்புகிறேன். ஓ, அவைகள் மிகவும் அருமையானவைகள், அவைகள் அருமையானவைகள், வேறு சில கேள்விகளும் இருக்கின்றன. உண்மையாகவே அவைகளில் சில இன்னும் முழுமையாக படித்துப் பார்க்கப்படவில்லை, இன்னுமாக, ஓ, படித்துப் பார்க்க நிறைய உள்ளன. ஆனால் கர்த்தர் ஆசிர்வதிப்பாராக. 254. இப்பொழுது எல்லாரும் உங்கள் மனதை கிறிஸ்துவின் மீது செலுத்துங்கள், கேள்விகளிலிருந்து தெய்வீக சுகமளித்தலுக்கு நாம் மாறுவோம். இங்கே ஜெபம் செய்யப்பட எத்தனைப் பேர் உள்ளீர்கள்? ஜெபிக்கப்பட விரும்புவோரின் கரங்களை நான் காணட்டும். அது சரி, நம்முடைய சகோதரிகள் இந்த அருமையான பாடலை பாடி முடித்தவுடன், நாம் அவர்களைக் கொண்டு வந்து ஜெபிப்போம். அவர்கள் ஆயத்தமாகையில், இப்பொழுது உங்கள் முன் இருப்பது தான் அந்த வாக்குத்தத்தம், இது அவருடைய வேதாகமம். (சகோதரி கெர்ட்டியும் அவர்களுடைய மகளும் நம்பிடுவாய் என்று பாடுகிறார்கள் - ஆசி) நம்பிடுவாய், நம்பி..... 255. இப்பொழுது வியாதியஸ்தர்கள், உங்களால் முடியுமானால், இப்பொழுது பீடத்தை சுற்றி நில்லுங்கள். யாவும் கைகூடும், நம்பிடுவாய்; நம்பிடுவாய், நம்பிடுவாய் யாவும் கைகூடும், நம்பிடுவாய். 256. (சகோ. பிரான்ஹாம் நம்பிடுவாய் என்று வாய்க்குள்ளாகவே இசைக்கிறார் - ஆசி.) இப்பொழுது, பரலோகப் பிதாவே, இந்த வேத வசனத்திற்காகவும், "நம்பிடுவாய்” என்ற பாடலுக்காகவும் இன்றைக்கு நாங்கள் மிகவும் நன்றி உள்ளவர்களாய் இருக்கிறோம். சந்திரரோகத்தைக் கொண்டிருந்த பையனின் தந்தையிடம் "நம்பிடுவாய், ஏனெனில் யாவும் கைகூடும்” என்று நீர் கூறுவதை எங்களால் கேட்க முடிகின்றது. 257. இப்பொழுது தேவனே, பீடத்தண்டை ஜெபிக்கப்படுவதற்காக இம்மக்கள் வருகையில் நெகடிவ்வாகிய நாங்கள், வெறும் நெகடிவாகிய நாங்கள்; அழியாமையின் ஆவியாகிய பாஸிடிவ் எங்களைச் சுற்றிலும் உள்ளது, அது ஒரு போதும் மரிப்பதில்லை என்று நாங்கள் ஜெபிக்கிறோம். அது காலாகாலங்களாக இருக்கும். ஒரே ஒரு வழி தான் உண்டு பிதாவே, அது உம்மை அவர்கள் மகிமைப்படுத்துவதேயாகும், என்று எங்கள் உடன் மானிடரான அவர்களுக்கு உதவ, அபிஷேகிக்கப்பட்ட ஊழியனாக இப்பொழுது நாங்கள் செல்கின்றோம். இப்பொழுது இந்த காலையில் வியாதியால் அவதியுற்று பீடத்தை சுற்றி நிற்பவர்களுக்கு பரிசுத்த ஆவியானவர் தாமே ஒவ்வொருவருக்கும் சுகத்தை அளிப்பாராக. 258. சற்று முன் சகோதரிகள் "பயப்படாதே, சிறு மந்தையே" என்று பாடியவாறு, உம்முடைய சிறு மந்தையாகிய எங்களுக்கு, கர்த்தாவே, அவ்வாறே உள்ளவர்களுக்கு இராஜ்ஜியத்தை அருளுவது உம்முடைய நல்ல சித்தம் என்பதை நாங்கள் அறிவோம். நீர் எப்போதும் எங்கள் அருகாமையில் இருக்கிறீர் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம், "எங்கே இரண்டு அல்லது மூன்று பேர் என்னுடைய நாமத்தினாலே கூடியிருப்பார்களோ, நான் அவர்கள் மத்தியில் இருப்பேன். அவர்கள் கேட்பது எதுவோ, அதை நான் அவர்களுக்கு அளிப்பேன்" என்று கூறியிருக்கிறீர். 259. ஒருபோதும் தவறாத தேவனுடைய வார்த்தையின்படி இப்பொழுது, கர்த்தாவே ஒவ்வொருவருக்கும் சுகத்தை அருளும். அவர்கள் இங்கே நின்று, காத்து இருக்கின்றனர். நாங்கள் அவர்களை எண்ணெயினால் அபிஷேகித்து, அவர்கள் மீது கரங்களை வைத்து விடுதலைக்காக கேட்க, நாங்கள் செல்கையில், ஒவ்வொருவரும் தங்கள் ஆசனங்களுக்கு, தங்கள் வீடுகளுக்கு உம்மை துதித்துக் கொண்டு திரும்பி (பூரண சுகமடைந்தவர்களாக, இயல்பு நிலையில் உள்ளவர்களாக) சென்று, கர்த்தாவே மறுபடியும் இன்றிரவு திரும்பி வந்து, ஆராதனையில் தாங்கள் சுகமடைந்ததற்காக உம்மைத் துதித்து, தேவனுக்கு மகிமையை செலுத்தட்டும். கர்த்தாவே அதை அருளும். நாம் நமது தலைகளை தாழ்த்துகையில்: 260. சகோதரன். நெவில், உமக்கு விருப்பமானால் என்னுடன் வாருங்கள். சகோ. பிளீமேன், சகோ... மூப்பர், அல்லது இங்கே யாராவது, சகோ. காக்ஸ், நீங்கள் எல்லாரும் வந்து எனக்கு உதவ நான் விரும்புகிறேன். இந்த நேரத்திலே சபையின் எல்லா மூப்பர்களையும் நான் அழைக்கின்றேன். 261. நான் அவர்களுக்காக ஜெபிக்கையில், நீங்கள் விரும்பினால் அவர்களுக்கு வந்து உதவி செய்யலாம். இங்கே உள்ள எல்லாரும் உத்தமமாக இருக்க நான் விரும்புகிறேன். நாங்கள் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கையில், நீங்களும் எங்களுடன் சேர்ந்து ஜெபிக்க நான் விரும்புகிறேன். 262. சிறிது நேரத்திற்கு முன்பு மண்டபத்தை விட்டு வெளியே சென்ற, இரத்த வெளியேற்ற நோயை (hemorrhage) உடைய, ஒரு சிறுவன் அங்கே பின்புறம் உட்கார்ந்திருப்பதை இப்பொழுது நான் காண்கிறேன். கர்த்தராகிய இயேசு இப்பொழுது அற்புதமாக அந்த இரத்தப்பெருக்கை நிறுத்தினார். பாருங்கள். அவருடைய இரக்கம் துதிக்கப்படுவதாக, அவருடைய நாமம் போற்றப்படுவதாக. கடந்த சில நாட்களாக எத்தனைப் பேர் சுகமடைந்துள்ளதைப் பாருங்கள்! 263. அப்போஸ்தலர் நாட்களில் இருந்த அதே கர்த்தராகிய இயேசு சரியாக இப்பொழுது இங்கிருக்கிறார் என்பதை நினைத்துப் பாருங்கள். அது புறஜாதிகளின் முடிவை ஆரம்பித்தலாகும். இயற்கைக்கு மேம்பட்ட விசுவாசிகளின் மத்தியில் ஒரு பெரிய அசைவு சென்று கொண்டிருக்கிறது, ஏனென்றால் தேவன் இங்கிருக்கிறார் என்பதை நாம் விசுவாசிக்கிறோம். 264. உங்களுடைய மகிமைப்படுத்தப்பட்ட சரீரம் சரியாக இப்பொழுது இங்கே கூடாரத்தில் இருக்கின்றது, என்பதை எண்ணிப் பாருங்கள், பரிசுத்த ஆவியின் பிரசன்னம் தான் உங்களுடைய மகிமைப்படுத்தப்பட்ட நிலையாக இருக்கின்றது. நீங்கள் சரியாக இப்பொழுது கிறிஸ்துவிற்குள் மகிமைப்படுத்தப்பட்டுள்ளீர்கள். "எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்''. ஆகவே உங்களுடைய சொந்த மகிமைப்படுத்தப்பட்ட சரீரம், கிறிஸ்து இயேசுவிற்குள்ளாக இப்பொழுது சரியாக உங்கள் அருகிலேயே இப்பொழுது உள்ளது, அது எப்படி ஒரு பாட்டரி செல்லிற்குள் (battery) சக்தி செல்கின்றதோ அதே போன்று உங்களுக்கு வல்லமை அளிக்க அது இருக்கின்றது. பரிசுத்த ஆவி உங்களுக்குள் இருக்கின்றது. உங்களுடைய சரீரத்திற்கு வலிமையை அளிக்க அது இருக்கின்றது, உங்களில் இருக்கின்ற வியாதியிலிருந்து உங்களை சுகப்படுத்தி உங்களை நலமுள்ளவர்களாய் இருக்கச் செய்ய அது இருக்கின்றது, 265. இப்பொழுது, சபை விரும்புமானால், நம்முடைய சகோதரிகளுடன் சேர்ந்து அந்த பாடலை மறுபடியும் பாட நான் விரும்புகிறேன். இப்பொழுது, பீடத்தண்டை உள்ள ஒவ்வொருவரும்.... 266. இப்பொழுது, நண்பர்களே, நான் ஒரு ஏமாற்றுக்காரனாய் இருப்பேன் ஆனால், அதன் காரணத்தை நான் அறியேன். என் முழு இருதயத்துடன் நான் ஒரு கிறிஸ்தவனாக இருந்து, மக்களுக்கு உதவ முயற்சிக்கிறேன். தேவனுடைய பிள்ளைகளாகிய உங்களுக்கு நான் உதவ முற்படுகின்றேன். நான் என் பரலோகப் பிதாவை நேசிப்பேனானால், அவருடைய பிள்ளைகளாகிய உங்களையும் நான் நேசிக்கிறேன். அப்படியில்லையெனில், நான் உங்களை ஏமாற்றுவேனானால், நான் தேவனை ஏமாற்ற முனைந்து உள்ளேன் என்று அர்த்தம், நீங்கள் அவருடைய பிள்ளைகள்; தேவனை யாருமே ஏமாற்ற முடியாது. நான் உங்களுக்கு உதவிடவே முயற்சிக்கின்றேன். 267. அதன் காரணமாகத் தான் தேவன் என்னுடைய முயற்சிகளை ஆசிர்வதிக் கின்றார். ஒருவேளை அவர்கள் மிகவும் ஏழைகளாக இருக்கலாம், அவர்களில் சிலரைக் குறித்து நான் வெட்கப்படுகிறேன். நான் அவர்களைக் குறித்து வெட்கப்பட்டு என்னுடைய முயற்சிகளுக்காக மன்னிப்பு கோருகிறேன் என்பதை தேவன் அறிவார். ஆனால் தேவனுடைய இராஜ்ஜியத்திற்காகவும், அவருடைய பிள்ளைகளாகிய உங்களுக்கும் உதவத்தான் நான் எல்லாவற்றையும் செய்கிறேன். இங்கே சரியாக மேடையின் மீது இயேசுவை இக்காலை வேளையில் உங்களுடைய சுகம் அளிப்பவராக ஏற்றுக்கொள்ளுங்கள் உங்களுடைய ஆசனங்களுக்கும் உங்களுடைய வீட்டிற்கும் நலமுள்ளவர்களாக, சுகமடைந்தவர்களாக திரும்பிச்செல்வீர்கள். 268. இப்பொழுது, இங்கே நூற்றுக்கணக்கானவர்களையும், உலகெங்கிலும் ஆயிரமாயிரம் பேர்களையும் அவர் சுகமாக்குகிறார் என்றால், உங்களை சுகமாக்க அவரால் முடியாதா? விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள். அது சரி, சகோதரிகளே, சகோ, நெவில், நீங்கள் வந்து அவர்களை அபிஷேகிக்க நான் விரும்புகிறேன். (சகோ, பிரான்ஹாம் மற்றும் சகோதரர்கள் வியாதியஸ் தருக்காக ஜெபிக்கிறார்கள். சகோதரி கொட்டி, அவர்களுடைய மகள் "நம்பிடுவாய்” என்ற பாடலைப் பாடுகின்றனர் - ஆசி) 269. (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி)... அல்லது சபை, அல்லவெனில், கிறிஸ்துவினுடைய மணவாட்டி. பாருங்கள் அவர் ஏழு பொன் குத்து விளக்குகளின் மத்தியில் நின்று கொண்டிருக்கிறார், அவர் பாதம் வெண்கலத்தால் செய்யப்பட்டு இருந்தது, வெண்கலம் உலகத்திலுள்ள சபையின் தெய்வீக நியாயத்தீர்ப்புக்கு அடையாளமாய் இருக்கின்றது. பாருங்கள், தெய்வீக நியாயத்தீர்ப்பு; அந்த வெண்கல சர்ப்பம், அதைக் குறித்து பேசுகின்றது. இப்பொழுது கவனியுங்கள், அது கம்பத்தின் மீது உயர்த்தப்பட்டது, அது சிலுவைக்கு அடையாளமாக இருக்கின்றது. இப்பொழுது, மூன்று காரியங்கள். 270. இப்பொழுது, கவனியுங்கள். அது என்ன காரணத்திற்காக உயர்த்தப்பட்டது? அவர்கள் பாம்பு... தங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்படைந்து, பாம்புக்கடியிலிருந்து குணமடைவதற்காகத் தான் அது உயர்த்தப்பட்டது. அது சரியல்லவா? யார் அதை நோக்கிப்பார்த்தார்களோ, அவர்கள் பிழைத்துக்கொண்டார்கள்; பார்க்க மறுத்தவர்கள், மரித்தார்கள். இப்பொழுது, தெய்வீக சுகமளித்தலை நீங்கள் கையாளாவிட்டால், பாவத்துடன் நீங்கள் எந்த வகையிலும், எந்த வழியிலும் எதிர்த்து செயல்பட முடியாது. உங்களால் முடியாது! தெய்வீக சுகமளித்தல் இல்லாமல் சுவிசேஷத்தை பிரசங்கிக்க வழியே கிடையாது. உங்களால் அது கூடாது. அது சரி. 271. இப்பொழுது, இங்கே பாருங்கள், இங்கே ஒரு மனிதன் இருந்து, அவன் இங்கே நின்று கொண்டு, என்னைப் போலவே அவன் பலமாக தன் கைமுட்டியால் பலமாகத் தட்டுவானானால், (பிரசங்க பீடத்தை தட்டுவதைக் குறித்து சகோ, பிரான்ஹாம் கூறுகின்றார்- ஆசி) என்று வைத்துக் கொள்வோம். நல்லது, இப்போழுது அந்த மனிதன் தன் கைமுட்டியினால் தட்டுவதை நிறுத்த வேண்டும் என்றால், அவனுடைய கையை வெட்டி விடத் தேவை இல்லை. பாருங்கள். அல்லது ஒரு வேளை அவன் என்னைத் தன் காலால் உதைத்துக் கொண்டிருக்கின்றான் என்றால், அவனுடைய காலை வெட்டி எடுப்பதில் எவ்விதப் பியோஜனமும் இல்லை. இப்பொழுது, செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம் என்னவென்றால், அந்த மனிதன் தன் தலை முதற்கொண்டு கொல்லப்படவேண்டும். அது சரிதானே? நீ தலையைக் கொல்வாயானால், நீ, கை, கால், மற்றும் முழு சரீரத்தையும் கொன்று விட்டிருப்பாய். அது சரிதானே? நீ தலை முதற்கொண்டு கொல்வாயானால்! 272. நல்லது, நாம் இந்த காலையில் இங்கே இருப்பதின் தலையாய காரணம் என்ன? இதன் எல்லாவற்றிற்கும் தலையாய காரணம் யாது? இந்த வியாதி, பாவம், வெட்கக்கேட்டை எது பிறப்பித்தது? பாவம் அதைப் பிறப்பித்தது. 273. பாருங்கள், உங்களிடம் பாவம் என்ற ஒன்று இருக்கும் முன்னர் .... வியாதி அதன் தன்மையாகும் அல்லது பாவத்தைத் தொடர்கின்ற ஏதோ ஒன்றாகும். உனக்கு.., அல்லது வேறுவிதமாகக் கூறுவோமானால், அது பாவத்திலிருந்து வருகின்ற ஏதோ ஒன்று. பாருங்கள்? எவ்வித பாவமும் இருப்பதற்கு முன்னர், அப்பொழுது வியாதியோ, கவலையோ, முதிர் வயதோ, அழுதலோ, மார்பு நோயோ, பிரிந்த வீடுகளோ, வேறெதுவுமே இல்லவே இல்லை. பாருங்கள், எல்லாம் பூரணமாக இருந்தது. நல்லது, அது வரக்காரணம் என்ன, அது பாவம், பாவம். நல்லது, பிறகு வியாதி பாவத்தைத் தொடர்ந்தது, பிரிந்த வீடுகள், (தன்மைகள்) சீர்கேடான வாழ்க்கை, மற்ற எல்லாமும் பாவத்தைத் தொடர்ந்தது. 274. இப்பொழுது, நீ பாவத்தைக் கொல்வாயானால், அதன் தன்மைகளையும் நீ கொன்றாக வேண்டும். அப்படித்தானே? உன்னால் - உன்னால்... நீ அதை... நீ இதனுடன் வேடிக்கைக் காட்டிக்கொண்டிருக்கின்ற வரையிலும் நீ பாவத்தை எதிர் கொள்ள முடியாது, நீ இதனுடன் கோமாளித்தனம் பண்ணிக் கொண்டிருந்தால் அது பாவத்தில் முடிவடையும். பாருங்கள்? இப்பொழுது, நீ பாவத்தைக் கொன்றால், அப்பொழுது நீ முழுவதையுமே கொன்று விடுகிறாய். 275. ஆகவே இப்பொழுது - இப்பொழுது, நீ ''வியாதி" என்று கூறுவாயானால். சில சமயங்களில் நீ மிகவுமாய் வியாதியுற்று, "நான் பாவம் செய்தேனா?" என்று கூறலாம். 276. ஓ, நீ பாவம் செய்ததால் தான் என்பதினாலல்ல, ஆனால் “வியாதி வருவது. பெற்றோர்களின் அக்கிரமச் செயல் பிள்ளைகளின் மேல் வந்து, அந்த பிள்ளைகளின் பிள்ளைகள், அவர்களுடைய பிள்ளைகள், மூன்றாம் சந்ததியிலிருந்து நான்காம் சந்ததியின் மேல் வரும்" என்பதை நினைவில் கொள். அது மனித சரீரங்களை சீரழித்துக்கொண்டிருக்கிறது, பாவமானது அடுக்கப்பட்டு உயர்ந்து கொண்டு இருக்கிறது; ஒழுக்கக் கேட்டினால் ஏற்படும் வியாதியைப் போல (Venereal) ஆகையால் அது தொடர்ந்து வருகின்றதாய் இருக்கின்றது. 277. இங்கே சில காலத்திற்கு முன்பு ஒரு புகழ்பெற்ற மருத்துவரிடம் இரு சிறுமிகளைக் கொண்டு வந்தனர், அவர்கள் குருடாகிக் கொண்டே இருந்தனர், ஆகையால் அவர்கள் பரிசோதிக்கப்பட்டனர். அப்பொழுது அது ஒழுக்கக் கேட்டினால் ஏற்படும் வியாதி (Venereal) என்று கண்டு பிடிக்கப்பட்டது. அந்த சிறு பெண்கள் மிகவும் ஒழுக்கம் நிறைந்தவர்கள். சரியாக இந்தப் பட்டணத்தில் தான், அந்த இருவருக்கும் பார்வை மங்கிக் கொண்டிருந்தது. என்ன செய்வதென்று அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்களுக்கு மூக்கு கண்ணாடி கொடுக்கப்பட்டது. பிறகு அவர்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது, அது அங்கு இருந்தது. அவர்கள் சோதித்து பார்த்தபோது, அது அவர்களுடைய (அந்த இரு பெண்கள் - தமிழாக்கியோன்) முப்பாட்டனார் செய்த தவறாயிருந்தது, பாருங்கள் அங்கே தான் நீங்கள் வருகின்றீர்கள் (ஒலி நாடாவில் காலி இடம் - ஆசி)...............